தொழில்நுட்பம்

ஒன்பிளஸ் 6 லிமிட்டெட் எடிஷன் விற்பனை தேதி அறிவிப்பு

Published On 2018-06-02 05:54 GMT   |   Update On 2018-06-02 05:54 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் லிமிட்டெட் எடிஷன் சில்க் வைட் நிற ஸ்மார்ட்போனின் விற்பனை தேதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மிரர் பிளாக், மிட்நைட் பிளாக் மற்றும் லிமிட்டெட் எடிஷன் சில்க் வைட் என மூன்று நிறங்களில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஒன்பிளஸ் 6 லிமிட்டெட் எடிஷன் சில்க் வைட் ஸ்மார்ட்போன் ஜூன் 5-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் 6 சில்க் வைட் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மிக நேர்த்தியாக பாலிஷ் செய்யப்பட்டு, தோற்றம் மற்றும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விசேஷ பியல் பவுடர் பூசப்பட்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் ஆறு வெவ்வேறு வித கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் மென்மையாகவும், வெல்லை நிற டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கிறது.



ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்:

- 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
- அட்ரினோ 630 GPU
- 8 ஜிபி ரேம் 
- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்



ஒன்பிளஸ் 6 சில்க் வைட் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கான சிறப்பு சலுகைகள்

- தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்துவோருக்கு ரூ.2,000 கேஷ்பேக்
- பிரபல வங்கிகளின் வட்டியில்லா மாத தவனை முறை வசதி
- சர்விஃபை வழங்கும் 12 மாத கால ஸ்மார்ட்போனுக்கான விபத்து காப்பீடு 
- அமேசான் பிரைம் வீடியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.250
- அமேசான் கின்டிள் இ-புக்களுக்கு ரூ.500 தள்ளுபடி
- ஐடியா சந்தாதாரர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் மற்றும் ஸ்மார்ட்போன் இன்சூரன்ஸ்
- க்ளியர்ட்ரிப் மூலம் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு ரூ.25,000 வரையிலான சலுகைகள்

ஒன்பிளஸ் 6 சில்க் வைட் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 5-ம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனினை அமேசான் மற்றும் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
Tags:    

Similar News