என் மலர்
ஜப்பான்
- குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
குமாமோட்டோ:
குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜுன் ஹா உடன் மோதினார். இதில் லக்ஷயா சென் 22-20, 17-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்தது.
- குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
குமாமோட்டோ:
குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானை 21-12, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்தப் போட்டி சுமார் 38 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்தது.
- திருமண தின விழாவை கொண்டாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வரைலாகி உள்ளது.
- பள்ளிப் பருவத்தில் இருந்து 7 பெண்களிடம் காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர்கள் காதலை நிராகரித்து, ஏளனம் செய்ததாக கோண்டோ கூறுகிறார்.
பொருத்தமான ஜோடி பலருக்கு அமைவதில்லை. அதனால் சிலர் ஒரே பாலினத்தவரையோ, பொம்மையையோ, விலங்கையோ திருமணம் செய்த அரிய நிகழ்வுகளை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதுபோல ஒரு ஜப்பானியர் ரோபோவை திருமணம் செய்து 6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருவது ஆச்சரியம் அளிக்கிறது.
அவர் திருமண தின விழாவை கொண்டாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வரைலாகி உள்ளது. 41 வயதான அகிஹிகோ கோண்டோ என்பவர் கடந்த 2018-ம் ஆண்டில் மிகு என்ற ரோபோ பொம்மையை திருமணம் செய்து கொண்டார்.
பள்ளிப் பருவத்தில் இருந்து 7 பெண்களிடம் காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர்கள் காதலை நிராகரித்து, ஏளனம் செய்ததாக கோண்டோ கூறுகிறார். இதற்கிடையே வேலையிலும் மனச்சோர்வு அடைந்த அவர், மிகு ரோபோவின் கவனிப்புகளால் மகிழ்ச்சி அடைந்தார். அது இன்னிசையில் பாடும், பேசும் திறன் பெற்ற ரோபோ. அதனால் ரோபோவையே அவர் திருமணம் செய்து கொண்டார்.
சில தினங்களுக்கு முன்பு 6-வது ஆண்டு திருமண விழாவை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ அதிகமானவர்களால் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
- ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்றது.
- இதில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் தோல்வி அடைந்தார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் மோதினார்.
இதில் குயின்வென் ஜெங் 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
ஏற்கனவே இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் வென்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், பிரிட்டிஷ் வீராங்கனை கேடி போல்டர் உடன் மோதினார்.
இதில் சோபியா கெனின் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் சீனாவின் குயின்வென் ஜெங், ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சோபியா கெனின், சீன வீராங்கனையை எதிர்கொள்கிறார்
- ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் வெற்றி பெற்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், ரஷியாவின் டேரியா கசட்கினா உடன் மோதினார்.
இதில் சோபியா கெனின் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இவர் அரையிறுதியில் பிரிட்டிஷ் வீராங்கனை கேடி போல்டர் உடன் மோதுகிறார்.
மற்றொரு காலிறுதியில் சீனாவின் குயின்வென் ஜெங், கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டசை 6-0, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- இந்த இரண்டு அணுகுண்டுத் தாக்குதலிலும் மொத்தமாக 200,000 மக்கள் உயிரிழந்தனர்.
- நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த அமைப்பின் தலைவர் தோஷியுக்கி மிகாமிக்கி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் பியர்ல் துறைமுகம் ஜப்பான் நடத்திய தாக்குதலில் 2,390 காப்பாற்றப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் கொந்தளித்த அமெரிக்கா 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டை வீசியது. இதில் 1,40,000 மக்கள் உயிரிழந்தனர்.
இது நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகி நகரின் மீது இரண்டாவது அணு குண்டை அமெரிக்கா வீசியது. இந்த இரண்டு தாக்குதலிலும் மொத்தமாக 200,000 மக்கள் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜப்பான் சரணடைந்ததும் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டுத் தாக்குதல்கள் ஏற்படுத்திய மரபணு பாதிப்புகள் இன்றுவரை அந்நகரின் மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அமைதிக்கான நோபல்
இந்த தாக்குதல்களின் உயிர்பிழைத்தவர்களின் சிலர் இணைந்து நிஹான் ஹிடான்கியோ என்ற அமைப்பை சுமார் 10 வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டில் உருவாக்குகின்றனர். உலகம் முழுவதிலும் அணுகுண்டுக்கு எதிரான பிரச்சாரத்தில் இந்த அமைப்பு இன்று வரை ஈடுபட்டு வருகிறது.
