என் மலர்
- தி.மு.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு
- முகநூலில் நமச்சந்திரசேகர் குறித்து அவதூறான தகவலை ஆரதாடிபோச்சையா பதிவு செய்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியத்தின் கனகலபெட்டா கேனா வீதியை சேர்ந்தவர் நமச்சந்திரசேகர். ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி சீனிவாச அசோக்கின் டிரைவர். இவர் கடந்த 8-ம் தேதி ஏனாம் கடற்கரையில் நண்பர் நாகேஷ்வர ராவுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அங்கு வந்த ஏனாம் பிராந்திய தி.மு.க.தலைவர் ஆரதாடி போச்சையா, நமசந்திரசேகரை ழுத்து ரூ. 50 ஆயிரம் வேண்டும். இல்லாவிட்டால், உனக்கும், வேறு நபருக்கும் நடந்த தகராறு குறித்து சமூகவலைதளத்தில் தவறாக பதிவிடுவேன் என மிரட்டினார்.
இதை நமச்சந்திரசேகர் பொருட்படுத்தவில்லை. கடந்த 12-ம் தேதி முகநூலில் நமச்சந்திரசேகர் குறித்து அவதூறான தகவலை ஆரதாடிபோச்சையா பதிவு செய்தார்.
இதுகுறித்து நமச்சந்திரசேகர் புகாரின்பேரில் ஏனாம் போலீசார் தி.மு.க நிர்வாகி மீது மிரட்டல், அவதூறு பரப்புதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- அன்பழகன் யோசனை
- மெத்தனாலை அதிக தண்ணீர் கலந்து எரிசாராயமாக விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை கலால்துறை பாராமுகமாக செயல்பட்டு வந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் தொழிற்சாலை களுக்கு பயன்படு த்தக்கூடிய மெத்தனாலை புதுவையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தியதால் 20-க்கும் மேற்பட்டோர் மரண மடைந்தனர். அ.தி.மு.க ஏற்கனவே அளித்த புகாரில் நடவடிக்கை எடுத்திருந்தல் இது போன்ற சம்பவங்களை தடுத்திருக்கலாம்.
மெழுகுவர்த்தி தயாரிக்கவும், சிரஞ்சி, சானிடைசர், இருமல் மருந்து தயாரிக்க மூலப்பொருளாக மெத்தனாலை பயன்படுத்தும் பல தொழிற்சாலைகள் தற்போது இயங்கவில்லை.
பல மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட மெத்தனாலை அதிக தண்ணீர் கலந்து எரிசாராயமாக விற்பனை செய்யப்படுகிறது.
கள்ளச்சாரா யத்தால் தமிழகத்தில் உயிரிழ ந்தவர்கள் விவகாரத்தில் புதுவையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு ள்ளனர். கள்ளச்சாராயம் தொடர்பாக கம்யூனிஸ்ட்டு, காங்கிரஸ், வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
புதுவை மாநிலத்தில் கள்ளுக்கடை, சாராயக் கடைகளை முற்றிலுமாக மூடிவிடலாம். இதனால் அரசுக்கு எந்த வருமானமும் கிடையாது. அதற்கு பதிலாக மதுபான கடைக்கு அனுமதி கொடுத்து விடலாம். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி தமிழக தி.மு.க அரசை கண்டித்து போராட்டம் நடத்த முன்வருவாரா?
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- மாணவ,மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்து கூறி ஊக்கப்படுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட தாவிது பேட்டையில் அமைந்துள்ள காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இலவச பள்ளிச் சீருடை துணியுடன் தைப்பதற்கான பணத்தையும் வழங்கும் நிகழ்ச்சியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ பங்கேற்றார்.
அவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவ,மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்து கூறி ஊக்கப்படுத்தினார்.
அவருடன் துணை செயலாளர் ஆரோக்கிய ராஜ், கிளைக்கழக செயலாளர் சந்துரு என்ற சந்திரன், பாலு ,ரகுமான், தப்பு என்ற எத்திராஜ், ஆகியோர் உடனிருந்தார்கள்.
- புதுவை முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரை சேர்ந்தவர் நாகராஜ்.
- கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் கண்பார்வை இழந்தவர்.
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரை சேர்ந்தவர் நாகராஜ். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் கண்பார்வை இழந்தவர். தற்போது அவர், சிறிய அளவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி, மகள் உள்ளனர். கடந்த 12-ந்தேதி காலையில் இவர் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.
வீட்டில் மனைவி மட்டும் தனியாக இருந்தபோது, மாரியம்மன் நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், நாகராஜின் மனைவிடம் தகராறு செய்து சென்றுள்ளார். இதனையடுத்து நாகராஜ், தனது மனைவியுடன் சென்று கடந்த 15-ந்தேதி தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், அவரது தம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தரக்குறைவாக திட்டி, கல்லால் தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து நாகராஜ், உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஸ்ரீதர், ஸ்ரீகாந்த் ஆகிய 2 பேர் மீதும் தரக்குறைவாக திட்டி தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 9-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு தையல் கூலி ஆகியவற்றை வழங்கினார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2022-23 கல்வியாண்டில் 9-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு 97மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு தையல் கூலி ஆகியவற்றை வழங்கினார். பள்ளி துணை முதல்வர் ஆஷா ராணி அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- புதுவை கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது.
- இந்த கல்லூரியில் 140 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 10-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது.
இந்த கல்லூரியில் 140 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 10-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 10 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. பலமுறை கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
சம்பளம் வழங்க வலியுறுத்தி பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இங்கு படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேராசிரியர்களுக்கு ஆதரவாக இன்று மாணவர்க ளும் போராட்டத்தில் குதித்த னர். தனியார் கல்லூரிக்கு நிகராக ரூ. 51 ஆயிரம் கட்டணம் வசூலிக்கின்றனர். அடுத்தமாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது. பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் போராட்டம் நடத்துகின்றனர்.
இதனால் பாதியளவு பாடங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இதனால் செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. கூட்டுறவுத்துறையில் இருந்து கல்வியியல் கல்லூரியை பிரித்து கல்வித்துறையின் கீழ் இணைக்க வேண்டும்.
பேராசிரியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கி வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவுவாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- புதுவை அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி வழங்கி வருகிறது.
- அனைத்து ஆசிரியர் காலி பணியிடங்க ளையும் நிரப்ப தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
புதுச்சேரி:
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறிய தாவது:-
புதுவை அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி வழங்கி வருகிறது. அனைத்து ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்ப தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல் கட்டமாக 146 பட்டதாரி ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
இதற்கான கோப்பு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதுவை, காரைக்காலில் 127 அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு மாற விண்ணப்பித்துள்ளன. சிபிஎஸ்இ அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யாமலேயே அரசு பள்ளிகள் என்பதால் 78 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
மீதமுள்ள பள்ளிகள் விண்ணப்பிக்க கால தாமதம் ஏற்பட்டதால் அனுமதி கிடைக்கவில்லை. அந்த பள்ளிகளுக்கும் அனுமதி கிடைத்துவிடும். சிபிஎஸ்இ பாடத்தி ட்டத்துக்கு மாறினாலும் சீருடையில் எந்த மாற்றமும் இருக்காது. பொது தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதற்காக பள்ளிகளை கண்காணிப்பது, ஆசிரி யர்களை கண்காணிக்க குழு அமைக்க உள்ளோம். சென்டாக் மாணவர் சேர்க்கையின்போது ஜாதி சான்றிதழ் பெற மாண வர்கள் அலைக்கழிக்கப்படு வதாக தொடர்ந்து கூறப்படு கிறது.
கடந்த காலத்தில் வாங்கிய சாதி சான்றிதழ் எண் இருந்தால்கூட போதும் என தெரி வித்துள்ளோம். ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக கொள்கை வெளியிட்டுள்ளோம். இதற்கு சிலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அவர்களையும் அழைத்து பேசி முடிவெடுக்கப்படும். பள்ளிகள் திறக்கும் முன்பே கவுன்சிலிங் நடத்தி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
கூட்டுறவு கல்வியியல் கல்லூரியை கல்வித்துறையுடன் இணைக்க முதல அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதில் நடைமுறை பிரச்சினைகள் உள்ளது. அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதன்பின் கல்லூரி கல்வித் துறைக்கு மாற்றப்படும்.
