search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • விஜயதசமியை முன்னிட்டு சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
      • குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவதற்கு ஆரோக்கியமான உடல் நலன் சார்ந்த விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டம் வன்னிகோேனந்தல் கிராமத்தில் விஜயதசமியை முன்னிட்டு பகத்சிங் வித்யாலயா பள்ளியில் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கினார்

      தொடர்ந்து அவர் பேசுகையில், குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவதற்கு ஆரோக்கியமான உடல் நலன் சார்ந்த விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.கற்றல் திறனை அதிகரிக்க அதிகமான புத்தகங்களை படிக்க பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பால்ராஜ் மற்றும் சுப்பிரமணியன், முருகராஜ், தமிழ் சேவா சங்கம் காளிராஜ், ஏகலைவன் வித்யாலயா பள்ளி, பண்டாரம், ஏகலைவன் ஒன்றிய தலைவர் அந்தோணி சாமி, வன்னிகோனந்தல் ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகி முத்துராமன், அருள், ராம்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்,ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

      • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார்.
      • போட்டிகளில் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் நெல்லை, தென்காசி மாவட்ட மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டி, விளையாட்டு போட்டி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரம் நடும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

      தி.மு.க.மாநில சுற்றுச்சூழல்அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் சக்பி சுலைமான், சுற்றுச்சூழல் அணி துணை தலைவர் உசிலம்பட்டி அருணன், ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரி கல்லூரி டிரஸ்டி காவியா பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலடி அருணா லிபரல் கல்லூரி முதல்வர் முத்தமிழ் செல்வன் வரவேற்று பேசினார்.

      இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கபடி, கைப்பந்து, வாலிபால் கோக்கோ, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்து மரக்கன்றுகள் நட்டு பேசினார்.

      விழாவில் தென்காசி மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை, மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லப்பா, ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, கடையம் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் மாயவன். ஜெயக்குமார், முக்கூடல் பேரூர் செயலாளர் லெட்சு மணன், ஆழ்வார்குறிச்சி அழகேசன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கிருஷ்ண ராஜ், கீழப்பாவூர் பேரூர் முன்னாள் தலைவர் பொன் அறிவழகன், வக்கீல் சிவக்குமார் ரஞ்சித், பஞ்சு அருணாச்சலம், ஜெபராஜன், மணிகண்டன், ஆலடி அருணா லிபரல் கல்லூரி பேராசிரியர்கள், ஆலடி அருணா நர்சிங் கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரை யாளர்கள் மாணவ -மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரியில் மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற விளையாட்டு கலை இலக்கிய போட்டிகளில் தென்காசி, ஆலங்குளம், மருதம்புத்தூர், மாறாந்தை, நெட்டூர், நல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில்,சுந்தரபாண்டியபுரம், பாவூர்சத்திரம் அகரக்கட்டு, ஆவுடை யானூர், செங்கோட்டை வீரசிகாமணி, அம்பாச முத்திரம் விக்கிரமசிங்கபுரம், கல்லிடைகுறிச்சி பகுதிகளில இருந்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, கல்லூரி டிரஸ்டி காவியா பாலாஜி ஆகியோர் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

      • ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, செல்வ மோகன்தாஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
      • கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

      தென்காசி:

      தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை, மகளிர்அணி அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ்பாண்டியன் ஆகியோர் தலைமையில் பாவூர்சத்திரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

      கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட பொருளாளர் லாட சன்னியாசி, பொதுக்குழு உறுப்பினர்கள் கசமுத்து, பாண்டிய ராஜ், அண்ணா தொழிற்சங்கம் கந்தசாமிபாண்டியன், சார்பணி மாவட்ட செயலாளர்கள், காத்தவராயன், சந்திரகலா, பிரேம்குமார், கிருஷ்ணசாமி, நெல்லை முகிலன், சுப்பையா என்ற ராஜ், சிவசீதாராம், வக்கீல் சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், அமல்ராஜ், என். ஹெச்.எம்.பாண்டியன், ஜெயக்குமார், அருவேல்ராஜ், முருகேசன், சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், இருளப்பன், நகர செயலாளர்கள் சுடலை, சக்திவேல், பேரூர் செயலாளர்கள் கணேஷ் தாமோதரன், கார்த்திக்குமார், முத்துராஜன், ஜெயராமன், சுப்பிரமணியன், வில்சன், சங்கர், பூத் கமிட்டி அமைக்கும் பொறுப்பாளர்கள் பாலமுருகன், ராமசுப்பிரமணியன், சாமி ஆசாரி, பரசுராமன், வக்கீல்கள் செல்லத்துரை பாண்டியன், ரங்கராஜ், சதீஷ்குமார், சாந்தகுமார், ராமச்சந்திரன், ஜோதி முருகன், மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மப்பாண்டி, கவுன்சிலர் உமா மகேஸ்வரன் மற்றும் ராமமூர்த்தி, ஜெயபால கண்ணன், குணம் என்ற உத்தர குண பாண்டியன், ஐவராஜா, தமிழ் என்ற ராமசாமி, மணி, சுந்தர், குத்தாலிங்கம், பாலமுருகன், பாஸ்கர், சேவியர் ரஜினி, ராசு, தங்கச்சாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

      • மருத்துவர்கள் கழிவு நீர் கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ராஜா எம்.எல்.ஏ.விடம் வலியுறுத்தினர்.
      • மக்களுக்கு மருத்துவ சிகிச்சை எந்த வித குறையும் இல்லாமல் நடக்க வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சுகாதார வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் இங்கு கழிவு நீர் கால்வாய் வசதி, ஜெனரேட்டர் எந்திரம் மழையில் நனையாமல் இருக்க செட் அமைத்து தர வேண்டும், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு ராஜா எம்.எல்.ஏ. அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும், மேலும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை எந்த வித குறையும் இல்லாமல் நடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது தலைமை மருத்துவர் கிருஷ்ணவேணி மருத்துவர்கள் வேலம்மாள், பெப்சீர், நகராட்சி கமிஷனர் சபா நாயகம், சுகாதார ஆய்வாளர் மாரிசாமி, தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், ஜெயகுமார், வீரா, சங்கர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

      • பெரியகுளத்தில் 30 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடை பெற்றது.
      • கலெக்டர் ரவிசந்திரன், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் பனை விதைகளை நட்டனர்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகுளத்தில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் ஏற்பாட்டில் 30 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சி யின் தொடக்க விழா நடை பெற்றது.

      ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிசந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு பனைமரத்தின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.

      நிகழ்ச்சிக்கு நெட்டூர் ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் கணே சன், திலக ராஜ் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      விழாவில் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், முத்தையா, விவசாய சங்க தலைவர் முப்புடாதி, செயலாளர் வேலாயுதம், கணேசன், அருணாசலபுரம் இசக்கி துரை, வார்டு உறுப்பினர் கணேசன், ஊராட்சி செயலாளர் அறுமுகப் பாண்டியன், இளம் தளிர் பூ உலகை காப்போம், பொழில், நம்மாழ்வார் நடுவர் அமைப்பு தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      • பாபநாசம் அணையில் 84.80 அடி நீர் இருப்பு உள்ளது.
      • அதிகபட்சமாக சிவகிரியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது.

      நெல்லை:

      தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

      நெல்லை

      நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அணை பகுதிகளிலும், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று நாங்குநேரி, சேரன்மகாதேவி ஆகிய இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக நாங்குநேரி யில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது.

      அணை பகுதிகளில் நேற்று மழை பெய்யவில்லை. பாபநாசம் மற்றும் சேர்வ லாறு அணை பகுதிக ளுக்கு வினாடிக்கு 301 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 504 கனஅடி நீர் வெளி யேற்றப்படுகிறது.

      பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 84.80 அடி நீர் இருப்பு உள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையில் 96.62 அடி நீர் உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.65 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 48.25 அடியாகவும் உள்ளது. 52.50 அடியாக உள்ள அந்த அணை நிரம்ப இன்னும் 4 அடி நீரே தேவை. இன்னும் ஓரிரு நாட்கள் மழை பெய்தால் அந்த அணை நிரம்பிவிடும்.

