புதுச்சேரி

ஐ.என்.டி.யூ.சி பொதுகுழுவில் புதுவை மாநில தலைவர் ஜி.ஆர். பாலாஜி பேசிய போது எடுத்த படம்.

ஸ்பின்கோ ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்

Published On 2023-05-17 10:20 IST   |   Update On 2023-05-17 10:20:00 IST
  • காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள், இணைப்பு தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
  • புதுவை மாநில தலைவராக ஜி.ஆர்.பாலாஜி தேர்வு செய்யப்பட்டதற்கும், புதிய நிர்வாகிகளுக்கும் பொதுக்குழு பாராட்டு தெரிவிக்கிறது.

புதுச்சேரி:

புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி, இணைப்பு தொழிற்சங்கங்களின் பொதுக்குழு கூட்டம் ஓட்டல் செண்பகாவில் நடந்தது. ஐ.என்.டி.யூ.சி தலைவர் ஜி.ஆர்.பாலாஜி தலைமை வகித்தார். கேரளா மாநில ஐ.என்.டி.யூ.சி தலைவர் சந்திரசேகரன், புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள், இணைப்பு தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்க தேசிய தலைவராக மீண்டும் சஞ்சீவரெட்டி தேர்வு செய்யப்பட்டதற்கு பொதுக்குழு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. மாநாட்டில் அகில இந்திய துணைத்தலைவராக சந்திரசேகரன், புதுவை மாநில தலைவராக ஜி.ஆர்.பாலாஜி தேர்வு செய்யப்பட்டதற்கும், புதிய நிர்வாகிகளுக்கும் பொதுக்குழு பாராட்டு தெரிவிக்கிறது.

ராகுல்காந்தி எம்.பி பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கு ஐ.என்.டி.யூ.சி கண்டனம் தெரிவிக்கிறது. பா.ஜனதா அரசை தூக்கியெறிந்த கர்நாடக மக்களுக்கு நன்றி. புதுவை ஸ்பின்கோ ஆலையை மீண்டும் அரசே இயக்க வேண்டும். தனியார் பெயிண்ட் ஆலையில் சம்பள உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியதற்கு பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது. புதுவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும். அவரை மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News