search icon
என் மலர்tooltip icon

    ஜப்பான்

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடைபெறும் காலிறுதியில் பிரனோய், சீன வீரர் ஜாவோ ஜுன்பெங்குடன் மோதுகிறார்.

    டோக்கியோ:

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென், தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரனோய் உடன் மோதினார்.

    இதில் பிரனோய் 17-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற உள்ள காலிறுதிப் போட்டியில் பிரனாய், சீன வீரர் ஜாவோ ஜுன்பெங்குடன் மோதுகிறார்.

    • மொமோட்டாவுக்கு எதிராக 8 முறை விளையாடி உள்ள பிரனோய் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
    • பெண்கள் இரட்டையர் பிரிவில், அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி இரண்டாவது சுற்றில் தோல்வி

    டோக்கியோ:

    ஜப்பானில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியாவின் பிரனோய் மற்றும் லக்சயா சென் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

    இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பிரனோய், 21-17, 21-16 என்ற நேர்செட்களில் முன்னாள் உலக சாம்பியனான கென்டோ மொமோட்டாவை வீழ்த்தினார். இதுவரை மொமோட்டாவுக்கு எதிராக 8 முறை விளையாடி உள்ள பிரனோய் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

    லக்சயா சென்

    லக்சயா சென்

    மற்றொரு ஆட்டத்தில் லக்சயா சென், ஸ்பெயின் வீரர் லூயிஸ் பெனால்வரை 21-17 21-10 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். நாளை நடைபெறும் ஆட்டத்தில் பிரனோய் மற்றும் சென் ஆகியோர் மோத உள்ளனர்.

    முன்னதாக, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்.ஆர். அர்ஜுன்- துருவ் கபிலா மற்றும், சிராக் ஷெட்டி -சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகிய ஜோடிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறின. ஆனால் பெண்கள் இரட்டையர் பிரிவில், அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்கியது.
    • இந்திய வீரர் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா சார்பில் 25 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

    இந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த், அயர்லாந்தின் நட் குயெனுடன் மோதினார்.

    இதில் கிதாம்பி 22-10, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், மற்றொரு வீரரான ஹெச்.எஸ்.பிரனோய், ஆஸ்திரியா வீரர் லூகா விராபருடன் மோதினார். இதில் பிரனோய் 21-12, 21-11

    என்ற செட் கணக்கில் வென்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கியது.
    • நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா சார்பில் 25 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த போட்டியில் இருந்து விலகி இருப்பது இந்தியாவின் பதக்க வாய்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் டென்மார்க்கின் ஹன்ஸ் கிறிஸ்டியன் விட்டிங்ஹசை எதிர்கொண்டார்.

    இதில் லக்‌ஷயா சென் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

    • உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
    • ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    டோக்கியோ:

    2020-ம் ஆண்டு கொரோனா தீவிரமாக பரவத்தொடங்கியபோது, பதறிக்கொண்டே கட்டுப்பாடுகளை விதித்த நாடுகள் இப்போது அந்த கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டிருக்கின்றன என்பது உண்மை.

    இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

    இதனைத்தொடர்ந்து, புமியோ கிஷிடா தனிமைப்படுத்தப்பட்டு தற்போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சரக்கு கப்பலின் என்ஜின் பகுதியில் இருந்து எண்ணெய் கசிந்துள்ளது
    • அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    டோக்கியோ:

    ஜப்பானின் தென்மேற்கு கடற்பகுதியில் ரசாயன டேங்கர் கப்பலும் சரக்குக் கப்பலும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து இன்று அதிகாலையில் நடந்துள்ளது என்று குஷிமோட்டோ கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

    டேங்கர் கப்பலில் ஆறு ஜப்பானிய பணியாளர்களும், சரக்கு கப்பலில் 14 சீன பணியாளர்களும் இருந்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    சரக்கு கப்பலின் என்ஜின் பகுதியில் இருந்து எண்ணெய் கசிந்ததாகவும், பின்னர் அது சரி செய்யப்பட்டதாகவும் குஷிமோட்டோ கடலோர கவல் படையினர் கூறினார்கள்.