      தென்காசி

      தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர் விடு முறை என்பதால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வரு கிறது. வெளி மாவட்டங் களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்துள்ளதால் அருவிக்கரை கள் நிரம்பி காணப்படுகிறது.

      மாவட்டத்தில் செங்கோட்டை, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. வானமும் மேக மூட்டத்துடன் காணப்படு வதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. அதிகபட்சமாக சிவகிரியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணை பகுதி களை பொறுத்தவரை கருப்பாநதி மற்றும் அடவி நயினார் அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக கருப்பாநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முழுவதும் விட்டு விட்டு மழை கொட்டியது.

      அந்த அணையில் 63.5 மில்லிமீட்டர் மழை கொட்டி யது. அடவிநயினாரில் 28 மில்லிமீட்டர் மழை பதிவாகி யது. 72.10 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. இதேபோல் 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது. அந்த அணை நிரம்ப இன்னும் 15 அடி நீரே தேவை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

      • திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
      • விபத்துக்குள்ளான லாரியை போலீசாரும், பொதுமக்களும் அப்புறப்படுத்தினர்.

      செங்கோட்டை:

      தென்காசி மாவட்டம் தமிழக-கேரளா எல்லை பகுதியான கோட்டைவாசல் பகுதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் தமிழகத்திற்கும், கேரளா விற்கும் சென்று வருகின்றன.

      இந்த பகுதியில் அமைந்துள்ள புளியரை எஸ் வளைவில் நீளமான தொட்டிகள் கொண்ட கனரக லாரிகள் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் சற்று தொலை விலேயே நிறுத்தப்படும். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

      அணிவகுத்த வாகனங்கள்

      இந்நிலையில் நேற்று மதியம் கேரளாவில் இருந்து தென்காசி நோக்கி வந்த கனரக லாரி ஒன்று எஸ் வளைவு பகுதியில் எதிர்பா ராதவிதமாக பள்ளத்தில் இறங்கியது. இதனால் அந்த வழியாக செல்லும் வாக னங்கள் நீண்டவரிசையில் நிறுத்தப்பட்டன.

      இதன் காரணமாக திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி செல்லும் வாகனங்க ளும், கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த வாகனங்க ளும் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியா மல் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன.

      போக்குவரத்து நெருக்கடி

      இந்நிலையில் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான லாரியை கிரேன் உதவியுடன் போலீசாரும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சேர்ந்து அப்புறப்படுத்தினர். கடும் நெருக்கடிக்கு இடை யில் துரிதமாக செயல்பட்டு லாரியை அப்புறப்படுத்திய பின்னர் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சா லையில் போக்குவரத்து சீரானது. ஏற்கனவே செங்கோட்டை முத்துச்சாமி பூங்கா மற்றும் வனத்துறை சோதனை சாவடி பகுதி களில் பாலப்பணிகள் நடை பெற்று வருகிறது.

      இதன் காரணமாகவும் அந்த சாலையில் கடுமை யான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அங்கு மாலை நேரத்தில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருப்பதால், கூடுதலாக போலீசார் நிறுத் தப்பட்டு போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.

      எனவே பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

      • தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
      • கொலை செய்யப்பட்டவர் யார் என அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

      தென்காசி:

      தென்காசி யானை படித்துறை அருகே 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

      கொலை

      இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற னர். அங்கு காவி வேட்டி அணிந்த முதியவர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் தென்காசியில் உள்ள சில கோவில்களில் யாசகம் பெற்று வந்ததவர் என்பது தெரிய வந்தது. அவரின் தலையில் மர்ம நபர் யாரோ கல்லை போட்டு கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் யார் என அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

      மேலும் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்?. அவரை யார் கொலை செய்தனர்? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      • ஆயுத பூஜையில் பொரி, பழங்கள், இனிப்புகள் வைத்து வழிபடுவார்கள்.
      • ஆப்பிள், இன்று ரூ.140 முதல் ரூ.200 வரை விற்பனையானது.

