மொபைல்ஸ்

பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த விவோ

Published On 2024-02-22 11:27 IST   |   Update On 2024-02-22 11:27:00 IST
  • புதிய விவோ ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போனில் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமானது. விவோ Y200e என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ E4 AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா. ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14 வழங்கப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை எக்ஸ்டென்டட் ரேம், 50MP பிரைமரி கேமரா, OIS, 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இகோ-ஃபைபர் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள விவோ Y200e ஸ்மார்ட்போன் எம்போஸ்டு லைன் டெக்ஸ்ச்சர் மற்றும் அழகிய கேமரா ரிங் கொண்டிருக்கிறது.

 


விவோ Y200e அம்சங்கள்:

6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ E4 AMOLED ஸ்கிரீன்

ஆக்டா கோர் ஸ்னப்டிராகன் 4 ஜென் 4 பிராசஸர்

அட்ரினோ 613 GPU

6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்

128 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14

50MP பிரைமரி கேமரா

2MP போர்டிரெயிட் கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

16MP செல்ஃபி கேமரா

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, பைவை, ப்ளூடூத் 5.1

யு.எஸ்.பி. டைப் சி

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

புதிய விவோ Y200e மாடலின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விவோ, ப்ளிப்கார்ட் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

Tags:    

Similar News