search icon
என் மலர்tooltip icon

    ஜார்கண்ட்

    • அவரது வீட்டு வாசல் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கினார்.
    • முன்னதாக டோனியை சந்திக்க டெல்லியில் இருந்து சென்னை பயணம் செய்தார்.

    இந்திய அணியின் வெற்றிகர கேப்டன்களில் ஒருவர் எம்.எஸ். டோனி. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்ட எம்.எஸ். டோனி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். உலகளவில் எம்.எஸ். டோனிக்கு ரசிகர்கள் அதிகம்.

    இந்த நிலையில், எம்.எஸ். டோனியை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர் ஒருவர் டெல்லியில் இருந்து 1200 கிலோமீட்டர்கள் சைக்கிளில் பயணம் செய்து ராஞ்சி வந்தடைந்தார். ராஞ்சியில் உள்ள எம்.எஸ். டோனியின் வீட்டு வாசலில் கூடாரம் அமைத்து தங்கிய ரசிகர், டோனினை சந்திக்காமல் வீடு திரும்புவதில்லை என்ற கணக்கில் அங்கேயே தங்க ஆரம்பித்தார்.

    டெல்லியை சேர்ந்த கௌரவ் குமார், தனது சைக்கிள் பயணம் மற்றும் எம்.எஸ். டோனியை பார்க்கும் ஆசை மற்றும் அதற்கான முயற்சி உள்ளிட்ட தகதவல்களை தனது சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார். அதன் மூலம் டோனிக்கு எப்படியும் தகவல் கிடைத்து, அவரை பார்க்க முடியும் என்று அவர் கணக்கிட்டு இருந்தார்.

    கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் வரை எம்.எஸ். டோனியை சந்திக்க அவரது வீட்டு வாசல் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கிய நிலையில் கௌரவ் குமார் ஒருவழியாக எம்.எஸ். டோனியை சந்தித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

     


    இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், "நான் டெல்லியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்து டோனியை சந்திக்க திட்டமிட்டேன், ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. இதனால் சென்னையில் இருந்து புறப்பட்டு மீண்டும் டெல்லி வந்துவிட்டேன்."

    "தற்போது டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு பயணம் செய்தேன். அங்கு 5-6 நாட்கள் காத்திருந்த பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்ககு. தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையின் அடுத்த பயணத்தை துவங்க தயாராகி இருக்கிறேன்," என பேசியுள்ளார்.

    • ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சியில் மீண்டும் ஒருமுறை பங்கெடுக்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்துள்ளது.
    • திட்டங்கள் பழங்குடி மக்களின் நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்ததாக இருக்கும் என்றார்.

    ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதிக்கு பிரதமர் இன்று வருகை தந்திருந்நதார். அங்கு, ரூ.83,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததுடன், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 15-ந்தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்நிைலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில், "ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சியில் மீண்டும் ஒருமுறை பங்கெடுக்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஜாம்ஷெட்பூரில் பல நூறு கோடிகள் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தேன்.

    பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஜார்க்கண்டில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் வீடுகளை பெற்றுள்ளனர். தற்போது மீண்டும் 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்கள் ஜார்க்கண்டில் தொடங்கி வைக்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் பழங்குடி மக்களின் நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்ததாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஊருக்குள் புகுந்து மக்களை பிளவுபடுத்தி கலவரங்களை ஏற்படுத்த முயலும் அத்தகு தீய சக்திகளை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்
    • கோவில்கள் மற்றும் மசூதிகள் மீது இறைச்சித் துண்டுகள் வீசப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மும்முரம் காட்டி வரும் வேலையில் பாஜக தேசிய தலைவர்கள் ஜார்கண்ட் மாநிலத்துக்கு விசிட் அடிக்கத் தொடங்கியுள்ளனர். ஹேமந்த் சோரன் பக்கம் இருந்த சம்பாய் சோரன் சமீபத்தில் பாஜக பக்கம் சாய்ந்தது ஜேஎம்எம் கட்சிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    ஆனால் அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு நடக்க உள்ள பிரச்சாரமே வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படும். எனவே எதிரணிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர். ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்துது டிஜிட்டல் திரை மூலம் பேரணியில் பேசிய ஹேமந்த் சோரன், பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஜார்கண்டில் பிரச்சாரம் செய்து வருவதை சுட்டிக்காட்டி பாஜக அங்குள்ள இந்து முஸ்லீம் சமூகங்களிடையே சண்டை மூட்ட முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் பெருச்சாளிகளை போல் மாநிலத்துக்கும் ஊடுருவி அழிவு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் ஹந்தியா[handia] தாறு [daru] [உள்ளூர் மது வகைகள் ] உடன் ஊருக்குள் புகுந்து மக்களை மயக்கி பிளவுபடுத்தி கலவரங்களை ஏற்படுத்த முயலும் அத்தகு தீய சக்திகளை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் சமீபத்தில் அம்மாநிலத்தில் பல பகுதிகளில் கோவில்கள் மற்றும் மசூதிகள் மீது இறைச்சித் துண்டுகள் வீசப்பட்ட  சம்பவங்களை சுட்டிக்காட்டி மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். வியாபாரிகளும் தொழிலதிபர்களும் நடத்தும் பாஜக கட்சி தனது பண பாலத்தின் மூலம் அரசியல் தலைவர்களையும் விலைக்கு வாங்குகிறது என்று சம்பாய் சோரன் பாஜக பக்கம் சென்றதையும் மறைமுகமாக சாடியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜார்க்கண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், ஜார்க்கண்டில் நிலவும் இருள் மறைந்து விரைவில் மாற்றம் வரும் என்றார்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் பஹரகோரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரியும், ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பொறுப்பாளருமான சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஜார்க்கண்டில் நடைபெறுவது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆட்சி அல்ல, ஹேமந்த் சோரனின் குற்றம், கொலை, கொள்ளை அரசு என காட்டமாகத் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:

    இந்தக் கூட்டத்துக்கு மேகங்கள் திரண்டு வந்து நெருக்கடியாக உள்ளன. ஆனால் இந்த மேகங்களை விட ஹேமந்த் சோரன் அரசு பெரிய நெருக்கடியாக உள்ளது.

    இது ஜே.எம்.எம். அரசு அல்ல, ஹேமந்த் சோரன் நடத்தும் குற்றம், கொலை, கொள்ளை அரசு.

    ஜார்க்கண்டில் நிலவும் இருள் மறைந்து விரைவில் மாற்றம் வரும்.

    மேகங்கள் பொழிகின்றன, மின்னல்கள் மின்னுகின்றன, கனமழை பெய்கிறது, ஆனால் இன்னும் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக உள்ளீர்கள்.

    இதைப் பார்த்தால் விரைவில் இருள் மறையும், சூரியன் உதிக்கும். தாமரை மலர்ந்து மாற்றம் வரும் என தெரிவித்தார்.

    • 4 கூட்டங்களை இன்று தேர்தல் கமிஷன் நடத்துகிறது.
    • 4 கூட்டங்களை இன்று தேர்தல் கமிஷன் நடத்துகிறது. 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

    ராஞ்சி:

    81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜ்குமார் தலைமையிலான தேர்தல் குழு இன்று ஜார்க்கண்ட் சென்றது. 4 கூட்டங்களை இன்று தேர்தல் கமிஷன் நடத்துகிறது.

    அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை மேற்கொண்டது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்படுகிறது. ஜார்க்கண்டில் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

    2019-ம் ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. டிசம்பர் 23-ந்தேதி தேர்தல் முடிவு வெளியானது.

    • கட்சி கூட்டணியில் போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை மாநில தலைமை முடிவு செய்யும்.
    • திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுதியதாக கூறப்படும் சம்பவம் கவலைக்குரியது மற்றும் கண்டனத்துகுரியது.

    ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மக்கள் அவருக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.

    கர்வா மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஹேமந்த் சோரன், மாநிலத்தில் நடந்து வரும் பா.ஜ.க.வின் 'பரிவர்தன் யாத்ராக்கள்' (மாற்றத்திற்கான பேரணிகள்) பற்றி குறிப்பிடுகையில், மற்ற மாநிலங்களின் தலைவர்கள் "கழுகுகள் போல் சுற்றிக் கொண்டிருப்பதை காண முடிகிறது" என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில், ஜார்க்கண்டிற்கு வந்த மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வரின் இத்தகைய பேச்சுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். வரவிருக்கும் தேர்தலில் மக்கள் தீர்ப்பு அனைத்தையும் சொல்லும்.

    கட்சி கூட்டணியில் போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை மாநில தலைமை முடிவு செய்யும். திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுதியதாக கூறப்படும் சம்பவம் கவலைக்குரியது மற்றும் கண்டனத்துகுரியது. இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பிரதமர் நரேந்திர மோடியால் தற்போது வெளிநாடுகளில் இந்தியாவின் மரியாதை உயர்ந்துள்ளது. இப்போது இந்தியா சொல்வதை உலகமே கேட்கிறது என்றார்.

