ரூ. 2,499-க்கு அறிமுகமான புது ப்ளிப் போன் மாடல்
- புதிய ஐடெல் ப்ளிப் போன் டெக்ஸ்ச்சர் பேக் பேனல் கொண்டுள்ளது.
- இந்த ப்ளிப் போன் மாடலில் யுஎஸ்பி சி சார்ஜிங் வதகி உள்ளது.
ஐடெல் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ப்ளிப் போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐடெல் ப்ளிப் ஒன் என அழைக்கப்படும் புதிய போன் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த மாடலில் பட்டன்கள் உள்ளன.
புதிய ப்ளிப் ஒன் மாடல் மெல்லிய டிசைன், பின்புறம் லெதர் பேக் மற்றும் கிளாஸ் கீபேட் வழங்கப்படுகிறது. மிகக் குறைந் எடை, ஒற்றை கையில் பயன்படுத்தும் வசதி கொண்டுள்ளது. இந்த ப்ளிப் போன் மாடலில் டெக்ஸ்ச்சர் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
அம்சங்களை பொருத்தவரை ஐடெல் ப்ளிப் ஒன் மாடலில் 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே, கிளாஸ் கீபேட், ப்ளூடூக் காலிங் வசசதி, 1200 எம்ஏஹெச் பேட்டரி, அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கப்படுகிறது. இத்துடன் 13 இந்திய மொழிகளில் மொபைலை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
இந்த மாடலில் எஃப்.எம். ரேடியோ வசதி, கிங் வாய்ஸ் அசிஸ்டண்ட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் விஜிஏ கேமரா, டூயல் சிம் வசதி, ப்ளிப் டிசைன், டெக்ஸ்ச்சர் லெதர் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஐடெல் ப்ளிப் ஒன் மாடல் லைட் புளூ, ஆரஞ்சு மற்றும் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. இந்த மொபைல் போனிற்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது.