search icon
என் மலர்tooltip icon

    ஜப்பான்

    • ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை ஒன்று சேர்ப்பது எப்போதும் தலைவலியான விஷயமாகவே இருந்து வருகிறது.
    • கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு ஸ்லோ மோஷனில் பார்க்கும்பொழுதே ரூபிக்ஸ் நிறங்களை ரோபோ ஒன்று சேர்ப்பதை பார்க்க முடிகிறது.

    ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை ஒன்று சேர்ப்பது எப்போதும் தலைவலியான விஷயமாகவே இருந்து வருகிறது. ஆனாலும் இந்த விளையாட்டின் மீது அனைவருக்கும் வசீகரமான ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. எவ்வளவு சீக்கிரம் ரூபிக்ஸ் கியூப் நிறங்களை ஒன்று சேர்க்கமுடியும் என்று உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளைக்காமல் முயற்சி செய்த வண்ணம் இருக்கின்றனர்.

     

    அந்த முயற்சியில் பல உலக சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளது.10 வினாடிகளுக்குள் ரூபிக்ஸ் கியூப் நிறங்களை ஒன்று சேர்த்தவர்களும் இருக்கின்றனர்.அந்த வகையில் கடந்த மே 21 ஆம் தேதி ரோபோ ஒன்று ௧ நொடிக்கும் குறைவான நேரத்தில் ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை ஒன்று சேர்த்து இதுவரை மனிதர்கள் படைத்த உலக சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

    டோக்கியோவில் உள்ள மிட்சுபிஷி எலெக்ட்ரிக் கார்ப்பரேஷனின் கீழ் இயங்கும் மின்சாதன உபகரணங்களை உற்பத்தி செய்யும் பொறியியல் மையத்தில் வடிவமைக்கப்பட்ட ரோபோ, 3x3x3 ரூபிக்ஸ் கியூபாவின் நிறங்களை வெறும் 0.305 வினாடிகளில் ஒன்று சேர்த்துள்ளது.

    இது மனிதக் கண்களால் பார்க்க முடிவதை விட வேகமானது ஆகும். கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு ஸ்லோ மோஷனில் பார்க்கும்பொழுதே ரோபோ,ரூபிக்ஸ் நிறங்களை ஒன்று சேர்ப்பதை பார்க்க முடிகிறது. கின்னஸ் அமைப்பு வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

    முன்னதாக 3x3x3 ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை 4.48 வினாடிகளில் சீனாவைச் சேர்ந்த யிஹெங் வாங் ஒன்று சேர்த்ததே ரூபிக்ஸ் நிறங்களை ஒன்று சேர்க்கும் அதிக பட்ச வேகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

     

    • 2024 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடந்து வருகிறது.
    • பெண்களுக்கான 400 மீ டி20 பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி, 55.06 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளார்.

    மாற்றுத் திறனாளிகளுக்கான 2024 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற பாரா தடகள வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி உலக சாதனை படைத்து இந்த வருடம் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

     

    பெண்களுக்கான 400 மீ டி20 பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி, 55.06 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து முந்தைய உலக சாதனையை முறியடித்துதுள்ளார். இந்தப் போட்டியில், 59.00 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து தாய்லாந்து வீராங்கனை ஓரவன் கைசிங்கை வெள்ளிப் பதக்ககமும், ஜப்பான் வீராங்கனை நினா கன்னோ 59.73 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    கோபே யுனிவர்சியேட் மெமோரியல் ஸ்டேடியத்தில் 17 முதல் 25 மே 2024 வரை நடைபெறும் இந்த போட்டிகளில் நேற்று (மே 19) போட்டியின் மூன்றாவது நாளில் ஓட்டப்பந்தய வீராங்கனை ப்ரீத்தி பால் மற்றும் உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் ஆகியோர் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024ல் இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.

     

    கடந்த பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா மூன்று தங்கம், நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்கள் உட்பட 10 பதக்கங்களை வென்றிருந்ததது. முன்னதாக, தீப்தி ஜீவன்ஜி 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் பெண்கள் 400 மீட்டர் பிரிவில் 56.18 வினாடிகளில் 400 மீட்டர் எட்டி ஆசிய அளவில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. 

