டென்னிஸ்

இகா ஸ்வியாடெக்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்

Published On 2023-06-10 21:36 IST   |   Update On 2023-06-10 21:36:00 IST
  • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
  • இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

பாரீஸ்:

நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதிச்சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், செக் வீராங்கனை கரோலினா முச்சோவாவுடன் மோதினார்.

இதில் ஸ்வியாடெக் 6-2 என்ற செட் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை முச்சோவா போராடி 7-5 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என கைப்பற்றிய இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

Tags:    

Similar News