தமிழகத்தில் கள்ளச்சாராய வழக்கில் புதுவையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக புதுவை போலீசாரும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். கலால்துறையுடன் இணைந்து மாநில எல்லைகளில் சாராய நடமாட்டத்தை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.புதுவையை பொறுத்தவரை கள்ளச்சாராயம் கிடையாது.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழ் விருப்ப பாடமாக இருக்கும். மொழி ஆர்வம் உள்ளவர்கள் தமிழை எடுத்துக்கொள்வார்கள். யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. பாஜக பிரமுகர் செந்தில்குமரன் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு அரசு பரிந்துரைக்கவில்லை. என்.ஐ.ஏ. தானாகவே முன்வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் விசாரணை முடித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புதுவை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பெயர் பேட்ஜ் அணியாமல் உள்ளனர்.
- பணியில் இருக்கும் சுகாதார அதிகாரிகள், ஊழியர்களை அடையாளம் காண முடியாமல் பொதுமக்கள் திணறுகின்றனர்
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு அனைத்து சுகாதாரத்துறை அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பெயர் பேட்ஜ் அணியாமல் உள்ளனர்.
இதனால் பணியில் இருக்கும் சுகாதார அதிகாரிகள், ஊழியர்களை அடையாளம் காண முடியாமல் பொதுமக்கள் திணறுகின்றனர்.
எனவே சுகாதாரத்துறையின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளூர் மொழி, ஆங்கிலத்தில் பெயர், பதவி அடங்கிய பேட்ஜை வழங்க சுகாதாரத்துறை அலுவலக தலைவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தில் தவறாமல் பெயர் பேட்ஜ்கள் தெரியும் வகையில் அணிந்திருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை ஜூன் 15-ந் தேதிக்கு முன்பாக சுகாதா ரத்துறை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மேலும் மின் நுகர்வோர்கள் தங்களது பகுதியில் மின்தடையை குறுஞ்செய்தி மூலம் அறியலாம்.
- உரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை சுல்தான்பேட், அரசூர், வில்லியனூர், சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், சேந்தநத்தம், பரசுராமபுரம், எஸ்.எம்.வி.புரம்,வசந்த நகர், பத்மினி நகர், சாம்பவி நகர், திருக்காமேஷ்வரர் நகர், பாண்டியன் நகர், மூர்த்தி நகர், செந்தமிழ் நகர், அன்னை நகர், வில்லியனூர் சந்தை தெரு, ஒடியம்பேட்டை ஒரு பகுதி மற்றும் அதனை சார்ந்த அனைத்து பகுதிகளிலும் அகரம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை காலை 10 மணியிலிருந்து பகல் 2 மணி வரை, மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மேலும் மின் நுகர்வோர்கள் தங்களது பகுதியில் மின்தடையை குறுஞ்செய்தி மூலம் அறிந்துகொள்ள தங்களது கைபேசி எண்ணை, உரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் மின்துறையுடன் ஒத்துழை க்குமாறு கேட்டுகொள்ள ப்படுகிறார்கள்.
- திருபுவனையில் இயங்கி வந்த ஸ்பின்கோ நிறுவனம் பஞ்சு விலை உயர்வினால் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 8-ந்தேதி முதல் ஓராண்டு காலமாக இயங்கவில்லை.
- இதனால் அதில் பணிபுரிந்த சுமார் 350 தொழிலாளர்களின் குடும்பங்கள் வருவாய் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை கூட்டுறவு நூற்பாலை தேசிய தொழிலாளர்கள் சங்கம் பி.எம்.சி தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருபுவனையில் இயங்கி வந்த ஸ்பின்கோ நிறுவனம் பஞ்சு விலை உயர்வினால் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 8-ந்தேதி முதல் ஓராண்டு காலமாக இயங்கவில்லை. இதனால் அதில் பணிபுரிந்த சுமார் 350 தொழிலாளர்களின் குடும்பங்கள் வருவாய் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர்.
ஆலையை இயக்க தொழிற்சங்கங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு எவ்வித நடவடி க்கையும் எடுக்கவில்லை. கமிட்டி அமைப்பதாக கூறிய அரசு இதுவரை அமைக்கவில்லை. மேலும் ஆலையில் பணிபுரிந்த 58 வயதை பூர்த்தி அடைந்த தொழிலாளர்கள் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி அடைந்தும், தொழிலா ளர்க ளின் விண்ணப்பங்களை இ.பி.எப் துறைக்கு பரிந்துரை செய்யாமல் நிர்வாகம் உள்ளது.