    • பொதுவாக குழந்தைகளை ஒன்றாக பெற்றுக்கொள்ள மற்ற மருத்துவ வழிகளை தேர்வு செய்கிறார்கள்.
    • ஜப்பானில் 2015-ம் ஆண்டு முதல் சுமார் 500 பேர் இந்த நட்பு திருமணங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    காலத்திற்கேற்ப புதிய உறவு முறைகள் காதலுக்கும், திருமணத்திற்கும் இடையில் வந்துவிட்டன. அந்த வகையில் ஜப்பானில் சமீப காலமாக நட்பு திருமணங்கள் அதிகரித்து வருகிறது. இந்த உறவில் 2 பேர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டு ஒன்றாக குழந்தைகளை பெறலாம். ஆனால் ஒருவருக்கொருவர் உடலுறவு கொள்ள வேண்டாம் அல்லது கணவன்- மனைவியாக இருக்க வேண்டாம் என முடிவு செய்கிறார்கள்.

    எனவே பொதுவாக குழந்தைகளை ஒன்றாக பெற்றுக்கொள்ள மற்ற மருத்துவ வழிகளை தேர்வு செய்கிறார்கள். ஜப்பானில் 2015-ம் ஆண்டு முதல் சுமார் 500 பேர் இந்த நட்பு திருமணங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதுதொடர்பாக தம்பதிகள் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்த திருமணங்களில் ஈடுபடும் தம்பதியர் சராசரிக்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் என்பதையும், அதில் பெரும்பாலானோர் உடலுறவை வெறுப்பவர்கள் அல்லது ஒரினச்சேர்க்கையாளர்களாக இருப்பார்கள் என்பதையும் காட்டுகிறது.

    • செயற்கை பற்களை 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து இதுவரை சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.
    • மருத்துவமனையில் அடிக்கடி பற்கள் காணாமல் போவதை அறிந்த நிர்வாகம் இது தொடர்பாக ஆய்வு செய்த போது டாக்டரின் திருட்டு அம்பலமானது.

    சில மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் திருடி விற்கப்படுவதாக அவ்வப்போது அதிர்ச்சி செய்திகள் வெளியாகும். அந்த வகையில் ஜப்பானில் பற்களை திருடி விற்ற டாக்டர் ஒருவர் போலீசாரிடம் சிக்கி இருப்பது பேசுபொருளாகி உள்ளது.

    அங்குள்ள கியூஷு மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த அந்த டாக்டர் மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

    அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததால் அவரால் அனைத்து அறைகளுக்குள்ளும் சென்று வர முடிந்த நிலையில், நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்டு அறையினுள் மறு சுழற்சிக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த செயற்கை பற்களை 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து இதுவரை சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.

    இந்நிலையில் மருத்துவமனையில் அடிக்கடி பற்கள் காணாமல் போவதை அறிந்த நிர்வாகம் இது தொடர்பாக ஆய்வு செய்த போது டாக்டரின் திருட்டு அம்பலமானது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

    • டோமிசோடா நகரில் உள்ள கோழிப்பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • ஏவியன் இன்புளூயன்சா வைரசால் ஏற்படும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு அந்த கோழிகளுக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

    டோக்கியோ:

    ஜப்பானின் சிகா மாகாணம் டோமிசோடா நகரில் ஒரு கோழிப்பண்ணை செயல்படுகிறது. இங்கு ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த பண்ணையில் சில கோழிகள் மர்மமான முறையில் இறந்தன. இதனையடுத்து அங்குள்ள கோழிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏவியன் இன்புளூயன்சா வைரசால் ஏற்படும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு அந்த கோழிகளுக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

    எனவே அந்த பண்ணையை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மற்ற கோழிகளுக்கு இந்த பறவைக்காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த அங்கு சுமார் 57 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டு உள்ளன. அதேபோல் இந்த பண்ணையை சுற்றி 3 கிலோ மீட்டர் தொலைவில் கோழிகள் மற்றும் முட்டைகளைக் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • 16 அடி நீளம் கொண்ட பாம்பு ரெயிலுக்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • ஜப்பானில் புல்லட் ரெயில் சேவை தொடங்கிய 60 வருடங்களில் காலதாமதமாக ரெயில் நிலையத்தை வந்தடைவது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜப்பான் நாட்டில் புல்லட் ரெயில் சேவை மக்களுக்கு பெரிதும் பயன்படும் சேவையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் நகோயா மற்றும் டோக்கியோ நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் புல்லட் ரெயிலில் 16 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்துள்ளது.

