டென்னிஸ்

அங்கிதா ரெய்னா

சென்னை ஓபன் டென்னிஸ் - இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா முதல் சுற்றில் தோல்வி

Published On 2022-09-14 06:35 IST   |   Update On 2022-09-14 06:35:00 IST
  • சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்கே தோல்வி அடைந்தார்.
  • முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ஜெர்மனி வீராங்கனையிடம் தோல்வி கண்டார்.

சென்னை:

சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று ஒற்றையர் முதலாவது சுற்று போட்டிகள் நடைபெற்றன.

இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கரகோஷம், கைதட்டலுக்கு மத்தியில் ஆடிய அங்கிதா ரெய்னா, அனுபவம் வாய்ந்த தாட்ஜனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்.

முதல் செட்டில் ஒரு கேம் கூட எடுக்காத அங்கிதா 2-வது செட்டில் 5-வது கேமை வென்றது மட்டுமே ஒரே ஆறுதல். 76 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த தாட்ஜனா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் அங்கிதாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் உலக தரவரிசையில் 23-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கே, ரஷியாவின் அனஸ்டசியா கசனோவாவுடன் மோதினார். இதில் அலிசன் ரிஸ்கே 2-6, 3-6 என்ற நேர் செட்டில் பணிந்தார்.

Tags:    

Similar News