டென்னிஸ்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு: ஏஞ்சலிக் கெர்பர் அறிவிப்பு

Published On 2024-07-25 20:57 IST   |   Update On 2024-07-25 21:00:00 IST
  • ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • 2016-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கெர்பர் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்குகிறது.

இந்நிலையில், ஜெர்மனியைச் சேர்ந்த வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் டென்னிசில் இருந்து ஓய்வு பெற உள்ளேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, கெர்பர் வெளியிட்டுள்ள செய்தியில், பாரீஸ் 2024-ஐ ஒருபோதும் மறக்கமாட்டேன். ஏனென்றால் இது ஒரு டென்னிஸ் வீரராக எனது கடைசி தொழில்முறை போட்டியாக இருக்கும்.

இது உண்மையில் சரியான முடிவு. விளையாட்டை முழு மனதுடன் நேசிப்பதாலும், அது எனக்கு வழங்கிய நினைவுகள் மற்றும் வாய்ப்புகளுக்காகவும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது கடைசி போட்டியை முடித்தவுடன் அதைச் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இவர், தரவரிசையில் முதல் இடமும் பிடித்துள்ளார்.

ஏஞ்சலிக் கெர்பர் 2016-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News