என் மலர்
- போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர், பிரதீப்பை வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளார்.
- மனமடைந்த பிரதீப் வயல் தெரு பகுதியில் விஷத்தை குடித்து மயங்கி விட்டார்.
நெல்லை:
நெல்லை டவுன் பாஸ்கர தொண்டைமான் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரதீப் (வயது 26). இவர் தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வருகிறார்.
குடும்ப தகராறு
இவருக்கு வீர லட்சுமி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவரது மனைவிக்கும், இவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வீரலட்சுமி டவுன் மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் மகளிர் போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர், பிரதீப்பை வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளார்.
விஷம் குடித்தார்
அப்போது அவரை போலீசார் கண்டித்தனர். இதனால் மனமடைந்த பிரதீப் வயல் தெரு பகுதியில் விஷத்தை குடித்து மயங்கி விட்டார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து டவுன் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீவிர சிகிச்சை
உடனடியாக போலீசார் அங்கு சென்று பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஷம் குடித்த பிரதீப்பின் தாய் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
- சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த நவீன்குமார் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- கொண்டாநகரத்தில் வாட்டர் டேங்க் பகுதியில் நவீன்குமார் மயங்கி கிடந்தார். போலீசார் விரைந்து வந்து நவீன்குமாரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நெல்லை:
நெல்லை சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் திருமுகம். இவரது மகன் நவீன் குமார் (வயது 25). இவர் நெல்லையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சமீப காலமாக இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு நெல்லையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கொண்டாநகரத்தில் வாட்டர் டேங்க் பகுதியில் இவர் மயங்கி கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கீழப்பாவூரில் வீடுகள் தோறும் கொழு பொம்மைகள் அலங்கரித்து வைத்து பூஜை செய்து வருகின்றனர்.
- ஒவ்வொரு சிலைகளும் ஒவ்வொரு கலைகளை பறைசாற்றும் வகையில் அமைந்தது.
தென்காசி:
தசராவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புதிய வகையாக கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் வீடுகள் தோறும் கொழு பொம்மைகள் அலங்கரித்து வைத்து தினமும் பூஜை செய்து வருகின்றனர். கொலு பொம்மைகளில் முக்கிய சாமி சிலைகள் மற்றும் முனிவர்கள், தலைவர்கள் சிலைகள்,கலைகளை பறைசாற்றும் வண்ணம் மேள தாளங்களுடன் இசை இசைக்கும் வண்ணம் அமைக்கப்பட்ட சிலைகள் வனவிலங்குகள், கண்ணன் ராதையுடன் தொட்டிலில் நிற்கும் வண்ணம் அமைக்கப்பட்ட சிலைகள் என ஒவ்வொரு சிலைகளும் ஒவ்வொரு கலைகளை பறைசாற்றும் வகையில் அமைந்தது. குறிப்பாக இந்த ஆண்டு விவசாயம் தென் மாவட்டங்களில் போதிய அளவில் இல்லாததன் காரணமாக விவசாயம் செழிக்க வேண்டி அதனை எடுத்துரைக்கும் வண்ணம் மாடுகளுடன் விவசாயி செல்வது போன்று அமைக்கப்பட்ட கொலு சிலையானது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
- ஒரு கல்லூரியிலிருந்து 2மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
- வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5ஆயிரம் வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தென்காசி மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாண வர்களுக்கும் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்க ளுக்கும் பேச்சுப்போட்டி கள் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி 30-ந் தேதியும், ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம் 2-ந் தேதியும் தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
30-ந் தேதி நடைபெறும் போட்டியில் பள்ளி மாண வர்களுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் மற்றும் வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் உள்ளிட்ட தலைப்பும், கல்லூரி மாண வர்களுக்கு காந்தியடிகள் நடத்திய தண்டியாத்திரை, வெள்ளை யனே வெளி யேறு இயக்கம், சத்திய சோதனை மற்றும் மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது.
அடுத்த மாதம் 2-ந் தேதி அன்று பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி மற்றும் மனிதருள் மாணிக்கம் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு சுதந்திர போராட்டத்தில் நேரு, பஞ்ச சீல கொள்கை மற்றும் நேருவின் வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்புகளிலும் போட்டிகள் நடை பெற உள்ளது.
போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று அதனை நேரில் அளிக்க வேண்டும். ஒரு கல்லூரியிலிருந்து 2மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
தென்காசி மாவட்ட அளவில் நடைபெறும் கல்லூரி பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்க ளுக்கு முதல்பரிசு ரூ.5ஆயி ரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிர மும், 3-ம் பரிசு ரூ.2 ஆயி ரம் மற்றும் பாராட்டு சான்றித ழும் வழங்கப்படும்.
இதேபோல் 6 -ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசுத்தொகை ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்.
