search icon
என் மலர்tooltip icon
    • காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள், இணைப்பு தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
    • புதுவை மாநில தலைவராக ஜி.ஆர்.பாலாஜி தேர்வு செய்யப்பட்டதற்கும், புதிய நிர்வாகிகளுக்கும் பொதுக்குழு பாராட்டு தெரிவிக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி, இணைப்பு தொழிற்சங்கங்களின் பொதுக்குழு கூட்டம் ஓட்டல் செண்பகாவில் நடந்தது. ஐ.என்.டி.யூ.சி தலைவர் ஜி.ஆர்.பாலாஜி தலைமை வகித்தார். கேரளா மாநில ஐ.என்.டி.யூ.சி தலைவர் சந்திரசேகரன், புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள், இணைப்பு தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்க தேசிய தலைவராக மீண்டும் சஞ்சீவரெட்டி தேர்வு செய்யப்பட்டதற்கு பொதுக்குழு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. மாநாட்டில் அகில இந்திய துணைத்தலைவராக சந்திரசேகரன், புதுவை மாநில தலைவராக ஜி.ஆர்.பாலாஜி தேர்வு செய்யப்பட்டதற்கும், புதிய நிர்வாகிகளுக்கும் பொதுக்குழு பாராட்டு தெரிவிக்கிறது.

    ராகுல்காந்தி எம்.பி பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கு ஐ.என்.டி.யூ.சி கண்டனம் தெரிவிக்கிறது. பா.ஜனதா அரசை தூக்கியெறிந்த கர்நாடக மக்களுக்கு நன்றி. புதுவை ஸ்பின்கோ ஆலையை மீண்டும் அரசே இயக்க வேண்டும். தனியார் பெயிண்ட் ஆலையில் சம்பள உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியதற்கு பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது. புதுவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும். அவரை மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கொம்பாக்கம் குமரன் நகர், கோதண்டபாணி நகர், நெசவாளர் நகர், ஒட்டாம்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி.
    • தினசரி குப்பை அள்ளுதல், கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாருதல், கொசு மருந்து தௌித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

    அப்போது, வில்லியனூர் கொம்பாக்கம் வார்டுக்கு உட்பட்ட கொம்பாக்கம் குமரன் நகர், கோதண்டபாணி நகர், நெசவாளர் நகர், ஒட்டாம்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியில் தார்ச்சாலை அமைத்தல், கொம்பாக்கம்பேட் காந்தி பள்ளி வழியாக செல்லும் வாய்க்கால் சீரமைப்பது, குப்பம், குப்பம்பேட், பாப்பாஞ்சாவடி, ஒட்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் தினசரி குப்பை அள்ளுதல், கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாருதல், கொசு மருந்து தௌித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கொம்பாக்கம், குப்பம்பேட் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பொதுக்கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகர், மருத்துவ அதிகாரி துளசிராமன், நில அளவை அதிகாரி அண்ணாமலை, கொம்பாக்கம் தி.மு.க நிர்வாகிகள் கந்தசாமி, ஜெகன்மோகன், ராஜேந்திரன், கதிரவன், ஜனார்த்தனன், தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கூடப்பாக்கம் அர்ஜுனா ஹாக்கி விளையாட்டு குழு சார்பில் தேசிய அளவிலான 5.ஏ.சைட் எனப்படும் ஹாக்கி போட்டி நடந்தது.
    • ஊசுடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கார்த்திகேயன் தேசியக் கொடியேற்றி சீறுடை வழங்கி போட்டியை துவக்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    கூடப்பாக்கம் அர்ஜுனா ஹாக்கி விளையாட்டு குழு சார்பில் தேசிய அளவிலான 5.ஏ.சைட் எனப்படும் ஹாக்கி போட்டி நடந்தது.

    ஊசுடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கார்த்திகேயன் தேசியக் கொடியேற்றி சீறுடை வழங்கி போட்டியை துவக்கி வைத்தார். இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர் பாபு, கே.எம்.பி லோகையன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்தப் போட்டியில் புதுவை, பூணே, கொச்சின், சென்னை எஸ்.ஆர்.எம்அணி கொல்கத்தா, மதுரை, தர்மபுரி, ஊட்டி ஆகிய பகுதியிலிருந்து 24 அணிகள் பங்கேற்றது. 2 நாட்கள் நடந்த போட்டியில் முதல் பரிசை சென்னை எஸ்.ஆர்.எம் அணி பெற்றது.

    முதல் பரிசு வென்ற எஸ்.ஆர்.எம் அணிக்கு அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் ரூபாய் 20 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கோப்பை வழங்கி பாராட்டினார்.

    இந்த அணிக்கான சுடர் கேடையத்தை ஏ.டி.எஸ் தாமோதரன் வழங்கினார். இரண்டாம் பரிசை தர்மபுரி பாலக்கோடு அணி வென்றது. இந்த அணிக்கு பாஜக மாநில செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார் ரூ. 15,000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார். மனிதநேய மக்கள் சேவை இயக்க இளைஞர் அணி தலைவர் விநாயகம் இந்த அணிக்கு சுழற் கேடயத்தை வழங்கினார்.

    3-ம் பரிசு வென்ற புதுச்சேரி ஜெம்ஸ் ஹாக்கி கிளப் பணிக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு தொகையுடன் கோப்பையை அய்யனார் வழங்கினார் அதற்கான சுழற் கேடயத்தை திவாகர் மேனன் வழங்கினார். இந்த போட்டியில் நான்காம் பரிசு வென்ற அர்ஜுனா ஹாக்கி கிளப் கூடப்பாக்கம் அணியினருக்கு ரூபாய் 5000 ரொக்க பரிசினை ராம.சிவராஜன் வழங்கினார்.

    இந்த அணிக்கு சுழற் கேடயத்தை பிரபாகரன் வழங்கினார். இவ்விழாவில் லே பாண்டிச்சேரி ஹாக்கி சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் அன்பழகன், முன்னாள் தலைவர் ராஜசேகர், ஓஎன்ஜிசி முன்னாள் செயலர் பழனி, செந்தில் மற்றும் காக்கிசங்க நிர்வாகிகள் பங்கு பெற்றனர் பரிசிறப்பு விழாவில் அர்ஜுனாகி கிளப் தலைவர் ராமு நன்றி கூறினார். தொடர் நாயகன் விருதை எஸ்.ஆர்.எம். அணியின் வீரர் அகிலனுக்கும், தொடரில் சிறந்த தடுப்பு ஆட்டக்காரராக அர்ஜுனா ஹாக்கி கிளப்பை சேர்ந்த அருணாச்சலத்துக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூடப்பாக்கம் அர்ஜுனா ஹாக்கி கிளப் நிர்வாகிகள் பச்சையப்பன் கருணாகரன் சதீஷ் உலக பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கேரள மாநில ஐ.என்.டி.யூ.சி தலைவருமான சந்திரசேகரன் முன்னிலையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    ஐ.என்.டி.யூ.சி தலைவர் ரவிச்சந்திரன் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று காலை 9 மணிக்கு புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி தலைமை அலுவலகத்தில் திருவுருவ படத்திற்கு புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி தலைவர் ஜி.ஆர்.பாலாஜி தலைமையில், அகில இந்திய துணைத் தலைவரும், கேரள மாநில ஐ.என்.டி.யூ.சி தலைவருமான சந்திரசேகரன் முன்னிலையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

     வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள் பலர் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடந்தது. பின்னர் 12.30 மணிக்கு பாரதிதாசன் மகளிர் கல்லூரி எதிரில் ரவிச்சந்திரன் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்து.

    நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். 12.40 மணிக்கு உழவர்கரை நகராட்சி எதிரில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 1 மணிக்கு மூலக்குளம், சாலைத் தெருவில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சிகளில் ஐ.என்.டி.யூ.சி மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குடிசைத் தொழில் போல் போலி மதுபான தயாரிப்பு நடப்பதாக புகார் தெரிவித்துள்ளேன்.
    • கலால் துறையில் அதிக போலீசாரை நியமிக்க வேண்டும்

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க செயலர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து புதுவைக்கு எரிசாராயம் கடத்தப்பட்டு, சிலரின் துணையோடு போலி மதுபானம் தயாரிக்க பட்டு தமிழகத்தில் டாஸ்மாக் பாட்டிலில் சரக்கு ஏற்றப்படுகிறது. இதனால் புதுவை, தமிழக அரசுக ளுக்கும் வருமானம் இல்லை.

    இதில் தமிழக மற்றும் புதுவை அரசுகளின் கலால், போலீஸ் துறையினர் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுகிறது.

    தமிழக அரசு மட்டுமின்றி புதுவை அரசும் ஓர் காரணம். மது கடத்தல் தொடர்பாக புதுவை அரசிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. புதுவையில் இருந்து போலி மதுபானம் கடத்தலை தமிழக போலீஸ் பிடித்தாலும் புதுவை போலீஸ் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. புதுவையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குடிசைத் தொழில் போல் போலி மதுபான தயாரிப்பு நடப்பதாக புகார் தெரிவித்துள்ளேன்.

    தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் புதுவைக்கு எரிசாராயத்தை கொண்டு வரமுடியாது. 2 மாநில அதிகாரிகளும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. குற்ற வாளிகளை கலால்துறை பாதுகாக்கிறதா.? என்ற கேள்வி எழுகிறது.

    இதில் சம்பந்தப் பட்டோரின் சொத்து பறிமுதல் செய்து நிவாரண நிதியில் செலுத்த வேண்டும். கலால் துறையில் அதிக போலீசாரை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    • ராமேஸ்வரம் பகுதியில் இருந்து தனியார் பஸ் சுமார் 40 பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • இதில் பயணம் செய்த சுமார் 7 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பின்னர்

    புதுச்சேரி:

    ராமேஸ்வரம் பகுதியில் இருந்து தனியார் பஸ் சுமார் 40 பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    கடலூர் வழியாக புதுவை நோக்கி நேற்று நள்ளிரவில் வந்து கொண்டிருந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முள்ளோடை நுழைவாயில் அருகில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த சுமார் 7 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பின்னர், பஸ் முன்பக்கம் கண்ணாடி மற்றும் எஞ்சின் சேதம் அடைந்து விட்டது.

    தகவல் அறிந்தவுடன் கிருமாம்பாக்கம் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்தவர்களை மீட்டு முதலுதவி செய்து மாற்று பஸ்ஸில் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். மேலும் கிரேன் இயந்திரத்தை வரவ ழைத்து அந்த பஸ்சை சுமார் 2 மணி நேரமாக போராடி எடுத்தனர். இது சம்பந்தமாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 100 நாட்கள் வேலை உறுதி திட்ட பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று காலை தொடங்கி வைத்தார்.
    • தலைவர் மனோகரன், தர்மன், வீரபாலன், சிவா முத்துகிருஷ்ணன் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் வட்டாரம் சார்பாக மணவெளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான புதுக்குப்பம் மஞ்சனீஸ்வரர் கோவில் குளத்தை ரூ.3.76 லட்சம் மதிப்பில் ஆழப்படுத்தும் பணி, ஆண்டியார் பாளையம் பகுதியில் உள்ள அல்லிக்குட்டை வாய்க்காலை ரூ.5.74 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணி, தவளக்குப்பம் பகுதியில் உள்ள ரெட்டை குட்டை வாய்க்காலை ரூ.3.91 லட்சம் மதிப்பில் தூர் வாரி ஆழப்படுத்தும் பணி மற்றும் டி.என் பாளையம் பகுதியில் நாகப்பனுர் முதல் இரிசன் கோவில் வரை உள்ள மலட்டாறு கரையை ரூ.28.80 லட்சம் மதிப்பில் மேம்படுத்தும் பணி என மொத்தம் 42.21 லட்சம் மதிப்பிலான 100 நாட்கள் வேலை உறுதி திட்ட பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி சத்திய மூர்த்தி, ஐ.எப்.எஸ். செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரகுமரன், உதவிப்பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர் சிவஞானம் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, கிருஷ்ணமூர்த்தி, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், புதுக்குப்பம் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், ஆண்டியார்பாளையம் பகுதி ஞானசேகரன், வாழுமுனி செந்தில், மதி, டி.என் பாளையம் பகுதி என்.ஆர் காங்கிரஸ் தொகுதி தலைவர் மனோகரன், தர்மன், வீரபாலன், சிவா முத்துகிருஷ்ணன் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு லாஸ்பேட்டை ஆசிரியர் பயிற்சி மையத்தில் தொடங்கியது.
    • புதுவை, காரைக்கால் அரசு பள்ளிகளில் தமிழக அரசின் பாடத்திட்டம் பின்பற்றப்பட்டது.

