மொபைல்ஸ்

விரைவில் இந்தியா வரும் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன்

Published On 2023-01-20 09:39 IST   |   Update On 2023-01-20 09:39:00 IST
  • சியோமி நிறுவனத்தின் புது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
  • கடந்த ஆண்டு சியோமி 12 மாடலை தவிர்த்துவிட்டு சியோமி 12 ப்ரோ மாடல் மட்டுமே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

சியோமி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன்களை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களும் சீனா தவிர வேறு எந்த நாட்டிலும் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. மாறாக 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் (MWC) நிகழ்வில் கலந்து கொள்வதை மட்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் வைத்து சியோமி தனது சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இதோடு இரு ஸ்மார்ட்போன் மாடல்களும் சில மிக முக்கிய சான்றிதழ்களை பெற்று வருகின்றன. சமீபத்தில் சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் முறையே 2211133G மற்றும் 2210132G மாடல் நம்பர்களுடன் NBTC தாய்லாந்து சான்று பெற்றன.

 

முன்னதாக சியோமி நிறுவனம் சியோமி 12 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யாமல் ப்ரோ மாடலை மட்டுமே அறிமுகம் செய்தது. அந்த வகையில், இந்த முறையும் சியோமி 13 மாடலை தவிர்த்து சியோமி 13 ப்ரோ மாடலை மட்டுமே அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ மாடல்களின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

எனினும், சீன வேரியண்ட்களில் இருந்ததை போன்ற அம்சங்களே அதன் சர்வதேச வேரியண்ட்களிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. சியோமி 13 மாடலில் 6.36 இன்ச் FHD+ 120Hz AMOLED பேனல், ப்ரோ மாடலில் 6.73 இன்ச் QHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், LPDDR5 ரேம், FS 4.0 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

சியோமி 13 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 10MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. சியோமி 13 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP டெலிபோட்டோ சென்சார் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News