search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • ஐ.ஆர்.-50 நெல் பயிரில் புகையான் மற்றும் குலைநோய் தாக்குதல் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
      • நெல் பயிரை காற்றோட்டமாக வைப்பதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து பாது காக்கலாம்.

      ஆழ்வார்குறிச்சி:

      கடையம் வட்டாரம் ஆழ்வார்குறிச்சி வருவாய் கிராமங்களில் சாகுபடி செய்துள்ள கார் நெல் பயிரை கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தலைமையில் துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம், வேளா ண்மை உதவி அலுவலர்கள் அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

      ஆழ்வார்குறிச்சி-2 (செங்கானூர் முதல் கருத்தப்பிள்ளையூர் வரை) சாகுபடி செய்திருந்த ஐ.ஆர்.-50 நெல் பயிரில் புகையான் மற்றும் குலைநோய் தாக்குதல் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. நோய் தாக்குதலால் நெல் பயிர் அங்காங்கே காய்ந்து வைக்கோலாக மாறி வருகிறது. இதிலிருந்து நெல்பயிரை பாதுகாக்க புப்ரோபுசின் -300 மில்லி (அல்லது) தையோ மெத்தாக்ஸைம்-100 கிராமுக்கு டிரைசைக்குளோஜோல்-120 கிராம் ஒரு ஏக்கர் என்ற விகிதா சாரத்தில் கலந்து மருந்தை தெளித்து கட்டுப்ப டுத்தலாம். மேலும் நெல் வயலில் தண்ணீர் தேங்காமல் வடிகால் வசதி செய்தல் மற்றும் நெல் பயிரை அங்காங்கே விலக்கி விட்டு காற்றோட்டமாக வைப்பதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து பாது காக்கலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தெரிவித்தார். ஆய்வின் போது விவசாயிகள் சண்முகநாதன், மாரிமுத்து தலைமையில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

      • சாம்பவர் வடகரை செல்லும் சாலையில் நெல் களம் அமைக்கும் கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது.
      • அதிகாரிகள் கட்டிடத்தை முறையாக ஆய்வு செய்து தரமான கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து சாம்பவர் வடகரை செல்லும் சாலையில் சுந்தரபாண்டியபுரம் பகுதி விவசாயிகள் சார்பில் நீண்ட நாள் கோரிக்கையான நெல் களம் அமைக்கும் பணியானது ஒப்புதல் வழங்கப்பட்டு ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் நெல் களம் அமைக்கும் கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கட்டிடத்திற்கான தூண்கள் அமைக்கப்ப ட்டுள்ளன. அதில் 2 துண்டுகளாக ஒன்றோடு ஒன்று சரியாக இணைக்காமல் கட்டப்பட்டுள்ளது. இதனால் கட்டிடம் தரமாக இருக்காது என்றும், சில ஆண்டுகளிலேயே இடிந்து விழும் அபாயம் எழுந்துள்ளது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் கட்டிடத்தை முறையாக ஆய்வு செய்து தரமான கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து 40-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன.
      • சோதனையில், முறையான அனுமதி இல்லாமல் 2 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

      தென்காசி:

      தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், சுரண்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடை யநல்லூர், செங்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சென்னை, பெங்களூர்,கோயம்புத்தூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன.

      இதில் எந்த ஆம்னி பஸ்களும் முறையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்த சூழ்நிலையில் தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் மணிபாரதி மற்றும் ராஜன்,உள்ளிட்டோர் தென்காசி குத்துக்கல்வலசை சாலையில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

      அப்பொழுது நாகலாந்து மாநிலத்தின் பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை சோதனை செய்த பொழுது பயணிகளை ஏற்றி இறக்கம் செய்ய தமிழகத்தின் பெர்மிட் உள்ளிட்ட எந்த முறையான அனுமதியும் இல்லாமல் 2 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

      சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்வதற்குமட்டுமே அனுமதிபெறப்பட்டு அதனை ஆம்னி பஸ் இயக்கத்திற்கு பயன்படுத்தியது கண்டறி யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்த 2 ஆம்னி பஸ்களையும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்து தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தினர்.மேலும் தகுதிச்சான்று இல்லாததால் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

      • முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவ படங்களுக்கு கே.ஆர்.பி.பிரபாகரன் மலர் மாலை அணிவித்தார்.
      • தொடக்க விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

      தென்காசி:

      அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூரில் அ.தி.மு.க.வின் 52 -வது தொடக்க விழா கொண்டாடப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் தலைமை தாங்கி முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ படங்களுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், அங்கு கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெயராமன் செய்திருந்தார்.

      நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகளான தீபொறி அப்பாதுரை,காளிமுத்து, விவேகானந்தர் கவுன்சிலர் பாவனி மற்றும் வார்டு செயலாளர்கள் மகளிர்அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

      • சிகிச்சையின் போது சண்முகத்துரை மூளைச்சாவு அடைந்து விட்டார்.
      • சண்முகத்துரையின் உடலுக்கு சங்கரன்கோவில், ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

      சிவகிரி:

      தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ளார் தென்காசி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சண்முகத்துரை (வயது 52). இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்றுமுன்தினம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சையின் போது மூளைச்சாவு அடைந்து விட்டார். அவரது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவற்றை அவரது குடும்பத்தினர் உறுப்பு தானம் செய்துள்ளனர். மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சண்முகத்துரையின் உடலுக்கு நேற்று மாலை, அவரது சொந்த ஊரான உள்ளார் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சங்கரன்கோவில், ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது சிவகிரி தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

      • மாணவிகள் குழுவாக இணைந்து நடனமாடி, மகிசாசுரனை வதம் செய்த காட்சியினை நடித்து காட்டினர்.
      • மாணவிகளுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியைகளுக்கு பாரத் கல்வி குழுமத்தின் சார்பாக தாம்பூலம் வழங்கினர்.

      தென்காசி:

      இலஞ்சி பாரத் கல்விக் குழுமத்தில் தசரா முதல் நாள் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர்கள் பாலசுந்தர், வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      மாணவி ஷைனி பிரித்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி அனுபாமா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் துர்க்கையின் கைகளில் இருக்கும் 10 ஆயுதங்களின் பயன்களை பற்றி மாணவிகள் குழுவாக இணைந்து நடனமாடி, மகிசாசுரனை வதம் செய்த காட்சியினை நடித்து காட்டினர்.

      மாணவிகளுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியைகளுக்கு பாரத் கல்வி குழுமத்தின் சார்பாக ஆலோசகர் உஷா ரமேஷ் மற்றும் முதல்வர் வனிதா ஆகியோர் இணைந்து தாம்பூலம் வழங்கினர். இதற்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா, பள்ளி முதல்வர்கள் பாலசுந்தர் மற்றும் வனிதா ஆகியோர் செய்திருந்தனர். 

      • செங்கோட்டை, சுற்று வட்டார கோவில்களில் நவராத்திரி விழா நடைபெறுகிறது.
      • தினமும் அம்பாளுக்கு மங்கள ஆரத்தி, தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது.

      செங்கோட்டை:

      நவராத்திரி திருவிழா நாடுமுழுவதும் 9 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் துர்க்கா பூஜையாகவும், தென் மாநிலங்களில் விஜயதசமி, ஆயுத பூஜை என்றும், புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் இந்த பூஜை தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

      செங்கோட்டை கோவில்கள்

      தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நவராத்திரி விழாவையொட்டி செங்கோட்டை அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரநாத சுவாமி கோவில், முப்புடாதி அம்மன் கோவில், வண்டிமலச்சி அம்மன் கோவில், நித்திய கல்யாணி அம்பாள் கோவில், பிரானூர் பார்டரில் பிரசித்தி பெற்று விளங்கும் தீப்பாய்ச்சி மாரியம்மன் கோவில், முப்புடாதி அம்மன் கோவில், ஸ்ரீவிநாயகர், அரசநங்கை, முப்பிடாதி அம்மன் உட்பட செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா நடைபெறுகிறது.

