என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
    • 3-வது நாளான நாளை 9 சுற்றுக்கள் குளத்தை தெப்பம் சுற்றி வரும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர் இங்குள்ள ஆனந்தசஸட குளத்தில் தான் உள்ளார். இந்த குளம் ஆண்டுக்கு நான்கு முறை மட்டுமே திறக்கப்படும்.

    இந்த முறை 3 நாட்கள் தெப்ப உற்சவத்திற்காக திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவ விழா நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் என மொத்தம் 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவி மற்றும் தாயாருடன் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    முதல் நாள் என்பதால் மூன்று சுற்றுகள் தெப்பம் சுற்றிவந்தது. 2-வது நாளான இன்று 5 சுற்றுகள், 3-வது நாளான நாளை 9 சுற்றுக்கள் குளத்தை தெப்பம் சுற்றி வரும்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்த கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர். 

    • ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவு, உடைகளை வழங்கிடுவது என்றும் முடிவெடுக்கப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் ஆப்பூர் சந்தானம், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மாறன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி ஆலோசிக்க காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் சிக்கராய புரத்தில் நடந்தது.

    இதில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மனம் மகிழ்ந்து பாராட்டுகின்ற வகையில், திராவிட மாடல் நல்லாட்சி நடத்தி இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் எண்ணிலடங்கா திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்த நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்த நாள் மார்ச் 1-ந் தேதி வருகிறது.

    அன்றைய தினம் காஞ்சி வடக்கு மாவட்டம் முழுவதும் பட்டி, தொட்டியெங்கும் மிகவும் சிறப்பான வகையில் மாதம் முழுவதும் எழுச்சியுடன் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடுவது என்றும், மாவட்டம் முழுவதும் கழக கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கிடுவது என்றும் 40-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவு, உடைகளை வழங்கிடுவது என்றும் முடிவெடுக்கப்படுகிறது.

    முதலமைச்சரின் தன்னலமற்ற உழைப்பையும், அவர் கழகத்திற்காக ஆற்றிய அரும் பெரும் பணிகளையும், 4 ஆண்டு கால ஆட்சியின் அளப்பறிய சாதனைகளையும், நாட்டு மக்களுக்கு விளக்கிடும் வகையில் மார்ச் 1-ம் தேதி முதல் மாதம் முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள் மருத்துவ முகாம், இரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்திடுவது, கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, பரிசுகளை வழங்குவது என்றும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவ மனைகளில் மார்ச் 1-ஆம் தேதி அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கம் மோதிரம் அணிவிப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட கழக துணைச் செயலாளர் பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., து.மூர்த்தி, பொருளாளர் விசுவநாதன், தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், மேயர் வசந்தகுமாரி, துணைமேயர் காமராஜ், மண்டலக் குழுத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, பம்மல் மண்டலக்குழுத் தலைவர் வே.கருணாநிதி, திருநீர்மலை த.ஜெயக்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன், ஆப்பூர் சந்தானம், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மாறன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • டாக்டர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய சூழல் நிலவுகிறது.
    • உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்ட நேயாளிகளின் நிலைமை பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் உள்நோயாளிகளாவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இங்கு காஞ்சிபுரம் மட்டுமின்றி அருகில் உள்ள முசரவாக்கம், அய்யங்கார் குளம், பாலு செட்டி சத்திரம், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இந்த நிலையில் இங்குள்ள ஆண்கள் பொதுநல நோயாளிகள் பிரிவில் போதுமான டாக்டர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் சிகிச்சைக்கு வரும் ஏராளமான நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆண்கள் பொது நலப் பிரிவில் பல மணி நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே போதுமான டாக்டர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் கூறும் போது, காலை 6 மணி முதலே நோயாளிகள் ஓ.பி. சீட்டினை பெற்று மருத்துவம் பார்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம். ஆனால் போதுமான டாக்டர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய சூழல் நிலவுகிறது.

    இதனால் உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்ட நேயாளிகளின் நிலைமை பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளது. டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் தொடர்ந்து கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என்றனர்.