    இரண்டு கப்பல்களும் வாகாயமா மாகாணத்தின் கடற்கரையில் இருந்து 3.5 கிலோ மீட்டர் தொலைவில் நங்கூரமிட்டுள்ளது என்று கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. விபத்து நிகழ்ந்தபோது, டேங்கர் கப்பலில் எந்த ரசாயனமும் ஏற்றப்படவில்லை. எனவே, மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. ஜிபிஎஸ் பதிவுகள் ஆராயப்படுகின்றன. டேங்கர் கப்பல் தங்கள் கப்பலை நோக்கி திடீரென பாய்ந்து வந்ததாக சரக்கு கப்பல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2011-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் வரி வருவாயில் 3 சதவீதம் மது விற்பனையில் இருந்து வந்துள்ளது. இது 2020-ம் ஆண்டு 1.7 சதவீதமாக சரிந்தது.
    • கொரோனாவுக்கு முன்பு பெரும்பாலானோர் பார்களுக்கு சென்று மது அருந்தி வந்தனர்.

    டோக்கியோ:

    ஜப்பானில் கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இளைஞர்களிடம் மது அருந்தும் பழக்கம் குறைந்து உள்ளது.

    மூத்த தலைமுறையினரோடு ஒப்பிடும் போது இளைஞர்கள் குறைவாகவே மது அருந்துகின்றனர். இதனால் அரசுக்கு வரி வருவாயில் அதிகளவு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கு இளைஞர்கள் மது அருந்துவதை குறைந்ததுதான் காரணம் என்பதை அந்நாட்டின் தேசிய வரி முகமை அமைப்பு கண்டறிந்தது.

    ஜப்பானில் 1995-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 100 லிட்டர் மது அருந்தி வந்துள்ளார். 2020-ம் ஆண்டுக்கு ஒரு நபர் ஆண்டு 75 லிட்டர் மது அருந்தி உள்ளார்.

    இதையடுத்து வரி வருவாயை பெருக்க இளைஞர்கள் அதிகளவு மது குடிக்க வேண்டும் என்று ஜப்பான் அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

    இதற்காக சேக் விவா என்ற பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரசாரம் மூலம் குடிப்பழக்கத்தை இளைஞர்களிடம் பிரபலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    20 முதல் 39 வயதுள்ள ஜப்பானியர்களிடம் குடிப்பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என யோசனைகள் கேட்கப்பட்டு உள்ளன. மது விற்பனை அதிகரிக்க புதிய யோசனைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்காக போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த யோசனைகள் வழங்குபவர்களுக்கு பரிசு, விருது வழங்கப்படுகிறது. இப்போட்டி செப்டம்பர் 9-ந்தேதி வரை நடத்தப்படுகிறது.

    2011-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் வரி வருவாயில் 3 சதவீதம் மது விற்பனையில் இருந்து வந்துள்ளது. இது 2020-ம் ஆண்டு 1.7 சதவீதமாக சரிந்தது. கொரோனாவுக்கு முன்பு பெரும்பாலானோர் பார்களுக்கு சென்று மது அருந்தி வந்தனர்.

    கொரோனாவுக்கு பிறகு வீட்டில் இருந்தே பணிபுரிந்ததால் வெளியில் சென்று மது அருந்துவது குறைந்தது. அந்த நிலை இளைஞர்களிடம் தொடர்ந்து வருகிறது. இதனால் இளைஞர்களிடம் மது குடிப்பதை அரசு ஊக்குவிக்கிறது.

    பல நாடுகளில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரி வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், மதுவை ஊக்குவிக்கும் ஜப்பான் அரசின் இந்தஅறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த முடிவுக்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுகோள்கள் பூமியின் நீரின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம்.
    • சிறுகோள் துகள்களில் காணப்படும் கரிம பொருட்கள், ஆவியாகும் பொருட்களின் நீர் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

    டோக்கியோ:

    பூமியில் நீர் ஆதாரம் உருவானதற்கு சிறுகோள்கள் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஹயபுசா-2 என்ற விண்கலத்தை ஏவியது. இது 300 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரியுகு என்ற சிறுகோளில் இறங்கிய மாதிரிகளை சேகரித்து 2020-ம் ஆண்டு பூமிக்கு பல சிறிய பாறைகளால் ஆன ரியுகு சிறுகோளில் இருந்து 5.4 கிராம் பாறைகள் மற்றும் தூசிகள் எடுத்து வரப்பட்டன.

