search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேற்கு வங்கத்தில் இருந்து 11 பெண் எம்.பி.க்கள்- மாஸ் காட்டிய மம்தா பானர்ஜி
    X

    மேற்கு வங்கத்தில் இருந்து 11 பெண் எம்.பி.க்கள்- மாஸ் காட்டிய மம்தா பானர்ஜி

    • மம்தா பானர்ஜி 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரு சில துணிச்சலான பெண்களை தேர்ந்தெடுத்தார்.
    • 12 பேர் போட்டியிட்ட நிலையில் சுஜாதா மண்டல் மட்டும் 5,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார்.

    மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி இந்தியாவில் தற்போது உள்ள ஒரே பெண் முதலமைச்சர் ஆவார். இவர் 18வது மக்களவையில் தனது கட்சியில் இருந்து 38 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை முன்வைத்துள்ளார்.

    மம்தா பானர்ஜி 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரு சில துணிச்சலான பெண்களை தேர்ந்தெடுத்தார். பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 29 வேட்பாளர்களில் 11 பேர் பெண்களாவர்.

    மஹூவா மொய்த்ரா, சஜ்டா அஹ்மத், மலா ராய், ககோலி கோஷ், ஷர்மிளா சர்கார், ஜூன் மாலியா, ரச்சா பானர்ஜி, சடாப்தி ராய் உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்ட நிலையில் சுஜாதா மண்டல் மட்டும் 5,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார்.

    அந்த வகையில், 18-வது பாராளுமன்றத்திற்கு ஒரு மாநிலத்தில் இருந்து அதிக பெண் எம்.பி.க்கள் செல்லும் மாநிலமாக மேற்கு வங்கம் உருவெடுத்து இருக்கிறது. மேற்கு வங்கத்தில் இருந்து மட்டும் இந்த முறை 11 பெண் உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்ல உள்ளனர்.

    இதே போன்று தமிழகத்தில் இருந்தும் ஐந்து உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×