என் மலர்
கிரிக்கெட் (Cricket)
பிறந்த நாள் அன்று சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி
- இந்தியா 50 ஓவருக்கு இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது.
- சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 49வது சதம் இதுவாகும்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
மதியம் 2 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் முடிவில், 50 ஓவருக்கு இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது.
கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்த நாளான இன்று விராட் கோலி சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.
மேலும், இந்த போட்டியில் ஆடிய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 49வது சதம் இதுவாகும். இந்த சதத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்ரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.