என் மலர்
கிரிக்கெட் (Cricket)
2வது டி20 போட்டியிலும் அசத்தல் வெற்றி - உலக சாம்பியனை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்
- முதலில் ஆடிய இங்கிலாந்து 117 ரன்களில் ஆல் அவுட்டானது.
- வங்காளதேச அணியின் மெஹிதி ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
டாக்கா:
வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் இடையிலான 2வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வங்காளதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் சால்ட் 25 ரன்னும், டக்கட் 28 ரன்னும் எடுத்தனர்.
வங்காளதேச அணியின் மெஹிதி ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்காளதேசம் களம் இறங்கியது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், அந்த அணியின் ஷாண்டோ நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.
இறுதியில், வங்காளதேச அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. அத்துடன், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது.