search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலகக் கோப்பை வெற்றி பேரணி: மும்பை போலீசுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி
    X

    உலகக் கோப்பை வெற்றி பேரணி: மும்பை போலீசுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி

    • வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ம் தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    டி20 உலகக் கோப்பையை 17 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    இதற்கிடையே, வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது. வெற்றி பேரணி மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மும்பை கடற்கரையில் 7 முக்கிய சாலைகள் மூடப்பட்டன. 10 இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இரவு 7. 30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். பின் வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.

    இந்நிலையில், இந்த அணிவகுப்பு பேரணியை வெற்றிகரமாக நடத்த உதவி புரிந்த மும்பை போலீசுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, கோலி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை போலீசின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆழ்ந்த மரியாதை மற்றும் மனமார்ந்த நன்றி. இந்தியாவின் வெற்றி அணிவகுப்பின் போது ஒரு அற்புதமான வேலை செய்ததற்காக மும்பை கமிஷனருக்கும் நன்றிகள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மிகவும் பாராட்டப்படுகிறது. ஜெய் ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×