search icon
என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
    • மூன்றாம் கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட தேர்தலில் 24 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 26 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்ட தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

    ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன.

    முதல் கட்ட தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடந்து முடிந்தது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரவு 7.30 மணி நிலவரப்படி 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதிகபட்சமாக கிஷ்ட்வாரில் 77.23 சதவீதமும், குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.03 சதவீத வாக்குகளும் பதிவாகின.

    தேர்தல் அமைதியாக நடைபெற துணை ராணுவப் படையினர், ஜம்மு காஷ்மீர் ஆயுதப் படையினர், போலீசார் ஆகியோர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக அக்டோபர் 1-ம் தேதியும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    • முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில் இன்று தோ்தல் நடைபெற்றது.
    • முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

    ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை தோ்தல் நடைபெறுகிறது.

    ஜம்மு- காஷ்மீ ருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டசபைத் தோ்தல் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ஜம்மு- காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டசபையில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தோ்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி, காஷ்மீரில் முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில் இன்று (புதன்கிழமை) தோ்தல் நடைபெற்றது.

    இதில், 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன. மொத்தம் 219 வேட்பாளா்கள் இத்தோ்தலில் களத்தில் நின்றனர். இதில் 90 போ் சுயேச்சை வேட்பாளா்கள்.

    தோ்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறு வதை உறுதிசெய்ய பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. துணை ராணுவப் படையினா், ஜம்மு- காஷ்மீா் ஆயுதப் படையினா், போலீசார் ஆகியோா் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

    முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதலே வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று முடிந்தது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    பின்னர், முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. 

    இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பா் 25-ந்தேதியும், 3-ம் கட்ட மாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ந்தேதியும் தோ்தல் நடத்தப்படவுள்ளது. அடுத்த மாதம் (அக்டோ பா்) 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    • காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • அவர்களின் எண்ணம் வாக்குகளை பிரிப்பதுதான். மக்கள் அவர்களுடைய வாக்குகள் துண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும்.

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களின் எண்ணம் வாக்குகளை பிரிப்பதுதான். மக்கள் அவர்களுடைய வாக்குகள் துண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும் என தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா வாக்களர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீரில் 24 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேசிய மாநாடு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கூறியதாவது:-

    ஏராளமானோர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள் என்பதை மக்கள் மனதில் வைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களில் அதிகமானோர் காஷ்மீரில் உள்ளனர். இது வாக்குகளை துண்டாக்கவும், மக்களை பிரிப்பதற்கான முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

    இந்த விசயத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் என நம்புகிறேன். இந்த தேர்தலில் வாக்குகள் துண்டாடப்படுவதை தவிர்க்கவும்.

    தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கரிஸ் கட்சி கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். இருந்தபோதிலும் வாக்காளர்கள் அதை முடிவு செய்வார்கள். எங்களுடைய திட்டங்களை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • வாக்காளர்கள் ஆர்வமாக காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

    ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளுக்கும், ஜம்மு பிராந்தியத்தில் 8 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

    • பாராமுல்லா மாவட்டம் சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் நடந்த மோதல் நடந்தது
    • வீட்டின் காம்பவுண்ட் சுவரின் அருகில் இருந்து பக்கத்தில் உள்ள மரங்களை நோக்கி பயங்கரவாதிகள் ஓடுகின்றனர்

    காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் உள்ள சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள்-பாதுகாப்புப் படையினர் இடையே கடந்த சனிக்கிழமை அன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் காயமடைந்த 2 வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஒளிந்திருந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கியால் தாக்கினர். கதுவா பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    இதையடுத்து அன்றைய தினமே பாராமுல்லா மாவட்டம் சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பான பரபரப்பூட்டும் டிரோன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

    அந்த வீடியோவில் வீட்டின் காம்பவுண்ட் சுவரின் அருகில் இருந்து பக்கத்தில் உள்ள மரங்களை நோக்கி பயங்கரவாதிகள் ஓடுவதும், ஒருவன் தரையில் விழுந்து தவழ்ந்து செல்லும்போது ராணுவ வீரர்களின் துப்பாக்கி குண்டுகள் கான்கிரீட் சுவரைத் துளைத்து அப்பகுதியை புழுதிப் புகை சூழ்வதும் பதிவாகியுள்ளது. இதனால் பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் குண்டடிபட்ட பயங்கரவாதி  உயிருக்கு போராடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

    • மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய விசாரணை நடத்தாமல் தட்டிக்கழித்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
    • ங் கமாண்டர் கைதில் இருந்து தப்பிக்க முன் ஜாமீன் கோரி காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்

    ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் விமானப்படை விங் கமாண்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் அதிகாரி [flying officer] போலீசில் புகார் அளித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீ நகர் படைத்தளத்தில் உள்ள விங் கமாண்டர் தன்னை கடந்த கடந்த 2023 டிசம்பர் 31 அன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாலியல் தொல்லை தந்ததாகவும், அது முதல் அந்த கமாண்டரால் தான் உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைக் ஆளானதாக அந்த அங்கு பணியாற்றி வரும் பெண் அதிகாரி புத்கம் [Budgam] காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய விசாரணை நடத்தாமல் தட்டிக்கழித்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

    இந்த புகார் தொடர்பாக சட்டப்பிரிவு 376(2) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட விங் கமாண்டர் கைதில் இருந்து தப்பிக்க முன் ஜாமீன் கோரி காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் விமானப்படை நிலையத்தில் விங் கமாண்டராக பணிபுரிந்து வருபவர் கைது செய்யப்பட்டால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை தொடரலாம் என்றும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
    • போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ஜம்மு-காஷ்மீர்:

    காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் உள்ள சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள்-பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்கள் விபன் குமார், அரவிந்த் சிங் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 2 வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். அந்த பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் களம் இறங்கியுள்ளனர். அங்கு பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை தொடர்ந்து வருகிறது.

    இதற்கிடையே கதுவா பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    இந்த நிலையில் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

    • ஜம்மு-காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் மெகா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
    • 42 வருடங்களுக்கு பிறகு தோடா செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி பாஜக வேட்பாளரை ஆதரித்து இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெகா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    1982-ம் ஆண்டுக்குப் பிறகு தோடா மாவட்டம் செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோடா மற்றும் கிஷ்த்வார் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், குறிப்பாக பொதுக்கூட்டம் நடைபெற இருக்கும் இடத்தில பலஅடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    செனாப் பள்ளத்தாக்கான தோடா, கிஷ்த்வார் மற்றும் ராம்பன் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 இடங்களுக்கு வருகிற 18-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் பாஜக தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு புத்துணர்வு கொடுக்கும் என பாஜக-வினர் தெரிவித்துள்ளனர்.

    2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பிரதமர் மோடி கிஷ்த்வார் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தோடா மாவட்ட மக்கள் பிரதமர் மோடியை நேரில் பார்க்க ஆர்வமாக இருந்தனர். அதை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடியின் தேர்தல் பேரணி அமைய இருக்கிறது.

    ஜம்மு-வில் பாஜக 43 இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகும்.

    ஜம்மு பகுதி பாஜகவின் செல்வாக்கு மிக்க பகுதியாக விளங்குகிறது. இந்த பிராந்தியத்தில்தான் கடந்து முறை 25 இடங்களில் வெற்றி பெற்றது.

    • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் சண்டை நடந்தது.
    • இந்த என்கவுண்டரில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18 , 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

    தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, கிஷ்ட்வாரின் சாட்ரோ பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    • இந்த முறை அவர்கள் 240 உடன் நிறுத்தப்பட்டார்கள்.
    • இன்னும் 20 இடங்கள் அதிகமாக பெற்றிருந்தால், அவர்கள் அனைவரும் ஜெயிலுக்கு போய் இருப்பார்கள்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    400 பார், 400 பார் என்று சொல்வதை அவர்கள் (பாஜக) பயன்படுத்தினார்கள். அவர்களுடைய 400 இடங்கள் எங்கே போனது?. இந்த முறை அவர்கள் 240 உடன் நிறுத்தப்பட்டார்கள். நாம் இன்னும் 20 இடங்கள் (மக்களவை தேர்தல்) அதிகமாக பெற்றிருந்தால், அவர்களுடைய அனைவரும் ஜெயிலுக்கு போய் இருப்பார்கள். ஜெயிலில் இருக்க அவர்கள் தகுதியானவர்கள்.

    யாரும் கோபப்படக் கூடாது. அதற்குப் பதிலாக போராட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய கேப்டன் வலிமையானவர். பயப்படாதவர். இங்குள்ள எல்லோரும் பயப்படாதவர்கள். ஜம்மு-காஷ்மீர் உள்ள எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க தலைவர்கள் இங்கே உள்ளனர். நாம் வெற்றி பெற வேண்டியது அவசியம். நாம் இணைந்து போராட வேண்டும். போராடும்போது, ஒருவருக்கொருவரும் பரஸப்பர குற்றம்சாட்டக்கூடாது.

    இவ்வாறு கார்கே தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக பாஜக-வின் செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறுகையில் "இது காங்கிரஸ் கட்சியின் எமர்ஜென்சி மனநிலையை நினைவூட்டுகிறது. கார்கே எதிர்க்கட்சி தலைவர்களை ஜெயிலில் அடைக்க விரும்புகிறார். இந்திரா காந்தி ஜெயிலில் அடைத்தார். காங்கிரஸ் அதே மரபை பின்பற்ற விரும்புகிறது. மற்ற கட்சிகளை எதேச்சதிகாரம் எனக் கூறும்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எதேச்சதிகார செயல்களை பற்றி ஏதும் சொல்வதில்லை" என பதிலடி கொடுத்தார்.