    • மாணவன் அஸ்வத்துக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
    • அஸ்வந்த் தற்போது அரபு நாடான கத்தாரில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    காஞ்சிபுரம் அருகே உள்ள ஏகனாம்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். சிவில் என்ஜீனியர். மனைவி வித்யாலட்சுமி . தற்போது சென்னை அண்ணாநகர் கிழக்கில் வசித்து வருகிறார்கள். இவர்களது மகன் பி. அஸ்வந்த் (வயது 11). அஸ்வந்த் தற்போது அரபு நாடான கத்தாரில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    ஆங்கிலத்தில் அதிகம் நாட்டம் மிகுந்த மாணவனாக திகழும் அஸ்வந்த் ஆங்கில வாக்கியங்களை தலைகீழாக விரைந்து படிப்பதில் திறமை வாய்ந்தவன்.

    தற்போது அஸ்வந்த் 5 நிமிடங்களில் 92 ஆங்கில வாக்கியங்களை தலைகீழாக படித்து சாதனை படைத்து உள்ளார். மாணவனின் இந்த சாதனை நிகழ்வு இந்தியா புக் ஆப் ரெக்கார்ல்ட் சில் இடம் பெற்றுள்ளது. சாதனை படைத்த மாணவன் அஸ்வத்துக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • பிப்ரவரி மாதம் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
    • மாவட்ட கலெக்டர் அவர்களின் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.02.2025 அன்று மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அவர்களின் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.

    இம்முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.

    • தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
    • தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த உதவி செவிலியர்கள், சிப்பாய் பார்மா பிரிவுகளில் உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம்.

    அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் வரும் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

    தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த உதவி செவிலியர்கள், சிப்பாய் பார்மா பிரிவுகளில் உள்ளவர்களும் இதில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏரியானது திருக்காலிமேடு முதல் சின்ன காஞ்சிபுரம் வரை நீண்டு பரவி காணப்படுகிறது.
    • காஞ்சிபுரம் நகரத்தில் இருந்து லாரிகளில் ஏற்றிவரும் கழிவுநீரும் இந்த ஏரியில் தான் விடப்படுகிறது.

    காஞ்சிபுரம் நகரில் உள்ள மிகப்பெரிய ஏரியாக திருக்காலிமேடு ஏரி விளங்குகிறது. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியானது திருக்காலிமேடு முதல் சின்ன காஞ்சிபுரம் வரை நீண்டு பரவி காணப்படுகிறது.

    சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருக்காலிமேடு, திருவீதி பள்ளம், நத்தம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்களை இந்த ஏரி விளைய வைத்தது. இதற்கி டையே காஞ்சிபுரம் வேகமாக நகரமாக வளர்ச்சி அடைந்ததால் விவசாயம் செய்வது நிறுத்தப்பட்டது. விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறின. அதன் பிறகு திருக்காலிமேடு ஏரி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. இந்த ஏரியின் அனைத்து பக்கங்களிலும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் திருக்காலிமேடு ஏரி குப்பை மேடாக மாறி வருகிறது. இந்த குப்பைகள் அடிக்கடி எரிக்கப்படுவதால் அடர்ந்த புகைமூட்டம் மற்றும் காற்று மாசு ஏற்படுகிறது.

    மேலும் காஞ்சிபுரம் நகரத்தில் இருந்து லாரிகளில் ஏற்றிவரும் கழிவுநீரும் இந்த ஏரியில் தான் விடப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஏரியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த ஏரியை சுற்றி வசிப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    மேலும் இந்த ஏரிக்கு வரும் கால்வாய்கள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமி க்கப்பட்டுள்ளன. கால்வாய்கள் தூர்வாரப்படுவதும் இல்லை. இதனால் மழைநீர் இந்த காய்வாய்க்கு செல்ல முடியாமல் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மழை காலங்களில் ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    இந்த ஏரி மாசுபட்டுள்ளதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த ஏரியில் கருவேல மரங்களும் அதிக அளவில் இருப்பதால் புதர் மண்டி காணப்படுகிறது. காஞ்சிபுரம் நகரத்தின் மையப்பகுதியில் இருந்தாலும், இந்த ஏரி முற்றிலும் பராமரிப்பு இன்றியே காணப்படுகிறது.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை விளைய வைத்த திருக்காலிமேடு ஏரி இப்போது குப்பை கிடங்காக மாறி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இந்த ஏரி மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.

