search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • 6-ம் வகுப்பு மாணவி சித்ரா சிலம்ப போட்டியில் முதலிடம் பிடித்தார்.
      • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டது.

      தென்காசி:

      தென்காசி மாவட்டத்தில் முதன் முறையாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தனித்திறமை திருவிழா எம்.கே.வி.கே. பள்ளியில் நடைபெற்றது. இதில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி 2-ம் வகுப்பு மாணவன் பாலசேஷன் மாறுவேடப் போட்டியிலும், 6-ம் வகுப்பு மாணவி சித்ரா 12 வயதுக்கு உட்பட்டோருக்கான சிலம்ப போட்டியில் முதலிடமும், மாணவி மிருதுளா ஜனனி ஓவியப் போட்டியிலும், 7-ம் வகுப்பு மாணவன் கோதண்ட ராமன் பேச்சு மற்றும் சிலம்பம் போட்டியிலும் பங்குபெற்று வெற்றி பெற்றனர்.

      வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

      • 27 நிமிடம் 32 வினாடிகளில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாணவி முவித்ரா புதிய சாதனை படைத்தார்.
      • 10 கிலோமீட்டர் தூரத்தை மாணவி கடக்கும் வரை ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேசன்-கோகிலா தம்பதியரின் மகள் முவித்ரா.

      புதிய சாதனை

      6 வயது மாணவியான இவர் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் ஸ்கேட்டிங்கில் முந்தைய சாதனையான சங்கரன்கோவிலை சேர்ந்த ஆதவன் என்ற 7 வயது மாணவன் 10 கிலோமீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து சாதனை படைத்ததை முறியடிக்கும் வகையில் முவித்ரா புதிய சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

      நிகழ்ச்சிக்கு சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சாய் நிகேதன் பள்ளி முதல்வர் தனலட்சுமி, மூத்த வக்கீல் அறங்காவலர் சண்முகையா, இன்ஸ்பெக்டர்கள் சண்முக வடிவு, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      ராஜா எம்.எல்.ஏ. பாராட்டு

      இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதீர், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆகியோர் அந்த மாணவியின் ஸ்கேட்டிங் சாதனை முயற்சியை தொடங்கி வைத்தனர்.

      நிகழ்ச்சியில் மாணவி சங்கரன்கோவில் கழுகு மலை சாலையில் இருந்து அழகனேரி வரை 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து மாணவி முவித்திராவை பொது மக்கள் உள்ளிட்டவர்கள் பாராட்டினர்.

      நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் செல்வராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பையா, கல்பனா, முன்னாள் ராணுவவீரர் யோஸ்வா, தலைமை போதகர் பாபு, சிவன்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      முவித்ராவின் சாதனை முயற்சி முன்னேற்பாடாக சங்கரன்கோவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் வரை ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

      சங்கரன்கோவில் டவுன் போலீசார் மற்றும் குருவிகுளம் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். ஏற்பாடுகளை சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக பயிற்சியாளர் பாக்கிய ராஜ் செய்திருந்தார்.

      அமைச்சர் உதயநிதியிடம்...

      சாதனை படைத்த மாணவி முவித்ராவை பாராட்டிய ராஜா எம்.எல்.ஏ., அவரை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் அழைத்துச் சென்று வாழ்த்து பெற இருப்பதாக தெரிவித்தார்.

      மேலும் இந்த சாதனை படைத்திருப்பது சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை யாகும். இது போன்ற சாதனை முயற்சிகளை யார் மேற்கொண்டாலும் தி.மு.க. அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும் மேலும் இது போன்ற பயிற்சிகளுக்கு தேவையான உதவிகளுக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

      • கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பல பகுதிகள் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
      • மாநில கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும்.

      கடையம்:

      முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தென்காசி, அம்பை சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

      கனிம வளங்களை நமக்காக மட்டுமல்லாமல் நமது வருங்கால சந்ததி யினருக்காகவும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலும், அவசியத்திலும் இருக் கிறோம்.

      கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி யுள்ள பல பகுதிகளை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து அங்கிருந்து கனிம வளங்கள் எடுப்பதற்கு தடை செய்யும் விதத்தில் அங்குள்ள குவாரிகளை மூடிவிட்டு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய தமிழகத்தில் இருந்து அதி கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக கனிமவளங்ள் கொண்டு செல்கின்றனர்.

      தமிழகத்திலும் அதே போல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து தமிழகத்தின் வளத்தை பாதுக்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

      வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் இது குறித்த ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்து மாநில கனிம வளங்களை நமது தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வழி செய்வதுடன் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு நிரந்தரமாக தடை விதிப்பதற்கும் சட்டம் இயற்ற வேண்டும்.