      நெல்லை:

      நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி திருவிழாவின் 9-வது நாளான நாளை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும், 10-வது நாள் விஜயதசமியும் கொண்டா டப்படுகிறது.

      இதில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையான நாளைய தினம் தொழிலாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு பொரி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். ஆயுத பூஜையில் பொரி, பழங்கள், சர்க்கரை, பழங்கள், இனிப்புகள் வைத்தும், வாழை மரக்கன்று கள் கட்டியும் பூ மாலை அணிவித்தும் பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள். கல்வியாளர்கள் தங்களது படிப்பறை, புத்தகங்களில் பூஜை செய்வார்கள்.

      நெல்லை மாவட்டத்தில் சரஸ்வதி பூஜைக்கு தேவை யான பொருட்கள் வாங்குவதற்காக இன்று சந்தைகளில் மக்கள் கூட்டம் களை கட்டியது. டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட்டுகளில் அவல், பொரி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் காலை முதலே வர தொடங்கினர்.

      நேற்று தொடங்கி 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலா னோர் தங்களது குடும்பத்து டன் இன்று மார்க்கெட்டு களில் குவிந்தனர். இதனால் மார்க்கெட்டுகள் களைகட்டி காணப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தக்காளி, கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட், கொத்தமல்லி இலை உள்ளிட்ட அனைத்து வகையான காய்கறிகளையும் வாங்கி சென்றனர்.

      பண்டிகை தினம் என்பதால் அவற்றின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. காய்கறிகள் மட்டுமல்லாது பழங்களின் விலையும் உயர்ந்திருந்தது. கடந்த வாரம் ரூ.120 முதல் ரூ.180 வரை விற்கப்பட்ட ஆப்பிள், இன்று ரூ.140 முதல் ரூ.200 வரை விற்பனையானது. கொய்யாப்பழம், மாதுளை, அன்னாசி பழம் உள்ளிட்ட அனைத்து பழங்களும் கிலோவுக்கு ரூ.25 வரை அதிகரித்து காணப்பட்டது.

      இதேபோல் பூஜைக்கு தேவைப்படும் முக்கிய பொருளான பொரி ஒருபடி ரூ.45-க்கு விற்பனையானது. உடைத்த கடலை கிலோ ரூ.70-க்கும், சிறிய ரக அவல் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளில் வெள்ளை பூசணிக்காய் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. வாழைத் தார்கள் ரூ.300 முதல் ரூ.500 வரையிலும், சிறிய ரக வாழைகள் ரூ.40 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

      பாளை காந்தி மார்க்கெட்டில் மல்லிகை, பிச்சிப்பூக்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்ட நிலையில் இன்று மேலும் ரூ.300 வரை அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனையான நிலையில் இன்று ரூ.1,800 வரை விற்கப்பட்டது. பிச்சிப்பூ விலை நேற்று ரூ.1,200 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.1,500 ஆக அதிகரித்தது.

      மேலும் சம்பங்கி ரூ.500, ரோஜா ரூ.300, கேந்தி ரூ.100-க்கு விற்பனை யானது. இதேபோல் அரளி பூ ரூ.500-க்கும், கோழி பூ ரூ.60-க்கும், நந்தியா விட்டம் ரூ.500-க்கும் விற்பனை யானது. பூக்கள், காய்கறிகள், பூஜை பொருட்கள் விலை உயர்ந்து காணப்பட்டாலும் பொதுமக்கள் அதனை கருத்தில் கொள்ளாமல் வாங்கி சென்றனர்.

      இன்று மாலை மார்க்கெட்டுகளில் பொருட் கள் வாங்க வரும் பொது மக்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் அந்த பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று வரு கின்றனர். மாவட்டத்தில் திசையன் விளை, வள்ளியூர், அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதி களிலும் பஜார் பகுதிகளில் களை கட்டி காணப்பட்டது.

      இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களி லும் சரஸ்வதி பூஜையை யொட்டி பொதுமக்கள் அதிகளவில் மார்க்கெட்டு களில் குவிந்தனர்.

      சங்கரன் கோவில், தென்காசி பூ மார்க்கெட்டு களிலும் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. தூத்துக்குடி யில் பஜார் பகுதிகளில் காலை முதலே அவல், பொரி வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.


      சந்திப்பு மேல்பாலம் கீழ் பகுதியில் சிறிய வாழைகள் விற்பனை நடைபெற்ற காட்சி.

      சந்திப்பு மேல்பாலம் கீழ் பகுதியில் சிறிய வாழைகள் விற்பனை நடைபெற்ற காட்சி.


      நெல்லை சந்திப்பில் அவல், பொரி, கடலை விற்பனை மும்முரமாக நடைபெற்ற காட்சி.

      நெல்லை சந்திப்பில் அவல், பொரி, கடலை விற்பனை மும்முரமாக நடைபெற்ற காட்சி.


       


       


      • கோவில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
      • கனகதுர்க்கை அம்பாளுக்கு 26 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டது.

      நெல்லை:

      நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

      திருவிழா காலங்களில் தினமும் மாலை வேளையில் முழு மண்டபத்தில் மீனாட்சி அம்பாளுக்கு பல்வேறு விதமான அலங்காரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நவராத்திரியின் 8-ம் நாளான இன்று துர்காஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது.

      இதனையொட்டி கோவிலில் பிரத்தியங்கரா சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது. இதற்காக கோவில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு அதில் மகா கும்பம் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து உலக நன்மைக்காகவும், கல்வி, திருமணம், வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடைய வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.

      தொடர்ந்து கிலோ கணக்கில் மிளகாய் வத்தல், உப்பு, வெண் கடுகு, மிளகு ஆகியவை கொண்டு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் கோவிலில் அமைந்துள்ள கனகதுர்க்கை அம்பாளுக்கு 26 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

      • 'நீட் விலக்கு நம் இலக்கு' என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் வள்ளியூரில் நடைபெற்றது.
      • கையெழுத்து இயக்கத்தை மாநில பிரசார குழு செயலாளர் சேலம் சுஜாதா தொடங்கி வைத்தார்.

      நெல்லை:

      நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் 'நீட் விலக்கு நம் இலக்கு' என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் வள்ளியூரில் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். ஞானதிரவியம் எம்.பி., நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், அவைத்தலைவர் கிரகாம்பெல், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் கார்த்திக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      மாநில பிரசார குழு செயலாளர் சேலம் சுஜாதா கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் தங்களுக்கு வழங்கப்பட்ட அஞ்சல் அட்டையில் பெயர், செல்போன் எண், தங்களது முகவரியை எழுதி கையெழுத்திட்டு அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.

      நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பி னர் இரா.ஆ.பிரபாகரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் செல்வ கருணாநிதி, ஜோசப் பெல்சி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா அருள், ராதாபுரம் இளைஞரணி விஜயாபதி ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      • அங்கன்வாடி கட்டிடங்களை யூனியன் சேர்மனும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான ராஜா ஞானதிரவியம் திறந்து வைத்தார்.
      • நிகழ்சியில் யூனியன் துணை சேர்மன் வெங்கடேஷ் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      வள்ளியூர்:

      வள்ளியூர் யூனியன் காவல்கிணறு ஊராட்சியில் காவல்கிணறு மற்றும் தெற்கு பெருங்குடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.31.66 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் பொது விநியோக கடையினை யூனியன் சேர்மனும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான ராஜா ஞானதிரவியம் திறந்து வைத்தார்.

      நிகழ்சியில் யூனியன் துணை சேர்மன் வெங்கடேஷ் தன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் சாந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் கொசிஜின், தாய்செல்வி, காங்கிரஸ் வட்டார தலைவர் அருள்தாஸ், விடுதலை சிறுத்தைகள் தெற்கு ஒன்றிய செயலாளர் மதன், காவல்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா சம்பு, மாவட்ட பிரதிநிதி மணிவர்ண பெருமாள், இசக்கியப்பன், தொண்டரணி மந்திரம், ஒன்றிய பிரதிநிதி சிவச்சந்திரன், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளரணி துணை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், மாணவரணி இளங்கோ, பாலகிருஷ்ணன், பழனி நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

      ×