    காஞ்சிபுரம் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள நகரமாக உள்ளது. மேலும் இந்த ஏரியை அழிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஏரியில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

    எனவே இந்த ஏரியில் லாரிகளில் கழிவுநீர் கொண்டு வந்து கொட்டுவதையும், குப்பைகளை கொட்டுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த ஏரியை தூர்வாரி நன்றாக பராமரிக்க வேண்டும். ஏரியை சுற்றிலும் பூங்கா அமைத்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். இந்த பூங்கா மூலம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைப்பதுடன் இந்த ஏரியும் பாதுகாக்கப்படும். மேலும் காஞ்சிபுரம் நகரில் குடிநீர் பிரச்சனையும் தீரும். மழை காலங்களில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதப்பதும் தடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருக்காலிமேடு ஏரியை சீரமைத்து அதை சுற்றி பூங்கா அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது' என்றார்.

    • ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களின் சார்பாக ஒரு சங்கத்திற்கு ஒரு நிர்வாகி வீதம் கலந்து கொள்ளலாம்.
    • ஓய்வூதியர்கள் தங்களது முறையீடுகளை வருகிற 7-ந் தேதி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 20-ந் தேதி காலை 10.30. மணிக்கு கலெக்டர் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை அலுவலக கூடுதல் இயக்குநர்(நிர்வாகம்) ஆகியோரால் நடத்தப்பட உள்ளது.

    ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை 3 நகல்களில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு வருகிற 7-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். கூட்டத்தில் முறையீடுகளை அளிக்கும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களின் சார்பாக ஒரு சங்கத்திற்கு ஒரு நிர்வாகி வீதம் கலந்து கொள்ளலாம். பெறப்படும் முறையீடுகளின் மீது மட்டுமே குறை களைவு அறிக்கையினை சம்மந்தப்பட்ட துறையிடமிருந்து பெற்று ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடவடிக்கை விவரம் தெரிவிக்கப்படும்.

    எனவே ஓய்வூதியர்கள் தங்களது முறையீடுகளை வருகிற 7-ந் தேதி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துணை சுகாதார நிலையம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
    • கட்டிட பணி முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் மூடியே கிடக்கிறது.

    படப்பை:

    படப்பை அருகே உள்ள செரப்பணஞ்சேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 15-வது நிதிக் குழு மானியத்தில் துணை சுகாதார நிலையம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த கட்டிட பணி முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் மூடியே கிடக்கிறது.

    இதனால் இந்த புதியகட்டிடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே துணை சுகாதார நிலையத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கபட்டு வருகிறது.
    • தேவையான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கோவில் நகரமாக உள்ளது. இங்குள்ள வரதராஜ பெருமாள்கோவில், காமாட்சி அம்மன்கோவில் சங்கர மடம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இங்குள்ள பட்டுச்சேலைகளும் தின சிறப்பு வாய்ந்தது. இதனால் காஞ்சிபுரத்திற்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். மறைந்த முன்னால் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு இல்லமும் இங்கு உள்ளது.

    இத்தனை சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரத்தில் போதிய வசதிகளுடன் பஸ்நிலையம் என்ற குறை கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக நிலவி வருகிறது. தற்போது காஞ்சீபுரத்தின் மையப்பகுதியான காமராஜ் சாலையில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள பஸ் நிலையம், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது இருந்த போக்குவரத்து மற்றும் மக்கள் தொகையின் அடிப்படையில் கட்டப்பட்டது. தற்போது தினமும் 350 பஸ்கள் இங்கிருந்து திருப்பதி, சித்தூர், பெங்களூர்,சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கபட்டு வருகிறது.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், படப்பை உள்ளிட்ட பகுதிகள் தொழிற்சாலைகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து உள்ளன. மேலும் மக்கள்தொகை பெருக்கமும் அதிகரித்து உள்ளது. தற்போது காஞ்சீபுரம் மாநராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் பஸ்நிலையம் மட்டும் அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது. அனைத்து பஸ்களும் நகரத்தின் மையபகுதிக்கு வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து காஞ்சிபுரத்தில் நவீன வசதியுடன் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் பொன்னேரி கரை அருகே சுமார் 19 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் நவீன வசதியுடன் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு ரூ. 38 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. பஸ்நிலைய வளாகத்தின் ஒரு பகுதியில் போக்குவரத்து பணிமனையும் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் காஞ்சிபுரம் நகர மக்களின் 25 ஆண்டு கனவு விரைவில் நிறைவேற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, காஞ்சிபுரத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் தடைப்பட்டு வந்தன. தற்போது தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே விரைவில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