    • காலை 8 மணி முதல் மதியம் 1:30 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும்.
    • 650,000 பேர் பரீட்சைக்கு பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த போட்டித் தேர்வின் (JGGLCCE) முறைகேடுகளைத் தடுக்க, மாநிலம் முழுவதும் விரிவான இணையத் தடையை ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் 24 மாவட்டங்களில் உள்ள பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெறுவதை ஒட்டி, காலை 8 மணி முதல் மதியம் 1:30 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜார்க்கண்ட் முழுவதும் மொபைல் இணையம், மொபைல் டேட்டா மற்றும் மொபைல் வைஃபை சேவைகளை அனைத்து சேவை வழங்குநர்களிடமிருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், இந்த காலகட்டத்தில் நிலையான தொலைபேசி இணைப்புகள் வழியாக கால் அழைப்பதற்கும்பிராட்பேண்ட் இணைப்பு தொடர்ந்து செயல்படக்கூடும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

    இதுகுறித்து ஜார்கண்ட் அரசு கூறுகையில், "முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் சில நேர்மையற்ற நபர்கள் பல்வேறு மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி முறைகேடாக தேர்வு எழுதிய சம்பவம் நடந்தது."

    ஏறக்குறைய 650,000 பேர் பரீட்சைக்கு பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அது "இலவசமாகவும், நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும்" நடத்தப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

    • கிழக்கு இந்தியாவில் ரெயில் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியமும் வளர்ச்சி அடையும்.
    • ரெயில்வே இணைப்பு நெட்வொர்க்கில் 100 சதவீதம் மின்மயமாக்கல் உள்ள மாநிலங்களில் ஜார்கண்ட் ஒன்றாகும்.

    ராஞ்சி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் சென்றார். ராஞ்சியில் அவர் 6 புதிய வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.

    டாடாநகர்-பாட்னா, பிரம்மபூர்-டாடாநகர், ரூர்கேலா-அவுரா, தியோகர்-வாரணாசி, பாகல்பூர்-அவுரா, கயா-அவுரா ஆகிய 6 புதிய வந்தே பாரத் ரெயில்கள் தொடங்கப்பட்டுள்ளன.

    அங்குள்ள டாடாநகரில் இருந்து பிரதமர் மோடி வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் அங்கு செல்ல முடியவில்லை. இதை தொடர்ந்து ராஞ்சியில் இருந்து காணொலி வாயிலாக 6 புதிய வந்தே பாரத் ரெயில்களையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அதை தொடர்ந்து மோடி ரூ.660 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்தின் கீழ் 32 ஆயிரம் பயனாளிகளுக்கு அனுப்பி கடிதங்கள் வழங்கினார். மேலும் வீடுகள் கட்டுவதற்கு முதல் தவணையாக ரூ.32 கோடியை விடுவித்தார். இதையடுத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

    6 புதிய வந்தே பாரத் ரெயில்கள், திட்டங்கள் ரூ.650 கோடி, இணைப்பு மற்றும் பயண வசதிகள் விரிவாக்கம், மற்றும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடு ஆகிய திட்டங்களுக்காக ஜார்கண்ட் மக்களை நான் வாழ்த்துகிறேன்.

    ஜார்கண்ட் வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. ஆனால் தற்போது பல திட்டங்களால் இங்கு முன்னேற்றம் காண முடிகிறது. பழங்குடியினர், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், தலித்துகள் ஆகியோரின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

    கிழக்கு இந்தியாவில் ரெயில் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியமும் வளர்ச்சி அடையும். ஜார்கண்ட் மாநிலத்துக்கு ரெயில்வே மேம்பாட்டுக்கான பட்ஜெட் ரூ.7000 கோடி ஆகும். இதை 10 ஆண்டுகளுக்கு முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இது 16 மடங்கு அதிகம்.

    ரெயில்வே இணைப்பு நெட்வொர்க்கில் 100 சதவீதம் மின்மயமாக்கல் உள்ள மாநிலங்களில் ஜார்கண்ட் ஒன்றாகும். 50-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு மோடி பேசினார்.

