search icon
என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
    • ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    டார்ஜிலிங் மாவட்டத்தில் புதிய ஜல்பால்குரி பகுதியில் கஞ்சன்ஜங்கா விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

    மேலும் ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    • மத்தியில் வலுவான கூட்டணி அரசு அமைந்துள்ளது.
    • தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கம்.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மந்திரி அர்ஜூன் ராம்மேக்வால் கலந்து கொண்டு பேசுகையில், "பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். கோவா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள், பொது சிவில் சட்டத்தை ஏற்கனவே நடைமுறைப்படுத்த தொடங்கி உள்ளன.

    நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். மத்தியில் வலுவான கூட்டணி அரசு அமைந்துள்ளது. இதில் கவலைப்பட ஒன்றுமில்லை" என்றார்.

    பொது சிவில் சட்டம் இன்னும் பா.ஜ.க.வின் திட்டத்தில் உள்ளது என்று மேக்வால் கடந்த வாரமும் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.க. கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் கே.சி.தியாகி, எங்கள் கட்சி பொது சிவில் சட்டத்துக்கு எதிரானது அல்ல. எனினும் இது போன்ற எந்த நடவடிக்கையும் கருத்தொற்றுமை மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என விரும்பு கிறோம்.

    மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் குறித்து விமர்சித்த மத்திய சட்ட மந்திரி, தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்ப வங்கள், சட்டத்தின் ஆட்சி நடக்கும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல.

    தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கம். எந்த ஒரு தேர்தல் முடிவுக்குப் பிறகும் வன்முறை நிகழக்கூடாது. மேற்கு வங்க வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய அரசு விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயலாற்றுகிறது' என்றார்.

    வன்முறை சம்பவங்களை கவனத்தில் கொண்ட கொல்கத்தா ஐகோர்ட்டு, தேர்தலுக்காக மாநிலத்தில் பணி அமர்த்தப்பட்ட மத்திய ஆயுதக் காவல் படையினரின் பாதுகாப்பு பணியை வருகிற 21-ந்தேதி வரை நீட்டித்து உள்ளது.

    இந்த விவகாரம் குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எந்தவொரு நட வடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, வன்முறைகள் குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை பா.ஜ.க. அமைத்தது குறிப்பிடத்தக்கது.

    • அக்ரோபாலிஸ் வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடைகள் என ஏராளமானவை உள்ளன.
    • 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீ விபத்த நிகழ்ந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அக்ரோபாலிஸ் வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த அக்ரோபாலிஸ் வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடைகள் என ஏராளமானவை உள்ளன.

    தீ விபத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வணிக வளாகத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கானோரை பத்திரமாக மீட்டனர். கண்ணாடிகளை உடைத்து உள்ளே சிக்கி இருப்பவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.

    20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

    வணிக வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    • சமூக வலைத்தள பிரபலமான இவரை 9 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
    • வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கலவையான கருத்துகளுடன் வேகமாக பரவுகிறது.

    சாகேலி ருத்ரா என்பவர் 'ரீல்ஸ்' வீடியோ உருவாக்கி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறார். சமூக வலைத்தள பிரபலமான இவரை 9 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

    இந்தநிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு வளாகத்தில் சாகேலி ருத்ரா ஆட்டம் போட்டு புதிய வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

    ஷாருக்கான், தீபிகா படுகோனே ஆகியோர் நடித்து பிரபலமான திரைப்படத்தின் இந்தி பாடலை பின்னணியில் ஒலிக்க செய்து வளைந்து நெளிந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கலவையான கருத்துகளுடன் வேகமாக பரவுகிறது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 2 வது பாதிப்பு பதிவாகியுள்ளது.
    • சிறுவனின் வீட்டு சுற்றுப்புறத்தில் இருக்கும் கோழிப் பண்ணையில் இருந்து இந்த வைரஸ் தாக்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் மேற்கு வங்கத்தில் H9N2 இன்புலுயென்சா வைரஸ் பறவைக் காய்ச்சல் 4 வயது சிறுவனை பாதித்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு [WHO] தெரிவித்துள்ளது. அரிதாக காணப்படும் இந்த வகை வைரஸ் இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 2 வது பாதிப்பு பதிவாகியுள்ளது.