    • தேவரியம்பாக்கத்தில் தியான நிலையில் உள்ள இந்த புத்தர் சிலை பெருமைக்குரியது.
    • காலம் கி.பி 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே உள்ளது தேவரியம்பாக்கம் கிராமம். இங்குள்ள பெருமாள் கோவிலில் வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது அழகிய வெண்மை நிற பளிங்குக் கல்லால் ஆன அமர்ந்த நிலையில் உள்ள புத்தரின் சிலை ஒன்று பெருமாள் கோவிலில் கண்டெடுக்கப்பட்டது.

    இந்த சிலையில் புத்தரின் கண்கள் மூடிய நிலையில் தியானத்தில் உள்ளார். சுமார் ஒரு அடி உயரமுள்ள புத்தர் சிலையின் காதுகள் இரண்டும் தோள்வரை நீண்டுள்ளன. மூக்கு சற்று சேதமடைந்த நிலையிலும் சுருள் சுருளான தலைமுடியுடனும், இடப்புறத் தோள் பட்டை முதல் இடுப்பு வரை சீவர ஆடையுடனும் காணப்பட்டது. சிலையின் தலை பகுதியில் சுருள் முடி போன்ற அமைப்பும், பின்புற மேலாடை (சீவர ஆடை) நேர்த்தி யாகத் தெரியும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தர் சிலை சுமார் 900 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் கூறும்போது, தேவரியம்பாக்கத்தில் தியான நிலையில் உள்ள இந்த புத்தர் சிலை பெருமைக்குரியது. கி.மு. 3-ம் நூற்றாண்டில் பல்வேறு போர்களை தொடுத்த பேரரசர் அசோகர் தனது கடைசி போரான கலிங்கத்து போரை நடத்திய பின் போர்களை கைவிட்டு உலக அமைதிக்கான கவுதம புத்தரின் வழியை பின்பற்றி உலகெங்கும் புத்த அமைதி கோபுரங்களை நிறுவி உலகில் அமைதியை உருவாக்க முயன்றார்.

    அத்தகைய கருத்தோடு ஒத்து போகும் வகையில் இச்சிலையின் அமைப்பு அமைந்து இருப்பது பெறும் சிறப்புக்குரியதாகும். இந்த சிலை 900 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காலம் கி.பி 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. இதனை உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ், உதவி கல்வெட்டாய்வாளர்கள் நாகராஜன் மற்றும் பிரசன்னா ஆகியோரும் உறுதி செய்தனர் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உங்கள் வீட்டு பிள்ளையான நானும், தமிழக வெற்றிக் கழக தோழர்களும் சட்டத்திற்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களோடு உறுதியாக இருப்பேன்.
    • ஒரு துண்டுச்சீட்டு நம்ம பிள்ளைகள் தந்ததற்கு கைது செய்தது ஏன் என்று புரியவில்லை.

    பரந்தூர் திருமண மண்டபத்துக்கு அருகே வேனில் நின்றபடியே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * உங்கள் ஊர் கிராம தேவதைகளான கொல்லம்வட்டாள் அம்மன் மேலையும், எல்லையம்மன் மேலையும் ரொம்பவே நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். அந்த நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்.

    * உங்கள் வீட்டு பிள்ளையான நானும், தமிழக வெற்றிக் கழக தோழர்களும் சட்டத்திற்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களோடு உறுதியாக இருப்பேன்.

    * ஏகனாபுரம் திடலில்தான் எல்லோரையும் சந்திக்க நினைத்தேன். நான் ஏன் ஊருக்குள் வர தடை என்று தெரியவில்லை.

    * கொஞ்ச நாளைக்கு முன் நமது புள்ளைங்க நோட்டீஸ் கொடுத்ததற்கு தடைவிதித்தார்கள்.

    * ஒரு துண்டுச்சீட்டு நம்ம பிள்ளைகள் தந்ததற்கு கைது செய்தது ஏன் என்று புரியவில்லை.

    * நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

    * மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம். மீண்டும் உங்கள் ஏகனாபுரம் ஊருக்குள்ளே நான் வருவேன் என விஜய் பேசினார்.

    ×