இதனால் சுமார் 120 தொழிலாளர்கள் ஓய்வூதியம் நிதியை பெற முடியாமல் உள்ளனர். கூட்டுறவு நிறுவனத்தின் சார்பில் பிடித்தம் செய்து வைத்து ள்ள தொழிலாளர்களின் வைப்பு நிதியை அதிகாரிகள் திருப்பி கொடுப்பதற்கு முயற்சி செய்யாமல், தொழிலாளர்களை தவிக்க விடுகின்றனர்.
எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை இ.பி.எப். நிறுவனத்தில் இருந்து, தொழிலாளர்கள் தங்களின் பணத்தை எடுக்க அரசு உடனடியாகத் நடவடி க்கை எடுக்க வேண்டும். நன்றாக இயங்கிக் கொண்டிருந்த கூட்டுறவு நூற்பாலையை ஏதோ சில காரணங்களை காட்டி இழுத்து மூடி உள்ளனர்.
பணிபுரிந்த தொழிலாளருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை, செட்டில்மெண்ட் பணம் வழங்கப்படவில்லை, தொழிலாளர்களை ஏமாற்றும் போக்கினை நிர்வாகம் தொடர்ந்து செய்யுமானால், தொழிலா ளர்களை ஒன்று திரட்டி குடும்பத்துடன் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று அரசுக்கும், கூட்டுறவுத்துறை நிர்வாகத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- புதுவை நகர பகுதியை விழுப்புரம், திண்டிவனம், கடலூர், சென்னை சாலைகளுடன் ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி சிக்னல்கள் இணைக்கிறது.
- ராஜீவ்காந்தி சிக்னல், இந்திராகாந்தி சிக்னலை கடந்து 100 அடி சாலையை இணைக்கும் வகையில் 1 ½ கி.மீட்டர் தூர மேம்பாலத்திற்கு திட்டம் தயாரிக்கப்பட்டது.
புதுச்சேரி
புதுவை நகர பகுதியை விழுப்புரம், திண்டிவனம், கடலூர், சென்னை சாலைகளுடன் ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி சிக்னல்கள் இணைக்கிறது.
கடலூர், சென்னை, திண்டிவனம், விழுப்புரம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் சிக்னல்களில் நிற்காமல் செல்ல புதிதாக பொறுப்பேற்ற என்.ஆர்.காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கும் மேம்பாலம் ராஜீவ்காந்தி சிக்னல், இந்திராகாந்தி சிக்னலை கடந்து 100 அடி சாலையை இணைக்கும் வகையில் 1 ½ கி.மீட்டர் தூர மேம்பாலத்திற்கு திட்டம் தயாரிக்கப்பட்டது.
இந்த மேம்பாலத்துடன் திண்டிவனம், விழுப்புரம் சாலை இணைக்கப்படும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய சாலைகள் போக்குவரத்து அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அமைச்சக அதிகாரிகள் சமீபத்தில் புதுவையில் ஆய்வு செய்து அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தி முடித்தனர். இந்த நிலையில் ரூ440 கோடி மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாககொள்கை ரீதியில் மத்திய சாலை பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம் நிறுவனம் இணைந்து நடத்தும் 8 அணிகள் பங்கு பெறும் டி-10 கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
- விழாவுக்கு கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் நிறுவனர் தாமோதரன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி,:
கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம் நிறுவனம் இணைந்து நடத்தும் 8 அணிகள் பங்கு பெறும் டி-10 கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
போட்டிகள் அடுத்த மாதம் ஜுன் 5-ந் தேதி வரை சீகெம் மைதானம் 3-ல் நடைபெறுகிறது. போட்டியில் அவென்ஜ்ர்ஸ், ஈகிள்ஸ், கிங்ஸ், பேட்டிரி யாட்ஸ், ராயல்ஸ், ஸ்மாஷ்ர்ஸ், டைட்டன்ஸ், வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கு பெறறன. தொடக்க விழாவுக்கு கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் நிறுவனர் தாமோதரன் தலைமை தாங்கினார்.
போட்டிகளை கவுரவ செயலாளர் சந்திரன் தொடங்கி வைத்தார். தினமும் 3 போட்டிகள் விகிதம் மொத்தம் 57 போட்டிகள் நடைபெற உள்ளது.