     புதுச்சேரி, மே 16-

    புதுவை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு லாஸ்பேட்டை ஆசிரியர் பயிற்சி மையத்தில் தொடங்கியது.

    பயிற்சி வகுப்பை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    புதுவை, காரைக்கால் அரசு பள்ளிகளில் தமிழக அரசின் பாடத்திட்டம் பின்பற்றப்பட்டது. அரசின் முடிவின்படி 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம் நடைமுறை யில் உள்ளது. பிற வகுப்புகளையும் இத்திட்டத்தில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப் பட்டது. முதல் கட்டமாக 127 பள்ளிகளை சி.பி.எஸ்.இ. திட்டத்துக்கு மாற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். இதில் எவ்வித ஆய்வுமின்றி 78 பள்ளிகளை மாற்ற அனு மதி கிடைத்துள்ளது. பிற பள்ளிகளுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சம்பளம், கல்வித்துறை மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரத்து 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கல்வி, சுகாதாரம் சிறப்பாக இருந்தால்தான் மாநிலம் வளர்ச்சி பெறும். இந்த நிதி பயனுள்ளதாக மாற மாநில மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் சிரமப்பட்டு படிக்கும் மாண வர்களுக்கு அதிக முக்கியத்து வம் அளிக்க வேண்டும். கல்வியில் புதிய நுணுக்கங்களை பயன்படுத்தி மாணவர்களை திறமை மிக்கவர்களாக மாற்ற வேண்டும். தனியார் பள்ளிகளு டன் போட்டி போட்ட தேர்ச்சி விகிதத்தை ஆசிரியர்கள் பெற்றுத்தர வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட புத்தகம் வாங்கி நிதி ஒதுக்கி தலைமை செயலருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்டாக் புதிய கமிட்டி உருவாக்கி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் சேர்க்கை விண்ணப்பங்கள் வெளியி டப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பி.ஆர்.டி.சி ஊழியர்கள் சங்க சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பி.ஆர்.டி.சி தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க தலைவர் சக்திசிவம் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    புரட்சியாளர் அம்பேத்கர் புதுவை சாலை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்கம், பி.ஆர்.டி.சி ஊழியர்கள் சங்க சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.ஆர்.டி.சி தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க தலைவர் சக்திசிவம் தலைமை வகித்தார். பாஸ்கரன் வரவேற்றார். வேலையன், பக்கிரிசாமி, பூபாலன், வடிவேலு, முருகன், அருள்மணி முன்னிலை வகித்தனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், அமைப்பு செயலர் தலையாரி, மகாசம்மேளனம் பிரேம தாசன், ராமச்சந்திரன், மணித்கோவிந்தராஜ் கண்டன உரையாற்றினர். தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

    பணிநிரந்தரம் கேட்டு போராடியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட 12 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்கள், பெண் நடத்துனர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 3 ஆண்டாக வழங்கப்படாத போனஸ் வழங்க வேண்டும்.

    அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். புதிய பஸ்கள் வாங்கி தொலைதூர வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • கல்லூரி மாணவர் அன்பரசன் சர்வதேச பளுதூக்கு போட்டியில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
    • பொதுச் செயலாளர் சிட்டிபாபு தலைமையில் அன்பரசனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    தமிழ்நாடு மீனவர் பேரவையின் நிறுவனத் தலைவர் அன்பழகனார் ஆணைப்படி, புதுவை மாநிலம் வைத்திக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அன்பரசன் சர்வதேச பளுதூக்கு போட்டியில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    தமிழ்நாடு மீனவர் பேரவை புதுவை மாநில நிர்வாகிகள் நேரில் சென்று மாநில பொதுச் செயலாளர் சிட்டிபாபு தலைமையில் அன்பரசனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுவை மாநில தலைவர் புகழேந்தி மாணவனுக்கு தேவையான உபகரணங்கள், அரசு உதவிப் பெற்று தருவதாக உறுதியளித்தார்.

    அப்போது ஆலோசகர் புத்துப்பட்டார், துணைத்தலைவர் ஜெயவேலு, பொதுச் செயலாளர் குணசீலன், செயலாளர் சுகுமார், சரவணன் உடனிருந்தனர்.

    • கரியமாணிக்கம் பகுதியில் நெட்டப்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்.
    • பொதுமக்களிடம் ரகளையில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே உள்ள கல்மண்டபத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

    கரியமாணிக்கம் பகுதியில் நெட்டப்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்.

    கல்மண்டபம் தனியார் தொழிற்சலை அருகில் 3 வாலிபர்கள் குடித்துவிட்டு, சாலையில் செல்லும் பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளில் ஈடுப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நெட்டப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று பார்த்த போது, குடித்துவிட்டு சாலையில் செல்லும் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது.

    3 இளைஞர்களை பிடித்து விசாரித்ததில் விழுப்புரம், பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்த சசிகுமார் மகன் சரத்பாபு நல்லப்பரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் வேணுகோபால்சாமி மற்றும் ஏரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் வினோத் என்பது தெரியவந்தது.

    போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நெட்டப்பாக்கம் அருகே உள்ள பண்டசோழ நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் ஜீவானந்தம்.
    • சுற்றுலா செல்வதற்காக புறப்பட்டு சென்றதாக தெரிகின்றது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே உள்ள பண்டசோழ நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் ஜீவானந்தம். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10மணி அளவில் வாழப்பாடி முருகன் கோவிலுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றார்.

    சொக்கம்பட்டு அருகே சென்ற போது, காரை ஓரமாக நிறுத்துவதற்காக முயற்சி செய்தார்அப்போது, எதிரே உள்ள கார்மீது லேசாக உராசியதாக தெரிகின்றது. எதிரே உராசிய காரில் பண்டசோழ நல்லூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் இருந்துள்ளார். இவரும் சுற்றுலா செல்வதற்காக புறப்பட்டு சென்றதாக தெரிகின்றது.

    கார் உரசியதில் இருதரப்பிற்கும் வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் இந்த தகராறு, மோதலாக மாறியது. இந்த மோதலில் ஜீவானந்தம் தரப்பிற்கு ஆதரவதாக ஸ்ரீதர், ஸ்ரீபன், தரணி ஆகியோரும், கார்த்திக் தரப்பில் கார்த்திக் மற்றும் அவரது இரு நண்பர்கள் ஆகியோரும் மாறிமாறி கத்தி மற்றும் கல் ஆகியவற்றை கொண்டு தாக்கி கொண்டனர்.

    இதில் கார்த்திக் மற்றம் ஜீவானந்தத்திற்கு கத்தி குத்து விழுந்தது.காயம் அடைந்த அவர்கள் இருவரும் புதுவை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று, நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×