      இதை முன்னிட்டு தினமும் அம்பாளுக்கு ஒவ்வொரு அலங்காரம், சிறப்பு தீபாராதனை, விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் தினமும் மங்கள ஆரத்தி தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது. அதனை போன்று வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.

      கொலு பொம்மைகள்

      இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர். கொலு பொம்மைகளாக தெய்வ அவதாரங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையிலான பொம்மை செட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.

      மேலும் சரித்திர நிகழ்வுகளை பறைசாற்றும் விதமாக கிருஷ்ணன் லீலைகள், விநாயகர் திருவிளையாடல், வள்ளி, தெய்வானை, முருகன் திருவுருவ காட்சிகள், முளைப்பாரி செட், கல்யாண கார் ஊர்வலம், கிராம செட், பொங்கல் செட், ஐஸ்வரேஸ்வரர் செட், கல்யாண செட், அழகர் செட் உள்ளிட்டவைகளும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், குபேரன் பொம்மைகள், காவலர்கள், கிரிக்கெட் செட், விளையாட்டு, உயிரினங்கள் சாதன செட்களுடன் 5, 7, 9, 11 என அவரவர் விருப்பத்திற்கிணங்க படிகள் அமைக்கப்பட்டு அவற்றில் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.

      • தேங்காய் வியாபாரி சர்தார் சொக்கம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
      • லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட சர்தார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

      கடையநல்லூர்:

      கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி காந்தாரி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சர்தார்(வயது 65). தேங்காய் வியாபாரி.

      இவர் சொக்கம்பட்டி அருகே உள்ள பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கேரளாவில் இருந்து தூத்துக்குடி மீன் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக சர்தார் மீது மோதியது.

      இதில் தூக்கி வீசப்பட்ட சர்தார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சொக்கம்பட்டி போலீசார் சர்தாரின் உடலை மீட்டு மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சகாயம் பிரபாகரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • தூய்மை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
      • நெல்லை மாநகராட்சியில் 753 தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.

      நெல்லை:

      சுய உதவி குழுக்களின் கீழ் பணி புரியும் நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 753 பேரை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைப்பதை கண்டித்தும், தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த கோரியும் தூய்மை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      இதன் 2-வது நாளான இன்று மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை அளிப்பதற்காக நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நெல்லை மாவட்ட அறிவியல் மையம் முன்பு உள்ள சாலையில் திரண்டனர்.

      தொடர்ந்து அவர்கள் அறிவியல் மையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததை கண்டித்து போராட்டத்தை நடத்தினர்.

      பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

      நெல்லை மாநகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக 47 சுய உதவி குழுக்கள் மூலமாக 753 தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள். தற்போது தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் இந்த தூய்மை பணியாளர்களை ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதனை அறிந்து கடந்த மாதம் 27-ந்தேதி அனைத்து தூய்மை பணியாளர்களும் நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் காரணமாக மாநகராட்சி அதிகாரி களுக்கும், தொழிற்சங்கத்திற்கும் நடை பெற்ற பேச்சு வார்த்தையில் மாவட்ட கலெக்டர் உத்தரவு அடிப்படையில் தினசரி சம்பளம் ரூ.480 வழங்கி விடுவதாகவும், சுய உதவிக்குழு தூய்மை தொழிலாளர்கள் சுய உதவி குழுவாகவே நீடிப்பார்கள் என்று உறுதி அளித்தார்கள். இதன் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

      இது தொடர்பான தீர்மானமும் கடந்த 4-ந் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

      தற்போது ஒரு வார காலமாக சுய உதவிக்குழு தலைவர் மற்றும் செயலாளர்களிடம் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணி செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குழு தலைவர் மற்றும் செயலாளர் கையெழுத்திட வேண்டும் என்றும் நிர்பந்தப்படுத்தப்படு கிறார்கள் என்று புகார்கள் எழுந்தது.

