மொபைல்ஸ்

ஒன்பிளஸ் போனுக்கு ரூ. 4 ஆயிரம் Price Cut - அமேசான் அதிரடி ஆஃபர்

Published On 2024-11-29 09:15 GMT   |   Update On 2024-11-29 09:15 GMT
  • விலை குறைப்பு மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன.
  • தற்போது ரூ. 35 ஆயிரத்து 999-க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனின் விலை இந்திய சந்தையில் அதிரடியாக குறைந்துள்ளது. அமேசான் இந்தியா வலைதளத்தில் நடைபெறும் பிளாக் ஃபிரைடே சேலில் தான் இந்த விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இந்த விற்பனையில் ஒன்பிளஸ் 12R மட்டுமின்றி பல்வேறு இதர ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் விலை குறைப்பு மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ. 4 ஆயிரம் குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் ரூ. 39 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 35 ஆயிரத்து 999-க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.

விலை குறைப்பு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் பட்சத்தில் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனின் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என மாறிவிடும்.

அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 6.78 இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளே, 5500 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, IP64 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News