    இதை தொடர்ந்து பிரதமர் மோடி ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து ஜாம்ஷெட்பூருக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டார். அங்கு நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

    அவர் நாளை குஜராத் மாநிலத்திற்கும், நாளை மறுநாள் ஒடிசாவுக்கும் சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    • ஜெனரல் மேனேஜர் (GM) பதவியில் உள்ள அரிந்தாம் முஸ்தாபி [Arindam Mustafi] அமைச்சரின் ஷூவை கழற்றினார்
    • அமைச்சர் ஷோபாவில் ரிலாஸ்க்காக அமர்ந்திருக்க முஸ்தாபி இந்த பணிவிடைகளை அவருக்கு செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

    மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கதுரை இணை அமைச்சர் சதீஸ் சந்திர தூபேவின் ஷூவை கழற்றி அவரின் கால் சட்டையை மற்றொருவர் சரி செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்துக்கு வருகை தந்துள்ள அமைச்சர் சதீஸ் சந்திர தூபே தன்பாத் நகரில் உள்ள சுரங்கம் ஒன்றை பார்வையிட சிறப்பு  உபகரணங்கள் அணிந்து தயாராகியுள்ளார்.

    பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (பிசிசிஎல்) என்ற அரசின் நிலக்கரி நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் (GM) பதவியில் உள்ள அரிந்தாம் முஸ்தாபி [Arindam Mustafi] அமைச்சரின் ஷூவை கழற்றி அவர் அணிந்திருந்த பைஜாமா கால் சட்டையின் கயிறை அட்ஜஸ்ட் செய்து பணிவிடை ஆற்றியுள்ளார்.

    அமைச்சர் ஷோபாவில் ரிலாஸ்க்காக அமர்ந்திருக்க முஸ்தாபி இந்த பணிவிடைகளை அவருக்கு செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டங்களை குவித்து வருகிறது. பிசிசிஎல் அதிகாரிகள் தங்களின் ஊழலை மறைப்பதற்காக இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுவதாக தன்பாத் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    • காவலர் உடற்தகுதி தேர்வில் கடும் வெயிலில் 10 கி.மீ தூரத்திற்கு ஓடியுள்ளனர்.
    • மயங்கி விழுந்ததால் சுமார் 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற காவலர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்ற 11 போட்டியாளர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடும் வெயிலில் 10 கி.மீ தூரத்திற்கு அவர்கள் ஓடிய நிலையில், இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயிற்சியின் போது மயங்கி விழுந்ததால் சுமார் 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

    11 பேர் உயிரிழந்ததை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்பதற்காக சம்பாய் சோரன் பதவி விலகினார்.
    • சம்பாய் சோரன் பாஜக-வில் இணைய இருப்பதாக அசாம் மாநில முதல்வர் தெரிவித்தார்.

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார்.

    கடந்த ஜூன் மாதம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் கிடைத்தது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததால், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதற்காக சம்பாய் சோரன் பதவி விலகினார்.

    பின்னர் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பாஜக-வில் இணையப் போவதாக செய்தி வெளியாயின. தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை (30-ந்தேதி) தனது ஆதரவாளர்களுடன் சம்பாய் சோரன் பாஜக-வில் இணைய இருப்பதாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

    அதன்படி, இன்று ராஞ்சியில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைந்தார்.

    • சம்பாய் சோரன். சுமார் 5 மாதங்கள் முதல் மந்திரியாக இருந்தார்.
    • சம்பாய் சோரன் நேற்று முன்தினம் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் சிறை சென்றபோது அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் சம்பாய் சோரன். சுமார் 5 மாதங்கள் அவர் முதல் மந்திரியாக இருந்தார்.

    ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் ஜாமின் கிடைத்த நிலையில், சம்பாய் சோரன் தனது முதல் மந்திரி பதவியில் இருந்து விலகினார். அப்போது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்தார்.

    இதற்கிடையே, சம்பாய் சோரன் சமீபத்தில் டெல்லி சென்று பா.ஜ.க. மூத்த தலைவர்களைச் சந்தித்தார். அப்போதே அவர் பா.ஜ.க.வில் இணையலாம் என தகவல் பரவியது.

    சம்பாய் சோரன் நேற்று முன்தினம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா உடனிருந்தார். இதுதொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், பழங்குடியின தலைவருமான சம்பாய் சோரன், வரும் 30-ம் தேதி ராஞ்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைவார் என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில நலனுக்காக பா.ஜ.க.வில் இணைய முடிவெடுத்துள்ளதாக சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என்ற எனது முடிவானது ஜார்க்கண்ட் மாநிலத்தின் நலன்களைச் சார்ந்தது. நான் போராட்டங்களுக்கு பழக்கப்பட்டு விட்டேன். விரைவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்தும், மந்திரி பதவியில் இருந்தும் விலகுவேன் என தெரிவித்தார்.

    ×