என் மலர்
கிரிக்கெட் (Cricket)
உலகக்கோப்பை- 93 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.
- இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை குவித்தது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தங்களது கடைசி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய டேவிட் மலான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ முறையே 31 மற்றும் 59 ரன்களை குவித்தனர். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 60 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். அடுத்தடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். போட்டி முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை குவித்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்டுகளையும், ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர், 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. இதில், அதிகபட்சமாக அகா சல்மான் 51 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து, பாபர் அசாம் 38 ரன்கள், முகமது ரிஸ்வான் 36 ரன்கள், சவுட் ஷகீல் 29 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.
பகார் சமான், இஃப்திகர் அகமது, ஷதாப் கான் ஆகியோர் ஒற்றை இலக்குடன் வெளியேறினர்.
35.3 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான் அணி.
களத்தில், அகா சல்மான் மற்றும் ஷஹீன் அஃப்ரிதி ஜோடி விளையாடினர். சல்மான் 51 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பிறகு, அஃப்ரிதியுடன் முகமது வாசிம் ஜோடி சேர்ந்தார்.
79 பந்துகளில் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வந்தது.
இதில், அஃப்ரிடி 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், முகமது வாசிமுடன் ராஃப் ஜோடி சேர்ந்தார். இதில், ஹரிஸ் ராஃப் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், பாகிஸ்தான் அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதனால், 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழத்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தாலும் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது. இதனால், அரையிறுதியில் 4வது அணியாக நியூசிலாந்து அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.