      எனவே வருகிற 9-ந் தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

      இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

      • கடந்த 3-ந் தேதி முளைப்பாரி கும்மி பாட்டு ஊர்வலத்துடன் சிறப்பு அபிஷேக பூஜை, அன்னதானம், நடைபெற்றது.
      • சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடனை நிறைவு செய்தனர்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டம் அய்யாபுரம் கிராமத்தில் உள்ள இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 30-வது ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு செப்டம்பர் 25-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய திருவிழா கடந்த 3-ந் தேதி (செவ்வாய்கிழமை) முளைப்பாரி கும்மி பாட்டு ஊர்வலத்துடன் சிறப்பு அபிஷேக பூஜை, அன்னதானம், வில்லிசை கச்சேரி, பலவகை மேளதாளங்கள் முழங்க விமர்சையாக நடைபெற்றது.

      விழாவின் சிகர நிகழ்ச்சியாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

      • கலைவாணிக்கு அஜித்குமார் என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
      • குடும்ப பிரச்சினை காரணமாக கலைவாணி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

      செங்கோட்டை:

      செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பஞ்சாயத்து ரோட்டை சேர்ந்தவர் கலைவாணி என்ற அம்மு(வயது 21). இவருக்கு ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

      இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கலைவாணி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக மனவேதனையில் இருந்த கலைவாணி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

      • கலைஞரின் படைப்புகளில் சமூக நீதி என்ற தலைப்பில் பேசிய மாணவி காவிய பிரியா முதல் பரிசை பெற்றார்.
      • போட்டியில் வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எழிலரசி முதல் இடத்தை பிடித்தார்.

      சிவகிரி:

      முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் நூற்றா ண்டு விழா கருத்த ரங்கம் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் முன்னாள் பேரவைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நேற்று வாசுதேவநல்லூர் அருகே வியாசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புளியங்குடி டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

      நிகழ்ச்சியில் சங்கரன் கோவில் ராஜா எம்.எல்.ஏ., வாசுதேவநல்லூர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் சிற்புரையாற்றினர்.

      வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞரின் படைப்புகளில் சமூக நீதி என்ற தலைப்பில் பேசிய மாணவி காவிய பிரியா முதல் பரிசையும், தமிழ் மொழியின் எழுச்சிக்கு கலைஞர் செய்த சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் பேசிய மாணவி சூரியகலா இரண்டாவது பரிசையும், மகளிர் நலனில் கலைஞர் என்ற தலைப்பில் பேசிய மாணவி சாகிதா மூன்றாம் பரிசையும் வென்றனர்.

      இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது என்ற தலைப்பில் பேசிய மாணவர்களில் வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எழிலரசி முதல் இடத்தையும், கரிவலம்வந்தநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கவிதா இரண்டாவது இடத்தையும், சேர்ந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ராமர் மூன்றாவது இடத்தையும் வென்றனர்.

      கலைஞரின் நூற்றாண்டு விழா சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கத்தில், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் சிறப்பாக உரையாற்றிய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

      நிகழ்ச்சியில் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் நாகராஜன், இணைச்செயலாளர் சாந்தி, துணைச் செயலாளர் ரேவதி, சார்பு செயலாளர் பாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, புளியங்குடி நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, சிவகிரி தாசில்தார் ஆனந்த், துணை தாசில்தார் வெங்கடசேகர், வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

      • கால்நடை மருத்துவக் குழுவினரால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
      • சிறப்பாக கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள கடங்கனேரி கிராமத்தில் வெண்ணிலிங்கபுரம் கால்நடை மருந்தகம் மூலம் முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கடங்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தேன்ராஜ் முன்னிலையில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

      முகாமில் வெண்ணிலிங்கபுரம் கால்நடை மருத்துவர் சந்திரன் மற்றும் நெட்டூர் கால்நடை மருத்துவர் ராம செல்வம், கால்நடை பராமரிப்பு உதவியாளர் நடராஜன் ஆகியோர் கொண்ட கால்நடை மருத்துவக் குழுவினரால் கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் நோயுற்ற கால்நடை களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், ஆடுகள் மற்றும் கிடேரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டது. சிறந்த கிடேரி கன்றுகள் மற்றும் சிறப்பாக கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் கால்நடை வளர்க்கும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன்பெற்றனர்.

      • பெண் கல்வியை ஊக்குவித்தது தி.மு.க.தான் என்று சுப வீரபாண்டியன் பேசினார்.
      • பெண்கள் தி.மு.க.வில் இருப்பதை மிகப் பெருமையாக கருத வேண்டும்.

      சங்கரன்கோவில்:

      தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி பயிற்சி பாசறை கூட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

      ஆலோசனை

      தி.மு.க. மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமை தாங்கினார். மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி முன்னிலை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சிவசங்கரி வரவேற்று பேசினார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் விஜயா சவுந்தர பாண்டியன் தொகுத்து வழங்கினார்.

      இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், மகளிர் தொண்டரணி மாநில துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

      சமத்துவம், சமூகநீதி

      கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

      தி.மு.க.வில் உறுப்பினர்களாக இருப்பதற்கு காரணம் கட்சியின் கொள்கை மற்றும் கட்சித் தலைவர்களின் திறமையான செயல்பாடு. திராவிட கொள்கையின் உயிர்நாடியாக இருப்பது சமத்துவம், சமூகநீதி என்பதாகும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமமாக இருக்க வேண்டுமென பெண் கல்வியை ஊக்குவித்தது தி.மு.க.தான்

      அதனால் தான் இன்று பெண்கள் சமையலறையில் இருந்து வெளியே வந்து கவுன்சிலர்களாக, சேர்மன்களாக, எம்.எல்.ஏ.க்களாக, எம்.பி.க்களாக, ஆளுமை செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். பெண்கள் தி.மு.க.வில் இருப்பதை மிகப் பெருமையாக கருத வேண்டும். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என சட்டம் இயற்றியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.

      இவ்வாறு அவர் பேசினார்.

      நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் முத்துச்செல்வி, ஆலடி எழில்வாணன், மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர் நன்றி கூறினார்.

      • மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கல்லடா ஆற்றின் குறுக்கே தென்மலை அணை உள்ளது.
      • தென்மலை அணையின் அடிவாரத்தில் புகழ்பெற்ற வன சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ளது.

      செங்கோட்டை:

      தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு பகுதியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கல்லடா ஆற்றின் குறுக்கே தென்மலை அணை உள்ளது.

      தென்மலையில் இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் கடந்த 1962-ம் ஆண்டு கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழை, பத்தினம் திட்டா ஆகிய 4 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை கருத்தில் கொண்டு இந்த அணை கட்டப்பட்டது. இது 24 கிலோ மீட்டர் நீளமும், சுமார் 2 கிலோ மீட்டர் அகலமும், 116 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த அணையின் அடிவாரத்தில் புகழ்பெற்ற வன சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ளது.

      தென்காசி மாவட்டத்திற்கு மிக அருகாமையில் இருப்பதால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இந்த பூங்காவை வந்து பார்த்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் தென்மலை அணையையும் பார்வையிட்டு செல்வது வழக்கம். கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அணை முழு கொள்ளளவான 116 மீட்டரை 2 முறை எட்டியது. இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு அதிகளவு நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையின் கொள்ளளவு 113 மீட்டராக உயர்ந்துள்ளது.

      இன்று காலை நிலவரப்படி நிமிடத்திற்கு 115.8 மீட்டர் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த அணையில்ருந்து 7.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 2 யூனிட்டுகள் மூலம் மின் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. தென்மலை அணை இந்த ஆண்டு குறிப்பிட்ட நேரத்தில் நிரம்ப உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். இதற்கிடையே அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டு வெளி யேற்றப்படுகிறது. அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

      • முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.
      • சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

      ஆலங்குளம்:

      தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் மேலகிருஷ்ணபேரி ஊராட்சிக்குட்பட்ட முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

      • பரிசளிப்பு விழாவுக்கு நகர வாணியா் சமுதாயம் கல்வி நிதி தலைவா் குமரேசன் தலைமை தாங்கினார்.
      • விழாவில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பரிசு வழங்கப்பட்டது.

      செங்கோட்டை:

      செங்கோட்டையில் நகர வாணியா் சமுதாயம் சார்பில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான 25-ம் ஆண்டு கல்வி நிதி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. நகர வாணியா் சமுதாயம் கல்வி நிதி தலைவா் குமரேசன் தலைமை தாங்கினார். சமுதாய தலைவா்கள் மாரியப்பன், மோகன்ராஜ், முருகன், சுடலையாண்டி, துரைராஜ், லெட்சுமியம்மாள், நாராயணன், முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

      நகர வாணியா் சமுதாய (கல்வி நிதி) துணைத்தலைவா் ராமகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளா் முருகன் வரவு-செலவு கணக்கு வாசித்தார். கல்வி நிதி செயலாளா் செண்பக குற்றாலம் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து சுப்பையா, ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வா் மீனாட்சிசுந்தரம், நகர வாணியா் சமுதாய துணைச்செயலாளா் திருமலை, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் செந்தில்ஆறுமுகம், குருசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமுதாய நிர்வாகிகள், விழா கமிட்டியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகர வாணியா் கல்வி நிதி துணைச்செயலாளா் கருப்பசாமி நன்றி கூறினார்.

      • தேசிய மாணவர் படை மாணவிகள் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
      • குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு, மாணவர்கள் விழிப்புணர்வு உரையாற்றினர்.

      சங்கரன்கோவில்:

      மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி தேசிய மாணவர் படை பெண்கள் பிரிவை சேர்ந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் ஹரிகெங்காராம் முன்னிலையிலும், தேசிய மாணவர் படை உதவி அதிகாரி அம்பிகா தேவி, ஒருங்கிணைப்பிலும் தூய்மைபணி நடைபெற்றது. மேலும், தேசிய மாணவர் படை மாணவர்கள் குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று அங்குள்ள மருத்துவர் மற்றும் அலுவலர்களுடன் உரையாடி, வந்திருந்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினர். அவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் கொடுத்து தூய்மை இந்தியா இயக்கம்- சமூக சேவையை திறம்பட நடத்தினர்.

      ×