டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்- இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் காஸ்பர் ரூட்

Published On 2023-06-10 01:24 IST   |   Update On 2023-06-10 01:24:00 IST
  • காலிறுதிச்சுற்றில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.
  • அரை இறுதிச்சுற்றில் காஸ்பர் ரூட் சுவேரேவை எதிர்கொண்டார்.

நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கான ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியின் இறுதியில், 6-1, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற ரூட், ரூனேவை வீழ்த்தி அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற அரை இறுதிச்சுற்றில் காஸ்பர் ரூட் சுவேரெவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முடிவில், 6-3, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் சுவேரேவை வீழ்த்தி ரூட் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Tags:    

Similar News