     

    உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் கடந்த பிப்ரவரி மாதம் மூச்சுத்திணறல் மற்றும்  கடுமையான காய்ச்சலால் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனுக்கு H9N2 வைரஸ் உறுதிசெய்யப்பட்டு கடந்த 3 மாதங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பிறகு சிறுவனின் உடல்நிலை தேறி வருகிறது.

     

    சிறுவனின் வீட்டுச் சுற்றுப்புறத்தில் இருக்கும் கோழிப் பண்ணையில் இருந்து இந்த வைரஸ் தாக்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது அல்ல என கூறப்படுகிறது. அரிதான இந்த H9N2 இன்புலுயென்சா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 2 வது முறையாக பதிவாகியுள்ளது மருத்துவம் மற்றும் சுகாதார நோக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிட்டத்தட்ட வாரணாசியை இழந்துவிட்டார்கள், அயோத்தியில் தோற்றுவிட்டார்கள்.
    • ஒட்டுமொத்தமாக பிரசாரம் செய்தும் பெரும்பான்மையை பெறமுடியவில்லை.

    திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, பிரதமராக மோடி பதவியேற்ற ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு இருளில் அமர்ந்திருந்ததாக அக்கட்சியின் எம்பி சகரிகா கோஸ் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக சகரிகா கோஸ் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் பிரதமர் பதவிக்கு கொண்டு வரப்படுகிறார் என்று மம்தா பானர்ஜி அதிருப்தியில் இருந்தார். இதனால் பிரதமர் மோடி பதவியேற்ற போது, நாட்டின் ஒரே ஒரு பெண் முதல்வர் மம்தா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

    கிட்டத்தட்ட வாரணாசியை இழந்துவிட்டார்கள், அயோத்தியில் தோற்றுவிட்டார்கள். ஒட்டுமொத்தமாக பிரசாரம் செய்தும் பெரும்பான்மையை பெறமுடியவில்லை. மோடியை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி பதவியேற்று 24 மணி நேரத்துக்குள்ளாகவே இந்த உண்மை வெளிவந்துள்ளது.
    • பாஜக அலுவலகங்களிலும் அவர் பெண்களிடம் அத்துமீறியுள்ளார்.

    பாஜக ஐடி விங் தலைவரான அமித் மாளவியா மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க பாஜக பார்வையாளராக பணியாற்றினார். அப்போது, அம்மாநிலத்தில் உள்ள பல பெண்களை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாந்தனு சின்ஹா சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத், " பாஜகவிடம் நாங்கள் கோருவது பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதுதான். பிரதமர் மோடி பதவியேற்று 24 மணி நேரத்துக்குள்ளாகவே இந்த உண்மை வெளிவந்துள்ளது. பாஜகவின் மிக முக்கிய பொறுப்பாளர் ஒருவர் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 5 ஸ்டார் ஹோட்டல்களில் மட்டுமில்ல பாஜக அலுவலகங்களிலும் அவர் பெண்களிடம் அத்துமீறியுள்ளார். அமித் மாளவியாவை அவரது பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இந்த பாலியல் குற்றசாட்டுகளை மறுத்துள்ள அமித் மாளவியா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாந்தனு சின்ஹா மீது 10 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

    மேலும், தன்னை பற்றி அவதூறாக வெளியிட்ட சமூக வலைத்தள பதிவை அவர் நீக்க வேண்டும் என்று அமித் மாளவியா கோரியுள்ளார்.

    • பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
    • பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

    இதனால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

    பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு ஆன மோடியை ஆட்சி அமைக்க வருமாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று கேட்டுக்கொண்டார். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார்.

