search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • வெங்காடம்பட்டி ஊராட்சியில் தூய்மை சேவை திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மையே விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
      • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வந்த பற்றாளர் மாரியப்பன் நிகழ்ச்சியை ஆய்வு செய்தார்.

      கடையம்:

      கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்காடம்பட்டி ஊராட்சியில் தூய்மை சேவை திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சிமன்ற தலைவர் ஸாருகலா ரவி, ஊராட்சி செயலர் பாரத், முக்கூடல் சொக்கலால் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டனர்.

      ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வந்த பற்றாளர் மாரியப்பன் நிகழ்ச்சியை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் முக்கூடல் சொக்கலால் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      • சுந்தரராஜபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
      • விழாவையொட்டி சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் வழிபாடு நடந்தது.

      செங்கோட்டை:

      புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு நேற்று செங்கோட்டை அழகிய மனவாள பெருமாள் கோவில், அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவிலில்களில் கருட சேவை மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. செங்கோட்டை சுந்தரராஜபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, மாலையில் கொட்டும் மழையிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதைமுன்னிட்டு கோவிலின் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன.

      இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலை அலங்காரம், தீபாராதனை பிரார்த்தனை, பஜனை நடைபெற்றது. பிரானுர் பார்டர்ஆஞ்சநேயர், செங்கோட்டை சிவன் கோவில், இலத்தூர் சனிஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

      • பரமசிவன் தென்காசி- நெல்லை நான்கு வழிச்சாலையில் தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
      • வேன் மீது பரமசிவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

      தென்காசி:

      பாவூர்சத்திரம் அருகே உள்ள குலசேகரபட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் (வயது 23). இவர் நேற்று இரவு பாவூர்சத்திரம் செல்வ விநாயகர்புரம் அருகே தென்காசி- நெல்லை நான்கு வழிச்சாலையில் தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

      அப்போது நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வேனில் தென்காசி சென்று விட்டு மீண்டும் தங்களின் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வ விநாயகர் புரம் அருகே அவர்கள் வந்த வேன் மீது பரமசிவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பரமசிவத்தை உடனடியாக சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • தேசிய இயற்கை மருத்துவ மையம் சார்பில் வாசுதேவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
      • முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

      நெல்லை:

      வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய இயற்கை மருத்துவ மையம் சார்பில் மருத்துவ முகாம், வாசுதேவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. முகாமை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். டாக்டர்கள் ரத்தின பிரகாஷ், வேதியப்பன், பிரியங்கா மற்றும் மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம், நோய் வராமல் தடுக்கும் வழிகள், வாழ்வி யல் முறைகள், உணவு பழக்கங்கள் குறித்து உரையாற்றினர்.

      முகாமில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ரத்த அழுத்தம், உடல் எடை, உயரம், சர்க்கரை பரிசோ தனை நடைபெற்றது. இயற்கை மருத்துவ சிகிச்சை களான அக்குபஞ்சர், அக்குபிரசர், நீர் சிகிச்சை, மசாஜ், யோகா பயிற்சி, பிசியோதெரபி சிகிச்சைகள் வழங்கப்பட்டது. முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இயக்கை உணவு, ஹெர்பல் டீ வழங்கப்பட்டது. ஏற்பாடு களை இயற்கை மருத்துவம், யோகா மருத்துவ ஆராய்ச்சி மைய ஆசிரியர்கள், எஸ்.தங்கப்பழம் கல்வி குழும அலுவலர்கள் செய்து இருந்தனர்.

      • சுரேசுக்கும், அருணாதேவிக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
      • அருணா தேவி தனது கணவரை பிரிந்து முத்துக்குமாருடன் சென்று விட்டார்.

      சுரண்டை:

      சுரண்டை அருகே உள்ள துரைசாமியாபுரத்தை சேர்ந்தவர் சேர்மன். இவருடைய மகன் சுரேஷ்(வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருணாதேவிக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

      கள்ளக்காதல்

      இவருக்கும், சாம்பவர் வடகரையை சேர்ந்த பீடிக்கடையில் பணிபுரியும் ஊழியரான முத்துக்கு மார்(27) என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கடந்த ஓராண்டுக்கு முன்பு அருணா தேவி தனது கணவரை பிரிந்து முத்துக்குமாருடன் சென்று விட்டார். அவர்கள் 2 பேரும் சுரண்டை வரகுண ராமபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.

      இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், அவரது சகோதரர் செல்வத்தை அழைத்துக்கொண்டு சுரண்டை வரகுணராமபுரத்துக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக முத்துக்குமாரும், அருணாதேவியும் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அதனை கண்ட சுரேஷ் அவர்களை வழிமறித்து முத்துக்குமாரை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர். அதனை தடுக்க முயன்ற அருணா தேவியை அரிவாளால் கையில் வெட்டினர்.

      இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கண்ணா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று முத்துக்குமார் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அருணா தேவிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

      இதற்கிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ், செல்வம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

      • குழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ அலுவலர் சூர்யா கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
      • ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி வாழ்த்தினார்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவிலில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைதுறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தமிழக அரசு அறிவித்துள்ளபடி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி சீர்வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

      மாவட்ட திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ அலுவலர் சூர்யா கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

      நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி வாழ்த்தினார். விழாவில் வார்டு செயலாளர்கள், வீராசாமி, சிவா, வக்கீல் செந்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு கணேஷ், ஜெயக்குமார், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய இணைச் செயலாளர் மணிகண்ட பிரபு, ஒன்றிய இளைஞரணி முருகையா பாண்டியன் மற்றும் ஒன்றிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் மல்லிகா, செல்வம் மற்றும் முத்துப்பாண்டி மற்றும் அங்கன்வாடி பணி யாளர்கள், கர்ப்பிணி பெண்கள், அவர்களுடைய குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • மலையடிக்குறிச்சி பெரியகுளம் பகுதியில் இன்று காலை ஆட்டோ ஒன்று தீப்பற்றி எரிந்தது.
      • ஆட்டோவில் எரிந்த நிலையில் ஆண் சடலமும் கிடந்தது.

      புளியங்குடி:

      புளியங்குடி அருகே உள்ள மலையடிக்குறிச்சி பெரியகுளம் பகுதியில் இன்று காலை ஆட்டோ ஒன்று தீப்பற்றி எரிந்தது. அதனை அறிந்த புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

      அப்போது அந்த ஆட்டோவில் எரிந்த நிலையில் ஆண் சடலமும் கிடந்தது. இதையடுத்து ஆட்டோ பதிவெண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில் அது புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்த வெள்ளத்துரை (வயது60) என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இவர் தனது குடும்பத்தினரை பிரிந்து வாசுதேவநல்லூரில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அவரை நேற்று முதல் காணவில்லை.

      இந்த நிலையில் அவரது ஆட்டோவில் எரிந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அவரை யாரேனும் ஆட்டோவுடன் கடத்தி சென்று கொலை செய்து எரித்து இருக்க லாமா? அப்படியானால் அந்த நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தா ர்கள்? என்பது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • திட்டத்தின் சிறப்புகளை பற்றி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உரையாற்றினார்.
      • ஓவியப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் இணைந்த 5-ம் ஆண்டு விழா கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலும், சுகாதாரம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேம லதா முன்னிலையிலும் நடைபெற்றது.

      விழாவில் திட்டத்தின் சிறப்புகளைப் பற்றியும், பயன்கள் பற்றியும் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உரையாற்றினார். மேலும் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சைப் பெற்று குணமடைந்த பயனாளிகள் 5 பேருக்கு நினைவு பரிசும், முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அட்டை 5 பேருக்கும், பிரதம மந்திரி காப்பீடு திட்ட அட்டை 5 பேருக்கும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 3 அரசு மருத்துவமனை மற்றும் 2 தனியார் மருத்துவமனைக்கு நினைவு பரிசுகளும் மற்றும் விழாவை ஒட்டி நடைபெற்ற ஓவியப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

      விழாவில் துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலர் ஜோதிவேல், தென்காசி அரசு மருத்துவமனை டீன் ஜெஸ்லின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      • விவசாயிகள் தொழில்நுட்ப பயிற்சி ஏ.பி. நாடானூர் பஞ்சாயத்து தலைவர் அருணாசலம் என்ற அழகுதுரை தலைமையில் நடைபெற்றது.
      • பிசான பருவத்தில் சாகுபடி செய்யும் நெல் ரகங்கள் பற்றி ஏஞ்சலின் பொன்ராணி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

      கடையம்:

      வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழு - விவசாயிகள் தொழில்நுட்ப பயிற்சி கடையம் வட்டாரத்தில் ஏ.பி. நாடானூர் பஞ்சாயத்து தலைவர் அருணாசலம் என்ற அழகுதுரை தலைமையில் நடைபெற்றது. கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி முன்னிலை வகித்தார். பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம் வரவேற்று பேசினார். வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி பிசான பருவத்தில் சாகுபடி செய்யும் நெல் ரகங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். பயிற்சியின் முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் தீபா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன் மற்றும் அட்மா தொழில்நுட்ப மேலாளர் பொன்ஆசீர், உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

      • பேரணியானது தென்காசி புதிய பஸ் நிலையத்தில் புறப்பட்டு சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் நிறைவடைந்தது.
      • ஊர்வலத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு கோசங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

      தென்காசி:

      தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மருத்துவர்கள், செவிலியர்கள் மாணவ, மாணவிகள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்ட இருதய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

      சாந்தி பன்னோக்கு மருத்துமனை நிறுவனர் மற்றும் தலைவரான டேவிட் செல்லத்துரை ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் தமிழரசன், மருத்துவர் பிரிதிவிராஜ் கலந்து கொ ண்டனர். மருத்துவர் அன்பரசன், மருத்துவர் கவுதமி தமிழரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

      பேரணியானது தென்காசி புதிய பஸ் நிலை யத்தில் புறப்பட்டு, மேம்பா லம், கூலக்கடை பஜார், பெரிய கோவில், தென்காசி நகராட்சி, சந்தை பஜார், அரசு பஸ் டிப்போ வழியாக சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் நிறை வடைந்தது. பேரணி ஆரம்பம் முதல் முடியும் வரை பெய்துவந்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஊர்வலமாக நடந்து வந்த மருத்துவர்கள், மாணவ, மாணவிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.

      ஊர்வலத்தில் கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு கோசங்கள் எழுப்பியும் மாணவர்கள் சென்றனர். தென்காசியில் முதன் முறையாக கரோனரி ஆஞ்சியோகிராபி, ஆஞ்சியோ பிளாஸ்ட்டி, பேஸ்மேக்கர், பெரி பெரல் ஆஞ்சியோ கிராபி, பெரிபெரல் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி சிகிச்சைகள் மிகச் சிறந்த இதய நோய் மருத்துவர்களால் சாந்தி பன்னோக்கு மருத்துவ மனையில் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

      • 120 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள், தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
      • நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      தென்காசி:

      தி.மு.க. விவசாய அணி நெல்லை மண்டல கலந்துரையாடல் கூட்டம் குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஏற்பாட்டில் 120 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள், தென்னங்கன்றுகளை மாநில விவசாய அணி செயலாளரும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான ஏ.கே.எஸ்.விஜயன் வழங்கினார்.

      நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயகுமார், குற்றாலம் பேரூர் செயலாளர் சங்கர் என்ற குட்டி, நகர செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் ஷெரீப், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் குற்றாலம் சுரேஷ், டேவிட் முருகன், பிச்சையா, சொக்கம்பட்டி முருகன், மதுரை சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      • நெடுஞ்சாலைத்துறை சாலையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு சாலை சேதமாகி வருகின்றது.
      • பணிகளை பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் 20 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்காக புதிய பைப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.

      ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை

      இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் அந்த பணிகளை தாமதமாக செய்து வருவதால் தங்களுக்கு குடிநீர் முறையாக வர வில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்ததுடன் அதனை சரி செய்ய கோரிக்கை விடுத்தனர்.

      பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நெடு ஞ்சாலைத்துறை அதிகாரி களை அழைத்து ஆலோ சனையில் ஈடுபட்டார்.

      ஆலோசனையின் போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து நகராட்சி அதிகாரிகள் மீதமுள்ள புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளை இரண்டு துறைகளும் சேர்ந்து விரைந்து முடிக்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலைத்துறை சாலையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு சாலை சேதமாகி வருகின்றது. இதையும் நெடு ஞ்சா லைத்துறை அதிகாரி களும் கலந்து பேசி அவர்கள் வழி காட்டுத லின்படி உடனடி யாக சரி செய்ய வேண்டும்.

      இந்த பணிகளை போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் போது, பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் 20 நாட்க ளுக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

      ஆலோசனையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உலக ம்மாள், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறி யாளர் கனகராஜ், உதவி நிர்வாக பொறியாளர் பிரிய தர்ஷினி, சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் சபா நாயகம், நக ராட்சி மேற்பார் வையாளர் கோமதி நாயகம், நெடுஞ்சா லைத்துறை உதவி பொறி யாளர்கள் பல வேசம், முத்து மணி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

      ×