ஒன்பிளஸ் 13R-க்கு போட்டியாக புது ஒப்போ போன் - லீக் ஆன தகவல்
- இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
ஒப்போ நிறுவனம் மிட் ரேஞ்ச் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிளாக்ஷிப் ரக அனுபவத்தை கொடுக்கும் நோக்கில், சற்றே குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
இந்த பிரிவில் ஒப்போ நிறுவனம் K13 ப்ரோ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 13R மற்றும் ரியல்மி GT நியோ 7 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
முந்தைய ஒப்போ K12 சீரிஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், புதிய K13 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இதே பிரிவில் உருவாகும் மற்றொரு ஸ்மார்ட்போனில் ஒப்போ நிறுவனம் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஒப்போ K13 ப்ரோ ஸ்மார்ட்போன் 6500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது அதிவேக வயர்லெஸ் மற்றும் வயர்டு சார்ஜிங் வசசதியுடன் வரும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ K12 ஸ்மார்ட்போன் 5500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 100 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.