போட்டிகளில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி அன்று நேரில் அளிக்க வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு மாணவர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் 2-ம் தளத்தில் செயல்பட்டுவரும் மண்டல தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, 0462- 2502521 என்ற தொலைபேசி எண் மூலமோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இப் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறவேண்டும்
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- திருவேங்கடம் தாலுகாவில் பட்டா இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டி 2 நாள் முகாம் நடந்தது.
- ஏழை, எளிய மக்களுக்கும் பட்டா கிடைக்க செய்யும் படி ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு திருவேங்கடம் தாலுகாவில் பட்டா இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டி 2 நாள் முகாம் நடந்தது. முகாமில் மலையாங்குளம் அரபாத் நகரில் மனைகள் வாங்கியுள்ள இஸ்லாமிய மக்கள் 300 பேருக்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். மனு வழங்கிய அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் பட்டா கிடைக்க செய்யும் படி அரபாத் நகர் வளர்ச்சி குழுவினர் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட ராஜா எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ் அலி, அரபாத் நகர் வளர்ச்சி குழுவை சேர்ந்த அப்துல்ரசாக், சபியுல்லா ஜாபர், அப்துல் ரஹ்மான்இல்லியாஸ், காஜாமைதீன்செய்யது அலி மற்றும் தி.மு.க. 20-வார்டு பிரதிநிதி ஹசன் இப்ராஹிம் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தேரடி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். இதில் தென்காசி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்துப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்க வளவன், பார்வர்டு பிளாக் தென்காசி மாவட்ட செயலாளர் தங்கப்பாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் பொன் ஆனந்தராஜ், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் அப்பாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் திவான் மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.கவை சேர்ந்த அப்பாஸ், அப்துல் ரகுமான், ம.தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஹக்கீம், சங்கரன்கோவில் நகர செயலாளர் ரத்னவேல் குமார், ஒன்றிய செயலாளர் சசி முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பாலுச்சாமி, செல்வின், செந்தில்வேல், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், புளியங்குடி நகர செயலாளர் மாரியப்பன், திருவேங்கடம் தாலுகா செயலாளர் கருப்பசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மனுவேல்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விழாவை முன்னிட்டு பவானி அம்மாக்களுக்கு உள்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது.
- குருநாதர் சத்தியம்மா பெண் உருவத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு வழங்கினார்.
புளியங்குடி:
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் கோவிலில் ஐப்பசி பூஜை திருவிழா நடைபெற்றது.
31-வது ஆண்டாக நடைபெறும் இந்த பூஜை திருவிழாவை முன்னிட்டு குருநாதர் சக்தியம்மா தனது சிறுவயதில் அருள் வாக்கு பலித்ததற்காக சென்னையில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன் தனது நாவினில் குடிகொண்ட நாளையே மகாபெரும் பூஜை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மாக்களுக்கு சிறப்பு பால், தயிர், தேன்,சந்தனம், குங்குமம் உள்பட 21 வகையான நறுமண பொருள்களால் அபிஷேகங்கள் நடந்தது. சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடைபெற்றது. வருடம் தோறும் இந்நாளில் குருநாதர் சத்தியம்மா சேலை அணிந்து முழு பெண் உருவத்தில் ஒரு கையில் அக்னி சட்டியுடன் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு வழங்கினார்.
குருநாதர் சக்தியம்மா பெண் வேடத்தில் அருள் வாக்கு கொடுக்கும் இந்நாளில் பக்தர்கள் குருநாதர் சக்தியம்மா விற்கு சேலை எடுத்து கொடுக்கும் போது நமக்கு வாழ்வில் அனைத்து நலமும் கிடைக்கும், மேலும் பக்தர்களுக்கு கொடுக்கும் அருள்வாக்கு ஒரு வருடத்திற்குரிய பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை அன்னதானம் நடைபெற்றது.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- பிளஸ்-2 வகுப்பு பயிலும் 172 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
- வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ்களை சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
சிவகிரி:
சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்கத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் மூக்கையா, பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார். முதுகலை தமிழாசிரியர் பேச்சியம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு பயிலும் 87 மாணவர்களுக்கும், 85 மாணவிகளுக்கும் மொத்தம் 172 பேருக்கு இலவச சைக்கிளையும், வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற கவிதை போட்டி, ஓவிய போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவைகளில் வெற்றி பெற்ற 19 மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ், விருதுகளை சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, செயல் அலுவலர் வெங்கடகோபு, துணைத்தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இதில் கவுன்சிலர்கள் சித்ராதேவி, அருணாசலம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மகமாயி, கல்விக்குழு, அறப்பணிக்குழு உறுப்பினர்கள் வீரகுமார், காசிராஜன், மோகன், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.
- பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பாலம் புதிதாக அமைக்கப்படுகிறது.
- ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
தென்காசி:
நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரத்தில் நான்கு வழி சாலையிலேயே ரெயில்வே மேம்பாலம் புதிதாக அமைக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான வாகனங்கள்
இதற்காக மிகப்பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தச் சாலையானது நெல்லை- தென்காசி பகுதிக்கு செல்லும் பிரதான சாலையாக அமைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.
இந்நிலையில் முறையாக சர்வீஸ் சாலைகள் எதுவும் அமைக்காமல் நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் ஏற்கனவே தோண்டப்பட்ட சாலையின் கழிவுகளை கொட்டி சர்வீஸ் சாலை அமைத்துள்ளதால் அவை சேரும் சகதியுமாகவும் குண்டும், குழியுமாகவும் காட்சியளிக்கின்றன.
இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இந்த சர்வீஸ் சாலைகளானது வெயில் காலங்களில் புழுதி பறக்கும் சாலையாகவும், மழை காலங்களில் வயல்வெளிகளில் தொழி அடித்திருப்பது போன்று சேரும் சகதியுமாகவும் காட்சியளிக்கின்றன. மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவசரத்திற்கு சாலையில் சென்றால் தவறி விழுந்து காயம் ஏற்படுகிறது.
எனவே மெதுவாக பணிகள் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணி மற்றும் நான்கு வழி சாலை பணிகளில் அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு முறையாக பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறையாக சர்வீஸ் சாலைகள் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின்சார ரெயிலின் டிரைவருக்கு கைத்தறி ஆடைகள் அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. , தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
செங்கோட்டை- நெல்லை இடையே முழு நேர மின்சார என்ஜின் கொண்ட ரெயில் சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இந்த ரெயிலுக்கு தென்காசி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. அவைத் தலைவரும், தென்காசி ரெயில் பயணிகள் நல சங்க தலைவருமான வெங்கடேஷ்வரன் தலைமையில் தென்காசி ரெயில் நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அப்போது மின்சார ரெயிலின் டிரைவருக்கு கைத்தறி ஆடைகள் அணிவித்து ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. , தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா, தென்காசி நகர் மன்ற துணைத் தலைவர் கே.என்.எல்.சுப்பையா, தென்காசி நகர ம.தி.மு.க. செயலாளர் கார்த்திக், ரெயில் பணிகள் நல சங்கத் துணைச் செயலாளர் ஆனந்தபவன் காதர் மைதீன், தென்காசி நகர தி.மு.க. நிர்வாகிகள் அ.சேக்பரித், மைதீன், சன் ராஜா மற்றும் வக்கீல்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதிய அங்கன் வாடி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
- விழாவில் பொறியாளர் அப்துல் காதர், இளநிலை பொறியாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட ரெயில்வே பீடர் ரோட்டில் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியகிராம் திட்டத்தின் கீழ் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன் வாடி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். கவுன்சிலர் வேல்சங்கரி முத்துக்குமார், நகராட்சி ஆணையாளர் சுகந்தி, தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அங்கன்வாடி மாவட்ட திட்ட அலுவலர் ஜோஸ் பின் சகாய பிரமிளா, குழந்தை கள் நல அலுவலர் பர்கத் சுல்தானா வரவேற்றனர்.
விழாவில் பொறியாளர் அப்துல் காதர், இளநிலை பொறியாளர் கண்ணன், சுகாதார அலுவலர் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் சிவா, தி.மு.க. வார்டு செயலாளர் ராமையா, தி.மு.க. தன்னார்வலர் ரொட்டேரியன் வினோத், சீனிச்சாமி, சுப்புராஜ், தாவல் தொழில்நுட்ப அணி ஜாகிர் உசேன், முனியசாமி, சமுதாய நிர்வாகிகள் கண்ணன், வேலுச்சாமி, பழனிச்சாமி, தொழிலதிபர் வைரவச்செல்வம், அழகு ராஜ், நகராட்சி ஒப்பந்ததாரர் கருப்பையா தாஸ் மற்றும் பொதுமக்கள், அங்கன்வாடி மைய குழந்தைகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லை சட்டக்கல்லூரி முதல்வர் லதா, மூத்த வக்கீல் கனக சபாபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.
- மாணவர்களுக்கு சட்ட அகராதி மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றிய புத்தகம் வழங்கப்பட்டது.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் காளிச்செல்வி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுந்தரகுமார், நெல்லை சட்டக்கல்லூரி முதல்வர் லதா, மூத்த வக்கீல் கனக சபாபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சட்ட அகராதி மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றிய புத்தகம் வழங்கப்பட்டது. முடிவில் மாணவி ஆர்த்தி நன்றி கூறினார். மாணவர் பேட்ரிக் டாசன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.