      அதிகாரிகளின் இந்த செயல் தொழிலாளர் நலத்திட்டத்திற்கும், சமூக நீதிக்கும் புறம்பானது. அதிகாரிகளின் மிரட்டலை கைவிடக் கோரியும், ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்க கூடாது என்று வலியுறுத்தியும், ஒப்பந்ததாரர்களிடம் சுய உதவி குழு தொழி லாளர்களை ஒப்படைக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்று நெல்லை மாநகராட்சியில் பணி செய்யும் அனைத்து பணியாளர்களும் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தகுந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

      அப்போது நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் மோகன், பொது செயலாளர் மாரியப்பன், பொருளாளர் செல்லத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

      இதனையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலக சாலை மற்றும் மாவட்ட அறிவியல் மைய சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

      இதற்கிடையே தூய்மை பணியாளர்களை சுய உதவி குழுவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்க மாட்டோம் என்று மாநகராட்சி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கும் வரையிலும் வேலைக்கு செல்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் சுகுமாரன் தலைமையில் நாளை (புதன்கிழமை) மேலப்பாளையம் சந்தை பகுதியில் போராட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

      நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஒவ்வொரு மண்டல அலுவலகம் முன்பும் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

      • வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
      • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

      நெல்லை:

      அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார் பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக் கும், அதன் முன்பு அலங்க ரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத் துக்கும் மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் நிர்வா கிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

      கலந்து கொண்டவர்கள்

      நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாநில எம். ஜி.ஆர். மன்ற இணைச் செய லாளர் கல்லூர் வேலாயுதம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பள்ளமடை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன்,

      பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சண்முக குமார், திருத்துச் சின்னத்துரை, ஜெனி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சேவல் பரமசிவன், கவுன்சி லர் சந்திரசேகர், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், பகுதி துணை செயலாளர் மாரீசன், இணை செயலாளர் அப்பாஸ், பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்ப ராஜ் ஜெய்சன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ் ணன், நிர்வாகிகள் சீனி முகம்மது சேட், பாறையடி மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      • நிகழ்ச்சியில் விபத்து தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
      • மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றது.

      நெல்லை:

      நாடு முழுவதும் இன்று உலக விபத்து தடுப்பு தினத்தையொட்டி நெல்லை அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை நெல்லை மாநகர தலைமையிடத்து போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

      நிகழ்ச்சியில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரேவதி பாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

      இந்த பேரணியில் மருத்துவ கல்லூரி செவிலியர் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே ஊர்வலமாக சென்றனர்.

      அதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விபத்து தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. பின்னர் செவிலியர், மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றது.

      தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவர் முகமது ரபி, டாக்டர் அமலன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


      பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி மற்றும் பலர் உள்ளனர்.

      பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி மற்றும் பலர் உள்ளனர்.


       


      • முகாமில் சேரன்மகா தேவி சப்-கலெக்டர், தனித்துணை கலெக்டர் ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படும்.
      • முகாம் முடிந்த உடன் அன்று பிற்பகல் அக்கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மேற்படி குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

      நெல்லை:

      சேரன்மகாதேவி வட்டம் திருவிருத்தான்புள்ளி ஊராட்சிப் பகுதியில் மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்னோடியாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 1 திருவிருத்தான்புள்ளி பகுதி-2 கிராமம், கங்கனாங்குளம் அரசு திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மனுக்கள் பெறப்பட உள்ளன.

      இந்த முகாமில் சேரன்மகா தேவி சப்-கலெக்டர், தனித்துணை கலெக்டர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகிேயார் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படும். முகாம் முடிந்த உடன் அன்று பிற்பகல் அக்கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மேற்படி குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

      எனவே ஆய்வுக் குழுவிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார். 

      ×