- பி.ஆர்.டி.சி ஊழியர்கள் சங்க சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- பி.ஆர்.டி.சி தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க தலைவர் சக்திசிவம் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
புரட்சியாளர் அம்பேத்கர் புதுவை சாலை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்கம், பி.ஆர்.டி.சி ஊழியர்கள் சங்க சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.ஆர்.டி.சி தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க தலைவர் சக்திசிவம் தலைமை வகித்தார். பாஸ்கரன் வரவேற்றார். வேலையன், பக்கிரிசாமி, பூபாலன், வடிவேலு, முருகன், அருள்மணி முன்னிலை வகித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், அமைப்பு செயலர் தலையாரி, மகாசம்மேளனம் பிரேம தாசன், ராமச்சந்திரன், மணித்கோவிந்தராஜ் கண்டன உரையாற்றினர். தமிழ்செல்வன் நன்றி கூறினார்.
பணிநிரந்தரம் கேட்டு போராடியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட 12 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்கள், பெண் நடத்துனர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 3 ஆண்டாக வழங்கப்படாத போனஸ் வழங்க வேண்டும்.
அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். புதிய பஸ்கள் வாங்கி தொலைதூர வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.