    ஒரு கார்பன் பொருளால் நிறைந்த சி வகை சிறுகோளான ரியுகு, பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனையும், சூரிய குடும்பத்தின் கிகரங்களையும் உருவாக்கிய நெபுலாவிலிருந்து உருவாகியதாக கூறப்படுகிறது.

    மேலும் ரியுகு சிறுகோளில் நீரும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ரியுகு சிறுகோளில் மாதிரிகளை டோக்கியோ, ஹிரோஷிமா பல்கலைக்கழகங்கள் உள்பட ஜப்பான் முழுவதும் உள்ள பல ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த மாதிரிகளில் 20 வகையான அமினோ அமிலங்கள் இருப்பதாக தெரிவித்தனர். அமினோ அமிலங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் முக்கிய உயிர் கூறுகளாக இருக்கின்றன.

    இந்த நிலையில் புதிதாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், ரியுகு சிறுகோள் மாதிரிகள் மூலம் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடல்கள் எவாறு தோன்றின என்ற மர்மத்துக்கு துப்பு கிடைக்கும்.

    கொந்தளிப்பான மற்றும் கரிம நிறைந்து சி வகை சிறுகோள்கள் பூமியின் நீரின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம்.

    பூமியில் ஆவியாகும் பொருட்கள் (கரிமப்பொருட்கள் மற்றும் நீர்) இருப்பது பற்றி இன்னும் குறிப்பிடத்தக்க விவாதத்தில் உள்ளது. ஆனாலும் ரியுகு சிறுகோள் துகள்களில் காணப்படும் கரிம பொருட்கள், ஆவியாகும் பொருட்களின் (நீர்) ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா, சேதங்களைத் தடுப்பதை உறுதிசெய்ய உள்ளூர் நகராட்சியுடன் பணியாற்றுமாறு அறிவுரை.
    • எரிமயைில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய எரிமலை தீப்பிழம்புகளை கக்கி வருகிறது.

    தெற்கு ஜப்பான் ககோஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலையில் இருந்து பாறைகள் வெடித்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகிறது. இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்படி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    எரிமலையின் வெடிப்பினாலான சேதம் குறித்து உடனடியாக தகவல்கள் எதுவும் இல்லை என்று துணை தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிஹிகோ இசோசாகி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, சேதங்களைத் தடுப்பதை உறுதிசெய்ய உள்ளூர் நகராட்சியுடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    எரிமயைில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய எரிமலை தீப்பிழம்புகளை கக்கி வருகிறது. அதே நேரத்தில் இதனால் எழும் புகை சுமார் 300 மீட்டர் உயரத்திற்கு எட்டியுள்ளது.

    இதனால், சகுராஜிமாவின் எரிமலை பள்ளத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரிமுரா நகரம் மற்றும் ஃபுருசாடோ நகரத்தின் குடியிருப்பு பகுதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எரிமலை கண்காணிப்பு பிரிவின் சுயோஷி நகாட்சுஜி தெரிவித்தார்.

    • ஷின்சோ அபே கொல்லப்பட்டதால் உருவான அனுதாப அலையால் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது.
    • அதன்படி ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பாலான இடங்களில் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி முன்னிலை வகித்தது.

    டோக்கியோ:

    ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அந்நாட்டின் பாராளுமன்ற மேல்சபைக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது தான் ஷின்சோ அபே சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதால் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. ஷின்சோ அபே கொல்லப்பட்டதால் உருவான அனுதாப அலையால் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது.

    அதன்படி ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பாலான இடங்களில் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி முன்னிலை வகித்தது.

    மொத்தம் உள்ள 248 இடங்களில் 146 இடங்களுக்கு மேல் அந்த கூட்டணி கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகின.

    சில மணி நேரங்களில் அந்த கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

    • கூட்டத்தில் ஷின்சோ அபே பேச தொடங்கிய சில நிமிடங்களில் டெட்சுயா யமகாமி அவரை துப்பாக்கியால் சுட்டார்.
    • ஷின்சோ அபேயின் கழுத்தில் வலது பகுதி மற்றும் வலது இதயப்பகுதியில் குண்டு பாய்ந்திருந்தது.

