என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![ஆந்திர முதல் மந்திரியிடம் ஐபிஎல் கோப்பையை காண்பித்து மகிழ்ந்த அம்பதி ராயுடு ஆந்திர முதல் மந்திரியிடம் ஐபிஎல் கோப்பையை காண்பித்து மகிழ்ந்த அம்பதி ராயுடு](https://media.maalaimalar.com/h-upload/2023/06/08/1895022-rayudu.webp)
X
ஆந்திர முதல் மந்திரியிடம் ஐபிஎல் கோப்பையை காண்பித்து மகிழ்ந்த அம்பதி ராயுடு
By
மாலை மலர்8 Jun 2023 8:04 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
- இந்த தொடருடன் சென்னை அணியின் அம்பதி ராயுடு ஓய்வு முடிவை அறிவித்தார்.
அமராவதி:
சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
இந்த தொடருடன் சென்னை அணியின் அம்பதி ராயுடு ஓய்வு முடிவை அறிவித்தார்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பதி ராயுடு, ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை இன்று சந்தித்தார். அப்போது சிஎஸ்கே வென்ற ஐ.பி.எல். கோப்பையை காண்பித்து மகிழ்ந்தார். ஐ.பி.எல். 2023 போட்டியில் வெற்றி பெற்றதற்காக சிஎஸ்கே அணிக்கு முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, ஆந்திராவில் விளையாட்டு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்லேன் என அம்பதி ராயுடு முதல் மந்திரியிடம் தெரிவித்தார், அதற்கேற்ப திட்டம் வகுக்கப்படும் என முதல் மந்திரி உறுதியளித்தார்.
Next Story
×
X