மொபைல்ஸ்

குறைந்த விலை ஐபோன் மாடல் - லீக் ஆன வெளியீட்டு விவரம்

Published On 2024-11-13 12:36 GMT   |   Update On 2024-11-13 12:36 GMT
  • இந்த மாடல் விற்பனைக்கு வரும் என்று தகவல்.
  • ஐபோன் SE 4 மாடலில் 48MP பிரைமரி கேமரா வழங்கப்படலாம்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐபோன் SE மாடல் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. பலமுறை இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், சில முறை இந்த மாடல் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் SE 4 மாடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 2025 மார்ச் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டு அதன்பிறகு இந்த மாடல் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

புதிய ஐபோன் SE 4 மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் எல்.ஜி. இன்னோடெக் உடன் கூட்டணி அமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி எல்.ஜி. நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு கேமரா மாட்யூல் வினியோகம் செய்ய இருக்கிறது. வர்த்தக ரீதியிலான உற்பத்திக்கு முன் செய்ய வேண்டிய பரிசோதனைகளை ஆப்பிள் தற்போது மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐபோன் SE 4 மாடலில் 48MP பிரைமரி கேமரா, ஆப்பிளின் A18 சிப்செட், 3279 எம்ஏஹெச் பேட்டரி, ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் சப்போர்ட், ஃபேஸ் ஐடி, 20 வாட் வயர்டு சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News