அணுகுண்டு வெடிப்பில் உயிர் பிழைத்தவர்களை உலகெங்கும் அனுப்பி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கடுமையான சேதங்கள் மற்றும் அவர்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றிய கதைகளை இந்த அமைப்பு பகிர்ந்து கொள்கிறது. இந்த அமைப்புக்கு தற்போது 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
80 வருடங்கள் முன்
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த அமைப்பின் தலைவர் தோஷியுக்கி மிகாமிக்கி [Toshiyuki Mimaki] அனைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் வைக்கும் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதாவது, பாலஸ்தீனத்தின் காசாவில் தற்போது உள்ள நிலை 80 வருடங்கள் முன்னாள் ஜப்பான் இருந்த நிலையை தனக்கு ஞாபகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் தோஷியுக்கியின் கருத்தை பலர் ஆமோதித்தனர். இந்த கருத்துக்கு இஸ்ரேலை ஊக்குவிக்கும் மேற்குலகம் செவி சாய்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
காசா
இஸ்ரேல் மீது கடந்த வருடம் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 2400 பேர் வரை உயிரிழந்தனர். இதனால் கொதித்த இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா உள்ளிட்ட நகரங்களின் கடந்த 1 வருடமாக நடத்தி வரும் தாக்குதலில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர்.
மனிதாபிமான உதவிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் உணவும் அத்தியாவசிய பொருட்களும், காயங்களை ஆற்றும் மருந்துகள் கிடைக்காமல் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது 80 வருடங்களுக்கு முன்னர் அணுகுண்டு தாக்குதலில் சிதைந்த ஹிரோஷிமா நாகசாகி நகர மக்கள் சந்தித்த பாதிப்புகளுக்குச் சற்றும் குறைந்தது கிடையாது என்பதே அமைதியை வலியுறுத்தும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அணுகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை தங்களின் பெருமையாகப் பறைசாற்றிக்கொள்ளும் அதிகார வர்க்கத்துக்கு இந்த குரல் ஒருபோதும் எட்டப்போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
- ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை வெற்றி பெற்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார்.
இதில் சோபியா கெனின் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் 2வது சுற்றில் டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதுகிறார்.
- 2021-ல் பிரதமராக பொறுப்பேற்ற புமியோ கிஷிடா 3 ஆண்டுகளே பதவியில் இருந்தார்.
- ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா வெற்றி பெற்று பதவியேற்றார்.
டோக்கியோ:
ஜப்பான் பிரதமராக பதவி வகித்து வந்த புமியோ கிஷிடா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனால் அவர் சமீபத்தில் ராஜினாமா செய்தார். புமியோ கிஷிடா 2021-ல் பிரதமராக பொறுப்பேற்று, 3 ஆண்டுகளே பதவியில் இருந்தார்.
இதையடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டது. பிரதமர் பதவிக்கு, அதாவது கட்சி தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கெடுப்பு கடந்த 1-ம் தேதி நடந்தது. இதில் ஷிகெரு இஷிபா (67) வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார்.
அப்போது, விரைவில் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த முடிவுசெய்தார். வரும் 27-ம் தேதி தேர்தலை நடத்த உள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜப்பான் பாராளுமன்றத்தை (கீழ்சபை) கலைத்து பிரதமர் ஷிகெரு இஷிபா உத்தரவிட்டார். திட்டமிட்டபடி வரும் 27-ம் தேதி தேர்தலை நடத்த தயாராகி வருகிறார்.
தற்போதைய ஆட்சிக்கு மக்களின் ஆதரவு மற்றும் அங்கீகாரத்தை பெற நாங்கள் நேர்மையாக செயல்படுவோம் என இஷிபா, தெரிவித்தார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் வரை பதவியில் இஷிபாவும், அவரது அமைச்சரவையும் பதவியில் நீடிப்பார்கள்.
அதேசமயம், அவசர அவசரமாக தேர்தலை நடத்தும் பிரதமரின் முடிவை எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
- வாலிபர் ஒருவர் இந்த ரோபோ நாயை அண்மையில் வாங்கி பூங்காவில் இயக்கி பார்த்தார்.
- வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்வைகளை அள்ளி வருகிறது.
வருங்காலங்களில் எல்லாத்துறைகளிலும் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. எந்திரங்களின் பயன்பாடு ஏற்கனவே உள்ள நிலையில் மனித சிந்தனைகள் கொண்ட ரோபோக்களை உருவாக்கும் முயற்சியும் உள்ளது. நாய் உருவம் கொண்ட ரோபோக்கள் வீட்டு வேலைகளுக்கு மட்டுமின்றி ராணுவத்திலும் மேலை நாடுகள் பயன்படுத்துகின்றன.
