search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பள்ளிக் குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங் செய்தபோது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
    • அஜித்தோடு அவரது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் சைக்கிளிங் செய்துள்ளனர்.

    நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதுதான் அவரது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மகிழ் திருமேனி இயக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

    விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் தாமதம் ஆகி வந்ததால் இப்படத்தை படக்குழு கைவிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர், 'விடாமுயற்சி' கண்டிப்பாக உருவாகும் என உறுதியளித்தார்.

    இந்நிலையில், நடிகர் அஜித், தனது மனைவி மற்றும் பள்ளிக் குழந்தைகளோடு ஜாலியாக சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    சென்னையில் பள்ளிக் குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங் செய்தபோது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகின்றன. அஜித்தோடு அவரது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் சைக்கிளிங் செய்துள்ளனர்.

    • மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் வைஜெயந்தி மாலா எம்.பி.யாக பணியாற்றினார்.
    • 90 வயதாகும் வைஜெயந்தி மாலா பரதம் ஆடி வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    தமிழில் 1949-ம் ஆண்டு ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த 'வாழ்க்கை' படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் வைஜெயந்தி மாலா. 'இரும்புத்திரை', 'பார்த்திபன் கனவு', 'தேன் நிலவு' 'பாக்தாத் திருடன்', 'சித்தூர் ராணி பத்மினி' போன்ற காலத்தால் அழியாத பல படங்களில் நடித்துள்ளார்.

    'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் 'கண்ணும் கண்ணும் கலந்து...' என்ற பாடலுக்கு 'நாட்டிய பேரொளி' பத்மினியுடன் இணைந்து அவர் ஆடிய போட்டி பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. பல வெற்றிப்படங்களில் நடித்து பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக ஜொலித்தார். தெலுங்கு, வங்காள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    சென்னையில் பிறந்து வளர்ந்த அவர், சினிமா தாண்டி அரசியலிலும் ஜொலித்தார். மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் எம்.பி.யாக பணியாற்றினார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். 90 வயதாகும் வைஜெயந்திமாலா சமீபத்தில் பரதம் ஆடி வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    இந்த வயதிலும் அவரது நடன அசைவுகள் 'அடடா...' என்றே சொல்ல வைக்கிறது. இதனை திரை பிரபலங்களும், ரசிகர்களும் ஷேர் செய்தும், வாழ்த்துகள் தெரிவித்து பாராட்டியும் வருகிறார்கள்.

    • லியோ படத்தில் பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் நடித்துள்ளனர்.
    • சமீபத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

     

    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் லியோ படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

    அதன்படி லியோ படத்திற்கு ஆறு வாரங்களுக்கு முன்பு, செப்டம்பர் 7-ம் தேதியில் இருந்து லண்டனில் டிக்கெட் முன்பதிவு தொடங்க இருக்கிறது. இதனை பட வெளியீட்டு நிறுவனமான அகிம்சா என்டர்டெயின்மென்ட் தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில் தெரிவித்து இருக்கிறது.

    • தேசிய விருது வென்றவர்களுக்கு பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • பெரும் வரவேற்பை பெற்ற ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படவில்லை.

    இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அடங்கிய திரைத் துறை சார்ந்தவர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது.

    இதில் தேசிய விருது வென்றவர்களுக்கு பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்தி வருகின்றனர். இந்த முறை தேசிய விருது அறிவிக்கப்பட்டதும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படங்களுக்கு விருது அறிவிக்கப்படாததற்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

     

    அந்த வகையில், நடிகர் சூர்யா, மணிகண்டன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படவில்லை. ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் படத்திற்கு, நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் என பலதரப்பட்டோர் கூறி வந்தனர்.

    தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது வழங்காதது குறித்து ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் ஏமாற்றம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் பிரகாஷ் ராஜ் ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படாதது குறித்து காட்டாமாக கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்த எக்ஸ் பதிவில், "காந்தியை கொன்றவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போர், பாபாசாஹேப் இயற்றிய சட்டத்தை மாற்ற நினைப்பவர்கள் எப்படி ஜெய் பீம்-ஐ கொண்டாடுவார்கள்," என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்து இருக்கிறார்.

    • 'சந்திரமுகி -2' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் நடைபெற்றது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.



    இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன், பிரேமா சுபாஷ்கரன், சுபாஷ்கரனின் தாயார் ஞானாம்பிகை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் ராகவா லாரன்ஸ் பேசியதாவது, என்னுடைய மாணவர்களை அனைத்து மேடைகளிலும் நடனமாட வைக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் ஒரு சில நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் உங்களுடைய மாணவர்கள் தொடர்ச்சியாக மேடை ஏறி நடனமாடும் வாய்ப்பை அளித்தாலும், ஒரே மாதிரியான நடனங்களைத் தானே ஆடுகிறார்கள் . இது பார்வையாளர்களுக்கு போரடிக்காதா? என கேட்பார்கள். அவர்களிடத்தில் திரிஷா, நயன்தாரா நடனம் ஆடினாலும், அவர்களும் ஒரே நடனத்தை தானே ஆடுகிறார்கள். அதை மட்டும் திரும்பத் திரும்ப பார்க்கிறீர்களே அதனால் இதையும் திரும்பத் திரும்ப பார்க்கலாமே எனச் சொல்வேன்.


    நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு மேடை ஏறும் வாய்ப்பை வழங்குவதால் அவர்களுடைய குடும்பத்திற்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு இந்த நடனத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. இவர்களுடைய நடனத்தில் கவர்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு வலி இருக்கிறது. இவர்களுடைய ஆட்டத்தில் அழகு இருக்கிறதோ இல்லையோ. கடவுள் இருக்கிறார். இதனால் இந்த குழுவினருக்கு வாய்ப்பளியுங்கள்.

    என்னுடைய மாணவர்களின் நிகழ்ச்சியை பார்த்த பிறகு சிலர் உதவி செய்வார்கள். ஆனால் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதுவும் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கிய சுபாஷ்கரனுக்கு நன்றி. என்னுடைய அறக்கட்டளைக்கு யாரும் நிதி உதவி வழங்க வேண்டாம் என்று ஓராண்டிற்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தேன். ஏனெனில் நான் தற்போது நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைக்கும் வருவாயில் அறக்கட்டளைக்கு தேவையான நலத்திட்ட பணிகளை செய்து கொண்டிருக்கிறேன். வேண்டாம் என்று சொல்லும் போது கடவுள் கொடுப்பார் என்று சொல்வார்கள். அது போல் தற்போது சுபாஷ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார். அவருடைய மனம் பெரியது. இதன் மூலம் நிறைய பேரின் பசி தீர்க்கப்படும்.


    இந்த மாணவர்கள் தங்குவதற்கும், நடன பயிற்சி மேற்கொள்வதற்கும் கட்டிடம் ஒன்றை கட்ட வேண்டும் என்று விரும்பினார்கள். நீங்கள் வழங்கும் அந்த நன்கொடையில் இந்த மாணவர்களுக்காக ஒரு இடத்தை வாங்கி, அவர்களுக்கான கட்டிடம் ஒன்றை கட்டி, அதற்கு உங்களின் தாயாரின் பெயரை சூட்டுவோம். இவை அனைத்தும் இன்னும் ஒரு வருடத்தில் நிறைவேறும் என உறுதியளிக்கிறேன்.

    சந்திரமுகியாக கங்கனா நடிக்கப் போகிறார் என வாசு சார் சொன்னவுடன், அவர் மிகவும் துணிச்சல் மிக்கவர். சமூக வலைதளங்களில் தீவிரமாக தனது கருத்தை பதிவு செய்பவர். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர் என்பதால் எப்படி நடந்து கொள்வாரோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் முதல் நாள் வருகை தரும் போது அவருடன் துப்பாக்கி ஏந்திய காவலர்களும் வந்தனர். அவர் ஒரு கலைஞர்தானே எதற்கு அவருடன் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வரவேண்டும்? என எண்ணினேன். இது தொடர்பாக வாசுசாரிடம் கேட்டபோது. 'அவர் இப்படித்தான். அவருக்கு சில பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயுதம் எழுதிய காவலர்கள் உடன் வருவார்கள்' என விளக்கம் சொன்னார்.


    அப்போது அவரைப் பார்த்து வணக்கம் சொல்வதற்கு கூட பயமாக இருந்தது. அதன் பிறகு அவரிடம் என் எண்ணத்தை பகிர்ந்து கொண்டேன். அவர் உடனடியாக ஆயுதம் ஏந்திய காவலர்களிடம் பேசி அவர்களை சற்று தொலைவில் நிற்க வைத்தார். அதன் பிறகு கங்கனாவிடம் பழகத் தொடங்கி, கங்கனா என்றேன். அதன் பிறகு கங்கு என்றேன். படப்பிடிப்பு தளத்தில் அவரும் கலாட்டா செய்வார். மகிழ்ச்சியாக இருப்பார். உற்சாகத்துடன் இருப்பார். நான் பழகியதில் குழந்தை உள்ளம் கொண்ட நடிகை என கங்கனாவை சொல்லலாம் அவர் இந்த படத்தில் நடித்திருப்பது படத்திற்கு பலம். '' என்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியின் போது ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்காக லைகா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

    • 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.
    • ‘புஷ்பா’ திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் தமிழ் சினிமாவிற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து 'புஷ்பா' திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், "தேசிய விருது பட்டியலில் இடம்பிடித்ததைத் தொடர்ந்து இளையராஜா சாரிடம் சென்று ஆசிபெற்றேன். நீங்கள் கொடுத்த அனைத்து உத்வேகத்திற்கும் நன்றி இளையராஜா சார். அதுவே என்னை தேசிய விருதிற்கு அழைத்து சென்றது" என்று பதிவிட்டுள்ளார்.




