மொபைல்ஸ்

மிரட்டும் அம்சங்களுடன் புது GT சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ரியல்மி

Published On 2024-11-26 08:58 GMT   |   Update On 2024-11-26 08:58 GMT
  • இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கிறது.
  • புதிய GT சீரிஸ் ஸ்மார்ட்போன் இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது.

ரியல்மி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட GT 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய GT 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5K 8K LTPO OLED பிளஸ் மைக்ரோ கர்வ்டு ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கிறது.

இத்துடன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 11480mm² ஐஸ் பெர்க் டூயல் விசி கூலிங் தொழில்நுட்பம் உள்ளது. இது முன்பை விட 30 சதவீதம் வரை ஸ்மார்ட்போனில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும் என்று ரியல்மி தெரிவித்துள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ், 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.


 

இன் டிஸ்ப்ளே அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் புதிய GT 7 ப்ரோ ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 7, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5800 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

ரியல்மி GT 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ஸ் ஆரஞ்சு மற்றும் கேலக்ஸி கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 65 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ரியல்மி, அமேசான் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நவம்பர் 29 ஆம் தேதி துவங்குகிறது.

Tags:    

Similar News