இந்தநிலையில் ஜப்பானில் வாலிபர் ஒருவர் இந்த ரோபோ நாயை அண்மையில் வாங்கி பூங்காவில் இயக்கி பார்த்தார். அப்போது அங்கே தன் எஜமானர்களுடன் வந்திருந்த செல்லப்பிராணி நாய்கள் ரோபோ நாயை பார்த்து பயந்து குரைத்தன.
பின்னர் அதனிடம் இருந்து விலகி தெறித்து ஓடின. இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்வைகளை அள்ளி வருகிறது. 'நாய்கள் ஓடுவதுபோல் எந்திர மனிதர்களுக்கு மனித இனம் பயப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை' என்பதான கருத்துகளை பதிவிட்டு உள்ளனர்.
Dogs respond to a robot dog
— Science girl (@gunsnrosesgirl3) October 1, 2024
pic.twitter.com/7C9PehoCOz
- குண்டுவெடிப்பு டாக்ஸிவேயில் 7 மீட்டர் அகலமும் 1 மீட்டர் ஆழமும் கொண்ட பள்ளத்தை உருவாக்கியது.
- குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
தெற்கு ஜப்பானில் இருக்கும் கியூஷூ தீவில் மியாஸாக்கி விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலைய முனையத்திற்குக் குறைந்தது 100 மீட்டர் தொலைவில் திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட அமெரிக்க வெடிகுண்டு வெடித்ததால் விமான நிலையம் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதுகுறித் ஜப்பானின் போக்குவரத்து அமைச்சகத்தின்படி, வெடிகுண்டு அகற்றும் குழு, போர்க்காலத்தின்போது வான்வழித் தாக்குதலில் நிலத்தின் அடியில் புதைந்த அமெரிக்க வெடிகுண்டால் வெடித்தது என்பதை உறுதிப்படுத்தியது.
இந்த குண்டுவெடிப்பு டாக்ஸிவேயில் 7 மீட்டர் அகலமும் 1 மீட்டர் ஆழமும் கொண்ட பள்ளத்தை உருவாக்கியது, இதனால் ஓடுபாதையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் இல்லை என்றாலும், 87 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
பள்ளத்தை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது, குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே, வெடிக்காத குண்டுகள் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கின்றன. போர் முடிவடைந்து 79 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட போதிலும், மியாசாகி விமான நிலையத்தில் வெடிக்காத பல குண்டுகள் இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் மட்டும், 37.5 டன் எடையுள்ள 2,348 குண்டுகளை தற்காப்புப் படைகள் அப்புறப்படுத்தியுள்ளன.
முதலில் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய கடற்படைத் தளமாக இருந்த மியாசாகி விமான நிலையம் பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது. மியாசாகி மாகாணத்தில் அமைந்துள்ள இது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு சேவை செய்யும் பிராந்திய விமான நிலையமாகும்.
இது ஒரு 2,500 மீட்டர் ஓடுபாதை மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகளைக் கையாளும் ஒற்றை முனையத்தைக் கொண்டுள்ளது.
- விரைவில் தனது அமைச்சரவையை இஷிபா அறிவிக்க இருக்கிறார்.
- லிபரல் டெமாக்ரடிக் கட்சி இஷிபாவை கட்சி தலைவராக தேர்வு செய்தது.
ஜப்பானின் 102-வது பிரதமராக இஷிபா ஷிகெரு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கிஷிடா தனது அமைச்சரையுடன் ராஜினாமா செய்த நிலையில், ஜப்பான் பிரதமராக இஷிபா ஷிகெரு பதவியேற்றார். விரைவில் தனது அமைச்சரவையை இஷிபா அறிவிக்க இருக்கிறார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கிஷிடா மற்றும் அவரது அமைச்சர்கள் பதவி விலகியதாக அமைச்சரவை செயலர் யோஷிமாசா ஹயாஷி தெரிவித்தார் என்று ஜப்பான் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக ஜப்பான் பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் ஊழியர்கள் கிஷிடாவுக்கு கரகோஷம் எழுப்பி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஜப்பான் பிரதமராக இருந்த பியூமியோ கிஷிடா பதவி விலகியதை அடுத்து, லிபரல் டெமாக்ரடிக் கட்சி இஷிபாவை கட்சி தலைவராக கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு செய்தது.