    • ஜம்மு காஷ்மீரில் காங்கிரசும், தேசிய மாநாட்டு கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன.
    • அங்கு ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மூன்று கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டு கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன. ஜம்மு காஷ்மீரில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலையொட்டி அனந்தநாக் மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜம்மு காஷ்மீரில் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3000 வழங்கப்படும்.

    அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சத்தில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

    ஒரு லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்புதல், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 11 கிலோ அரிசி வழங்கப்படும்.

    சுய உதவிக் குழுப் பெண்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் குடியேறிய காஷ்மீர் பண்டிட்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும்.

    பொது விநியோக திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 11 கிலோ தானியம் வழங்கப்படும்.

    ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளை பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் பறித்துவிட்டனர். அவ்வாறு பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுப்போம் என்பதே எங்களின் வாக்குறுதி என தெரிவித்தார்.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் கவனம் பெற்று வருகிறது.

    • கடந்த இரண்டு வருடங்களாக தொடர் பாலியல் பலாத்காரத்துக்கும் மன ரீதியான சித்திரவதைக்கும் உட்படுத்தியதாக தெரிவித்துள்ளார்
    • எனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நான் உணரத் தொடங்கினேன். எனக்கு உடல் மன ரீதியிலான நேர்ந்த சித்திரவதை என்னால் விவரிக்க முடியவில்லை.

    ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் விமானப்படை விங் கமாண்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் அதிகாரி [ flying officer] போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ நகரில் உள்ள படைத்தளத்தில் உள்ள விங் கமாண்டர் தன்னை கடந்த இரண்டு வருடங்களாக தொடர் பாலியல் பலாத்காரத்துக்கும் மன ரீதியான சித்திரவதைக்கும் உட்படுத்தியதாக அந்த அங்கு பணியாற்றி வரும் பெண் அதிகாரி புத்கம் [Budgam] காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அவரது புகாரில், கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று ஆபிசர்களின் மெஸ்ஸில் வைத்து நடந்த நியூ இயர் பார்ட்டியின்போது எனக்கு பரிசு கிடைத்ததா என்று அந்த கமாண்டர் கேட்டார். நான் கிடைக்கவில்லை என்று சொன்னதும், அங்குள்ள அறையில் இருப்பதாக கூறி தனியாக அழைத்துச்சென்றார். பின் அங்கு தன்னை ஓரல் செக்ஸுக்கு கட்டாயப்படுத்தி துன்புறுத்தினார். என்னை விட்டுவிடும்படி எவ்வளவோ கெஞ்சியும் அவர் என்னை விடவில்லை. அவரின் பிடியை விடுவித்துக்கொண்டு நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். தொடர்ந்து அடுத்த வெள்ளிக்கிழமை அவரது குடும்பத்தினர் சென்ற பிறகு என்னை வந்து சந்திப்பதாக கூறினார்.

    எனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நான் உணரத் தொடங்கினேன். எனக்கு உடல் மன ரீதியிலான நேர்ந்த சித்திரவதை என்னால் விவரிக்க முடியவில்லை. கடந்த ஜனவரியில முதலில் இதை வெளியில் சொல்ல முடியாமல் இருந்தேன். பின் எனது தோழிகளிடம் இதை சொன்னேன். அவர்கள் அளித்த தைரியத்தில் மேல் அதிகாரிகளிடம் இதை சொன்னேன். ஆனால் இந்த புகாரில் நான் குற்றம் சாட்டிய கமாண்டரே எனது ஸ்டேட்மெண்டை பதிவு செய்ய அனுப்பப்பட்டார்.

    வேறு அதிகாரிகள் இல்லாமல் நான் எனது ஸ்டேட்மெண்டை சொல்ல மாட்டேன் என்று மறுத்தேன். பின் நிர்வாகத்தின் தவறை மறைக்க நான் அளித்த புகாரை ஓரங்கட்டி விட்டனர். மேலும் இதன்பின் நான் மீண்டும் புகார் அளித்தும் அது தட்டிக்கழிக்கப்பட்டது. எனக்கு விமாப்படையில் இருந்து ஓய்வு அளிக்கும்படி நான் பல முறை கேட்டேன். அனால் அதுவும் மறுக்கப்பட்டது. தொடர்ந்து இங்கு நடக்கும் நிகழ்வுகளில் அந்த கமாண்டருடன் பங்கேற்க நான் வற்புறுத்தப்பட்டேன். 24 மணிநேரமும் நான் பயத்திலேயே வாழ்கிறேன் என்று போலீசில் அளித்த அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார். 

    ×