என் மலர்
கிரிக்கெட் (Cricket)
தென் ஆப்பிரிக்காவில் டி20 லீக் போட்டி தொடர் அறிமுகம்
- இந்த போட்டிகளில் பங்கேற்க ஆறு அணிகள் உருவாக்கம்.
- ஜோகனஸ்பர்க் அணியை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரைப் போன்று தென் ஆப்பிரிக்காவில் சி.எஸ்.ஏ. டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்த போட்டிகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த லீக் தொடருக்காக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 6 அணிகள் உருவாக்கப்படுகின்றன. அந்த அணிகளை இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அந்த வகையில் ஜோகனஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.
இதே போல் கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணியை ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணியை டெல்லி கேப்பிட்டல் அணி நிர்வாகமும் வாங்கி உள்ளன. இந்த நிலையில் ஜோகனஸ்பர்க் அணிக்கு முதல் கட்டமாக 5 முக்கிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீட்சனா, ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி என 5 வீரர்கள் ஜோகனஸ்பர்க் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீட்சனா ஆகியோர் ஏற்கனவே சென்னை அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.