    • 'லியோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • ‘நான் ரெடி தான்’ பாடல் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகி தற்போது வரை ரசிகர்களை கவனம் ஈர்த்து வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் 'நான் ரெடி தான்' பாடல் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகி தற்போது வரை ரசிகர்களை கவனம் ஈர்த்து வருகிறது.


    இந்நிலையில், 'நான் ரெடி தான்' பாடல் கொரியன் வெர்ஷன் வெளியாகியுள்ளது. அதாவது, தென் கொரியா நாட்டை சேர்ந்த பாடகர் ஒருவர் 'நா ரெடி தான்' பாடலின் கொரியன் வெர்ஷனை பாடி அதற்கு நடனமாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    • 80 வயதான தேவ் கோஹ்லி அந்தேரியில் உள்ள வீட்டில் காலமானார்.
    • தேவ் கோஹ்லியின் இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.

    மும்பை:

    'யே காளி-காலி ஆங்கேன்', 'தில் தீவானா பின் சஜ்னா கே மானே நா' மற்றும் 'சல்டி ஹை க்யா நௌ சே பாரா' போன்ற மறக்கமுடியாத சூப்பர்ஹிட் பாலிவுட் பாடல்களை எழுதிய மூத்த பாடலாசிரியர் தேவ் கோஹ்லி இன்று காலமானார்.

    80 வயதான தேவ் கோஹ்லி அந்தேரியில் உள்ள வீட்டில் காலமானார்.

    அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை ஓஷிவாரா மயானத்தில் நடைபெறுகிறது. கோஹ்லியின் உடல் மக்கள் மற்றும் அவரது ரசிகர்களுக்காக பிற்பகல் 2 மணி வரை அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

    நவம்பர் 2, 1942 அன்று ராவல்பிண்டியில் (இப்போது பாகிஸ்தான்) ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்த கோஹ்லி, கருப்பு-வெள்ளை முதல் வண்ணத் திரைப்பட சகாப்தம் வரை இசை ஆர்வலர்களின் தலைமுறைகளை பரவசப்படுத்திய பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அஜித் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’.
    • இப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார்.

    எச். வினோத் இயக்கத்தில் வெளியான 'துணிவு' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி மாதங்கள் பல கடந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.


    அதுமட்டுமல்லாமல் அஜித்தும் உலக சுற்றுப்பயணம் சென்றுவிட்டார். இதனால் குழப்பமான ரசிகர்கள் 'விடாமுயற்சி' திரைப்படம் கைவிடப்பட்டதா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சுபாஷ்கரன் "அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது" என்று கூறினார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • தமிழ் சினிமாவிற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • தேசிய விருது பட்டியலில் இடம் பிடித்த படக்குழுவினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் தமிழ் சினிமாவிற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தேசிய விருது பட்டியலில் இடம் பிடித்த படக்குழுவினருக்கு திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இது ஒருபுறம் இருக்க 'ஜெய்பீம்', 'கர்ணன்', 'சார்ப்பட்டா பரம்பரை' போன்ற படங்களுக்கு விருது கிடைக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு தேசிய விருது பட்டியல் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


    இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரன் 'ஜெய்பீம்' படத்திற்கு தேசிய விருது ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு விருது கிடைக்காதது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்ற ஆயிரம் கேள்விகள். 5 விருதுகள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்ததற்கு மகிழ்ச்சி வாழ்த்துகள் என்று கூறினார்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘லியோ’.
    • இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.


    இந்நிலையில், இப்படத்தில் இணைந்துள்ள பிரபலம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'லியோ' திரைப்படத்தில் நடிகை கிரண் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதனை அவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
    • ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் போட்டி போட்டு ஆடும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் போட்டி போட்டு ஆடும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


    இந்நிலையில், 'நாட்டு நாட்டு' பாடல் பாடிய பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச், தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்ப்பில் போட்டியிட விண்ணப்பம் செய்துள்ளதாகவும் கோஷமஹால் தொகுதியில் அவர் களமிறக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    ×