    இது தொடர்பான தகவல்கள் வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகோயா- டோக்கியோ இடையே செயல்படும் ஷிங்கன்செயிங் ரெயில் இயக்கத்தில் இருந்த போது ரெயிலுக்குள் பாம்பு இருந்ததை பயணி ஒருவர் கவனித்துள்ளார். உடனடியாக அவர் இதுகுறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் ரெயிலை நிறுத்தத்தில் நிறுத்திய அதிகாரிகள் வனத்துறை உதவியுடன் அந்த பாம்பை அகற்றினர்.

    16 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு ரெயிலுக்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் ரெயில் புறப்பாட்டில் 17 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாகவும், ஜப்பானில் புல்லட் ரெயில் சேவை தொடங்கிய 60 வருடங்களில் காலதாமதமாக ரெயில் நிலையத்தை வந்தடைவது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நிலநடுக்கத்தால் 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
    • இதுவரை சுனாமி எச்சரிக்கையோ, பொருட் சேதம் குறித்த அறிக்கை இல்லை.

    ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் நேற்று இரவு 6.3 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஜப்பானின் மேற்கே கியூஷூ மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இருப்பினும், இதுவரை சுனாமி எச்சரிக்கையோ, பொருட் சேதம் குறித்த அறிக்கையோ வெளியாகவில்லை.

    யுவாஜிமாவிற்கு மேற்கே சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

    • நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
    • அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும்.

    தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் கடந்த 3-ம் தேதி 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    தைவானில், 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு, 9 பேர் உயிரிழந்தனர். 1,000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

    அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டது.

    இந்நிலையில், ஜப்பானின் ஹோன்ஷு நகரில் இன்று 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இது ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகி உள்ளது.

    • மருந்துகளை எடுத்துக்கொண்ட பலருக்கு சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • சம்பவம் குறித்து ஜப்பான் சுகாதாரத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    டோக்கியோ:

    ஜப்பானின் ஒசாகா நகரை தலைமையிடமாக கொண்டு கோபயாஷி பார்மாசூட்டிகல் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெனிகோஜி கொலஸ்ட் ஹெல்ப் உள்ளிட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்கிறது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 18 ஆயிரம் கிலோ பெனிகோஜி மருந்துகள் உற்பத்தி செய்துள்ளன.

    இதற்கிடையே இந்த நிறுவனத்தின் மருந்துகளை எடுத்துக்கொண்ட பலருக்கு சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து கடந்த 22-ந்தேதி இந்த நிறுவனத்தின் மருந்துகளுக்கு அரசாங்கம் தடை விதித்தது. எனினும் கடந்த ஒரு வாரத்தில் பெனிகோஜி மருந்துகளை சாப்பிட்ட 5 பேர் இறந்துள்ளனர். மேலும் 100 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    • ஜப்பானின் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2035-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
    • இந்த திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.27 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    டோக்கியோ:

    ஜப்பானின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமாக மிட்சுபிசி நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

    பசுமை புரட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக உள்ள இந்த விமானத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜப்பானின் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2035-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.27 லட்சம் கோடி (33 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஒதுக்கப்பட்டுள்ளது.

    • நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • திருப்பதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் அச்சமடைந்தனர்.

    இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. திருப்பதில் இருந்து 58 கிலோமீட்டர் தொலையில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு இரவு 8.43 மணி அளவில் உணரப்பட்டுள்ளது.

    • ராக்கெட் ஏவுதல் பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
    • மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா என்ற மலைப் பகுதியில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.

    டோக்கியோ:

    ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகள் அந்நிறுவனம் செய்து வந்தது.

    ராக்கெட் ஏவுதல் பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா என்ற மலைப் பகுதியில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.

    ஆனால் ராக்கெட் புறப்பட்ட சில வினாடிகளில் திடீரென்று நடுவானில் வெடித்து சிதறியது. இதனால் வானில் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. ராக்கெட்டின் பாகங்கள் கீழே விழுந்ததில் சில இடங்களில் தீப்பிடித்தது, தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.


    ஜப்பானில் முதல் முறையாக தனியார் நிறுவனம் ஒன்று ராக்கெட் விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இத்திட்டம் வெற்றி பெற்றிருந்தால் ஜப்பானில் ராக்கெட்டை விண்ணில் செலுத்திய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் நிறுவனம் பெற்றிருக்கும்.

    ராக்கெட் வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்து அந்நிறுவனம் உடனடியாக பதில் அளிக்கவில்லை.

    ×