என் மலர்
ஆஸ்திரேலியா
- கடந்த 2021-ம் ஆண்டில் தலிபான்கள் பெண்கள் கிரிக்கெட் விளையாட தடை விதித்தனர்.
- இதனால் தற்போது அவர்கள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
சிட்னி:
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கு பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்பட்டன. இதில் விளையாட்டும் அடங்கும். விளையாட்டை உயிர் மூச்சாகக் கருதிய வீராங்கனைகள் நாட்டை விட்டு வெளியேறினர்.
தற்போது அவர்கள் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஆப்கன் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலர் அங்குள்ள பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி வீராங்கனைகள் நேற்று பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் உரிமைகள் மறுக்கப்பட்ட லட்சக்கணக்கான பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக எங்கள் அணி இந்தப் போட்டியில் களம் காண்கிறது.
சொந்த நாட்டில் அனைத்தையும் இழந்த நாங்கள் இங்கு ஒன்று கூடியுள்ளது எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்த முயற்சியில் எங்களோடு துணை நிற்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்களுக்கு நன்றி. இது வெறும் அணி அல்ல. இது மாற்றத்தை முன்னோக்கியுள்ள ஒரு இயக்கம்.
இந்தப் போட்டி ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு முக்கியமானது. கல்வி, வேலை, விளையாட்டு என மறுக்கப்பட்ட பல்வேறு அடிப்படை உரிமைகள் அனைத்தும் கிடைப்பதற்கான தொடக்கப் புள்ளியாக இது இருக்கும். எங்களில் பலர் தலிபான் ஆட்சியாளர்களால் அச்சுறுத்தப்பட்டவர்கள்.
கடந்த 2021-ம் ஆண்டில் தலிபான்கள் வீடுகளில் புகுந்து எங்கள் ஜெர்சிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை எரித்தனர். இதையடுத்து, ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனையான மெல் ஜோன்ஸ் உதவியால் நாங்கள் அங்கிருந்து தப்பித்து பாகிஸ்தான் சென்று, அதன்பின் ஆஸ்திரேலியாவை அடைந்தோம் என நினைவு கூர்ந்தனர்.
ஆப்கானிஸ்தான் மகளிர் லெவன் அணி, கிரிக்கெட் வித் அவுட் பார்டர்ஸ் லெவன் அணியுடன் இன்று விளையாடி வருகிறது. இந்தப் போட்டிக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆதரவு அளித்துள்ளது.
- பிரித்வி சேகர் 6-3, 6-1 என்ற நேர் செட்கணக்கில் ஆலிவர் கிரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
- தொடரில் 2வது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரித்வி சேகர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீசும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினர்.
இந்நிலையில், காது கேளாதோருக்கு நடத்தப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் பிரான்சின் ஆலிவர் கிரேவ் உடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரித்வி சேகர் மோதினார்.
இந்த ஆட்டத்தில் பிரித்வி சேகர் 6-3, 6-1 என்ற நேர் செட்கணக்கில் ஆலிவர் கிரேவை வீழ்த்தி தொடர்ந்து 2வது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்றார்.
காது கேளாதோருக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கடந்தாண்டும் பிரித்வி சேகர் தான் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
- இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீசும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினர்.
இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான செக் நாட்டின் கேடரினா சினியாகோவா-அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் ஜோடி, லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ-தைவானின் ஹ்சீஹ் சு ஜோடியுடன் மோதியது.
இதில் சினியாகோவா ஜோடி 6-2, 6-7 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
- இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) உடன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) மோதினர்.
- கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலும் சின்னெர் சாம்பியன் பட்டம் வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வந்தது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) உடன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) மோதினர்.
இந்த ஆட்டத்தில் சின்னெர் 6-3, 7-6 (4), 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலும் உலகின் நம்பர் ஒன் வீரரான சின்னெர் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இறுதிபோட்டியில் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தினார்.
- அரையிறுதிப் போட்டியில் நம்பர் 2 வீராங்கனையை வீழ்த்தினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், பெலாரசின் அரினா சபலென்கா மோதினர்.
இதில் சபலென்காவை வீழ்த்திய மேடிசன் கீஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்காவை வீழ்த்தினார். அரையிறுதிப் போட்டியில் நம்பர் 2 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீராங்கனைகளை வீழ்த்திய முதல் வீராங்கனை மேடிசன் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய சிட்னி தண்டர் 157 ரன்கள் எடுத்து வென்றது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த சேலஞ்சர் சுற்று போட்டியில் சிட்னி தண்டர், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. ஜோர்டான் சில்க் 43 ரன்னும், துவார்ஷுயிஸ் 30 ரன்னும், ஹென்ரிக்ஸ் 29 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து இறங்கிய சிட்னி தண்டர் அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சிட்னி தண்டர் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சாம் பில்லிங்ஸ் 29 பந்தில் 42 ரன் குவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததால் ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
வரும் 27-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சிட்னி தண்டர் அணி, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியுடன் மோதுகிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-ஒலிவியா கடெகி ஜோடி, சக நாட்டின் கிம்பர்லி-ஜான் பாட்ரிக் ஜோடியுடன் மோதியது.
இதில் ஜான் பியர்ஸ்-ஒலிவியா ஜோடி 6-3, 4-6, 10-6 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
- முதலில் ஆடிய சிட்னி தண்டர்ஸ் 20 ஓவரில் 135 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் 114 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த நாக் அவுட் சுற்று போட்டியில் சிட்னி தண்டர்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மெல்போர்ன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மின்னல் காரணமாக போட்டி 19 ஓவராக குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய சிட்னி தண்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. ஆலிவர் டேவிஸ் 36 ரன்னும், மேத்யூ கைக்ஸ் 28 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து இறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 18 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிட்னி தண்டர்ஸ் அணி சேலஞ்சர்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் வென்றார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுப் போட்டிகள் இன்று நடந்தன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீராங்கனையும், போலந்தைச் சேர்ந்தவருமான இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்விடோலினா முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட மேடிசன் கீஸ் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் இகா ஸ்வியாடெக், மேடிசன் கீசுடன் மோதுகிறார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் தோல்வி அடைந்தார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடந்து வருகின்றன.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 3 வீரரும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நம்பர் 7 வீரரும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை ஜோகோவிச் 4-6 என இழந்தார். இதையடுத்து சுதாரித்து கொண்ட ஜோகோவிச் அடுத்த 3 சுற்றுகளை 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- முதலில் ஆடிய ஹோபர்ட் அணி 20 ஓவரில் 173 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய சிட்னி சிக்சர்ஸ் 161 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின.
இன்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் சிட்னி சிக்சர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. பென் மெக்டர்மார்ட் 42 ரன்னும், காலெப் ஜுவல் 40 ரன்னும், மிட்செல் ஒவன் 36 ரன்னும், டிம் டேவிட் 25 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து இறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜோர்டான் சில்க் அரை சதம் கடந்து 57 ரன்னில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குர்தீஸ் பாட்டர்சன் 48 ரன் எடுத்து அவுட்டானார். லச்சின் ஷா 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்த சிட்னி சிக்சர்ஸ் அணி 24-ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் சிட்னி தண்டர் அல்லது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியுடன் மோதுகிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தோல்வி அடைந்தார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை அனஸ்டசியா உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசவை எதிர்கொள்கிறார்.