    டோக்கியோ:

    ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது சுட்டு கொல்லப்பட்டார்.

    ஜப்பானின் கிழக்கு நகரமான நாராவில் நடந்த தெருமுனை கூட்டத்தில் பேச தொடங்கியதும் அவர் சுடப்பட்டார். வீடியோ காட்சிகளில் ஷின்சோ அபேயின் பின்புறம் அப்பாவி போல நின்ற வாலிபர் துப்பாக்கியால் சுடுவது பதிவாகி இருந்தது.

    அவரை பாதுகாப்பு வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். விசாரணையில் அவர் டெட்சுயா யமகாமி (வயது 41) ஜப்பான் கடல் சார் தற்காப்பு படை என்ற கடற்படை பிரிவில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்தவர் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன்விபரம் வருமாறு:-

    தேர்தல் பிரசாரத்துக்கு ஷின்சோ அபே கிழக்கு ஜப்பானின் நாரா நகருக்கு வர இருப்பது ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது. இதனை கொலையாளி டெட்சுயா யமகாமி பார்த்துள்ளார்.

    அதில் ஷின்சோ அபே நாராவில் எங்கெங்கு பேசுகிறார் என்பதை கண்டுபிடித்த டெட்சுயா யமகாமி, அந்த பகுதிகளில் பாதுகாப்பு குறைவாக இருக்கும் பகுதிகளை குறிப்பெடுத்துள்ளார்.

    இதில் நாரா பகுதியில் நடக்கும் தெருமுனை கூட்டத்தில் குறைவான பாதுகாப்பு இருக்கும் என்பதை தெரிந்துகொண்ட கொலையாளி டெட்சுயா யமகாமி, அந்த பகுதியில் ஷின்சோ அபேயை சுட்டு கொல்ல முடிவு செய்துள்ளார்.

    இதற்காக அவரே வீட்டில் சுயமாக இரட்டை குழல் துப்பாக்கியை தயாரித்து உள்ளார். அந்த துப்பாக்கியை தனது சட்டையில் மறைத்து வைத்தபடி கூட்டத்துக்கு சென்றுள்ளார்

    கூட்டத்தில் ஷின்சோ அபே பேச தொடங்கிய சில நிமிடங்களில் டெட்சுயா யமகாமி அவரை துப்பாக்கியால் சுட்டார். 2 முறை சுட்டதில் ஷின்சோ அபே ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.

    ஷின்சோ அபேயின் கழுத்தில் வலது பகுதி மற்றும் வலது இதயப்பகுதியில் குண்டு பாய்ந்திருந்தது. அவரை பாதுகாவலர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 100 யூனிட் ரத்தம் கொடுத்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் பரிதாபமாக இறந்தார்.

    ஷின்சோ அபேயை கொன்றது ஏன்? என்பது பற்றி கொலையாளி டெட்சுயா யமகாமி கூறும்போது, ஷின்சோ அபேயின் அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. அவர் மீது அரசியலுக்கு தொடர்பில்லாத பல புகார்கள் இருந்தன.

    அவர் பலமுறை இதுபோன்ற தவறுகளை செய்திருந்தார். இதற்காக அவரை கொல்ல முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக ஜப்பான் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல்.
    • அபேவுக்கான பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

    மேற்கு ஜப்பான் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஜப்பான் கடற்படையின் முன்னாள் உறுப்பினரான கொலையாளியை போலீசார் கைது செய்தனர். மேலும், கொலையாளி பயன்படுத்திய வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாளை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அபேவுக்கான பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், முன்னாள் பிரதமரின் மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கும் நிலையில் அபேவின் உடல் டோக்கியோவை வந்தடைந்துள்ளது.

    டோக்கியோவின் மேல்தட்டு குடியிருப்புப் பகுதியான ஷிபுயாவில் உள்ள அவரது வீட்டிற்கு அபேயின் உடலைச் சுமந்துகொண்டு ஒரு கருப்பு சவக்கரி வாகனம் வந்தது. வாகனத்தில் அவரது மனைவி அகி உடன் இருந்தார். அங்கு காத்திருந்த பலர் வாகனம் கடந்து செல்லும்போது தலையைத் தாழ்த்திக் கொண்டு மரியாதை செலுத்தினர்.





    ×