    இந்நிலையில், நாளை பதவியேற்கும் பிரதமர் மோடியின் விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    "இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்காது என யாரும் நினைக்க வேண்டாம். நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நேரம் வரும்போது இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும்" என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

    • மக்களவைக் குழுத் தலைவராக சுதீப் பந்த்யோபாத்யாய் தேர்வு.
    • மாநிலங்களவை கொறடா நதிமுல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவராக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோல், மக்களவைக் குழுத் தலைவராக சுதீப் பந்த்யோபாத்யாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மக்களவை துணைத் தலைவராக ககோலி கோஸ் தஸ்திதார் மக்களவை கொறடா - கல்யாண் பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மாநிலங்களவைக் குழுத் தலைவராக டெரெக் ஓ பிரையன், மாநிலங்களவை துணைத்தலைவராக சகரிகா கோஸ், மாநிலங்களவை கொறடா நதிமுல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • மம்தா பானர்ஜி 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரு சில துணிச்சலான பெண்களை தேர்ந்தெடுத்தார்.
    • 12 பேர் போட்டியிட்ட நிலையில் சுஜாதா மண்டல் மட்டும் 5,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார்.

    மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி இந்தியாவில் தற்போது உள்ள ஒரே பெண் முதலமைச்சர் ஆவார். இவர் 18வது மக்களவையில் தனது கட்சியில் இருந்து 38 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை முன்வைத்துள்ளார்.

    மம்தா பானர்ஜி 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரு சில துணிச்சலான பெண்களை தேர்ந்தெடுத்தார். பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 29 வேட்பாளர்களில் 11 பேர் பெண்களாவர்.

    மஹூவா மொய்த்ரா, சஜ்டா அஹ்மத், மலா ராய், ககோலி கோஷ், ஷர்மிளா சர்கார், ஜூன் மாலியா, ரச்சா பானர்ஜி, சடாப்தி ராய் உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்ட நிலையில் சுஜாதா மண்டல் மட்டும் 5,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார்.

    அந்த வகையில், 18-வது பாராளுமன்றத்திற்கு ஒரு மாநிலத்தில் இருந்து அதிக பெண் எம்.பி.க்கள் செல்லும் மாநிலமாக மேற்கு வங்கம் உருவெடுத்து இருக்கிறது. மேற்கு வங்கத்தில் இருந்து மட்டும் இந்த முறை 11 பெண் உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்ல உள்ளனர்.

    இதே போன்று தமிழகத்தில் இருந்தும் ஐந்து உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளில் வென்றுள்ளது.
    • அசன்சோல் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா ​​வெற்றி பெற்றார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் இந்தியா கூட்டணி 234 இடங்களும் பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும் பாஜக 12 இடங்களிலும் வென்றுள்ளது

    இந்நிலையில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அசன்சோல் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா வெற்றி பெற்றார்.

    பாஜக வேட்பாளர் சுரேந்திரஜீத் சிங் அலுவாலியாவை எதிர்த்து போட்டியிட்ட சத்ருகன் சின்ஹா 59,564 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    சத்ருகன் சின்ஹாவின் மகளான பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்து அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்.
    • அவர் கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும்.

    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி சுமார் 230 தொகுதிகளிலா் முன்னிலை வகிக்கிறது.

    400 தொகுதிகளில் வெற்றிபெறும் எனக்கூறிய பிரதமர் மோடிக்கு இது தோல்வி என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "பிரதமருக்கு ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த முறையை பாஜக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் எனக் கூறினார்.

    மிகப்பெரிய அளவில் கொடுமைகள் செய்த பிறகும், பணம் செலவழித்த பிறகும் மோடி மற்றும் அமித் ஷாவின் ஆணவத்தை இந்தியா கூட்டணி வென்றது. மோடி தோல்வியடைந்துள்ளார். அயோத்தியாவில் கூட தோல்வியடைந்துள்ளார்.

    மோடியை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவும், இந்தியா கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வருதற்கான முயற்சியை மேற்கொள்வேன். பிரதமர் மோடி ஏராளமான கட்சிகளை உடைத்துள்ளார். மக்கள் அவரின் உறுதியை உடைத்துள்ளனர்" என்றார்.

    ×