search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதுமே போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    • கள்ளச்சாராயாம் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில், பலரது உடல்நலம் மேலும் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதுமே போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சற்று முன்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

    மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.

    இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட கருணாபுரம் கிராமத்திற்கும் உதயநிதி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள உடல்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.

    • தேர்தலை மட்டுமே அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது.
    • கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உருவாக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

    கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

    இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    * மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

    * குறைந்த விலையில் கிடைத்ததால் பலரும் கள்ளச்சாராயம் அருந்தி உள்ளனர்.

    * டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் என பெண்கள் கூறுகின்றனர்.

    * தேர்தலை மட்டுமே அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது.

    * தேர்தல் அரசியல் மட்டும் தான் தமிழ்நாட்டில் நடக்கிறது. எந்த புதிய திட்டமும் இல்லை.

    * அதிகாரிகளை மாற்றி விட்டால் மட்டும் போன உயிர்கள் திரும்பி வந்துவிடுமா?

    * எந்த சம்பவம் நடைபெற்றாலும் அதிகாரிகள் தான் பலிகடாவா? அதிகாரிகளை இடம் மாற்றுவதுதான் நடவடிக்கையா?

    * கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உருவாக்கப்பட்டுள்ளது.

    * போதையில்லா தமிழ்நாடு உருவாக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவானது? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சென்ற பிரேமலதா பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் சிகிச்சை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
    • பிரேமலதாவை மருத்துவமனைக்குள் அனுமதித்து தங்களை உள்ளே விடவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சென்ற பிரேமலதா பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் சிகிச்சை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

    இதற்கிடையே கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் போலீசார், தேமுதிகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிரேமலதாவை மருத்துவமனைக்குள் அனுமதித்து தங்களை உள்ளே விடவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

    மற்ற கட்சியினரை உள்ளே அனுமதித்த போலீசார் தேமுதிகவினரை அனுமதிக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர் வாக்குவாதத்தை அடுத்து தேமுதிகவினரை போலீசார் வெளியேற்றினர்.

    • ஆட்சியரை பணியிட மாற்றம் செய்வதும், போலீசாரை சஸ்பெண்ட் செய்வதும் மட்டும் தீர்வாகாது.
    • எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, இபிஎஸ் என அனைவர் ஆட்சி காலத்திலும் கள்ளச்சாராய பலிகள் நிகழ்ந்துள்ளன.

    கள்ளக்குறிச்சி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனையை தடுக்காத காவல்துறையினர் கைது செய்யப்பட வேண்டும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என தொடர்புடையோர் யாரையும் விடக்கூடாது.

    * கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

    * ஆட்சியரை பணியிட மாற்றம் செய்வதும், போலீசாரை சஸ்பெண்ட் செய்வதும் மட்டும் தீர்வாகாது.

    * கள்ளச்சாராயம் அருந்தி பலியானவர்களின் குடும்பங்களை அரசு காப்பாற்ற வேண்டும்.

    * ஆட்சிகள் மாறினாலும் கள்ளச்சாராய காட்சிகள் மட்டும் மாறவில்லை.

    * எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

    * எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, இபிஎஸ் என அனைவர் ஆட்சி காலத்திலும் கள்ளச்சாராய பலிகள் நிகழ்ந்துள்ளன.

    * அரசியல் பின்புலம் இல்லாமல் கள்ளக்குறிச்சியில் இத்தனை துணிச்சலாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டிருக்க முடியாது.

    * முதலமைச்சர் பதவி விலகுவது இப்பிரச்சனைக்கு தீர்வாகாது. கள்ளச்சாராய விற்பனை தடுக்கப்பட வேண்டும்.

    * முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என இபிஎஸ் கூறுவது வெறும் அரசியல் என்று கூறினார்.

    • புகார் அளித்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை.
    • மக்கள் மீது மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சியில் போலீஸ் நிலையம் பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்றால் இந்த ஆட்சியின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

    ஆளும் கட்சியை சேர்ந்த அதிகாரம் மிக்கவர்களே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. இல்லாவிட்டால் இவ்வளவு துணிச்சலாக நகரத்தின் மையப் பகுதியில் போலீஸ் நிலையத்தின் அருகில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுமா? இது மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிகிச்சையில் இன்னும் எத்தனை பேர் குணமடைவார்கள் என்று தெரியவில்லை. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முதல் ஒவ்வொருவராக உயிரிழப்பதை பார்க்கும் போது மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைகிறேன்.

    கள்ளச்சாராயம் குடித்ததில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை.

    செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கள்ளச்சாராய விற்ப னையை தடுக்க பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. புகார் அளித்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்காமல் விட்டதே உயிரிழப்புக்கு காரணம்.

    தமிழ்நாடு முழுவதும் போதை மாநிலமாக மாறி வருகிறது. அதை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சியில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதற்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பூத் வாரியாக அமைச்சர்களை நியமித்துள்ளனர். அந்த அக்கறையை கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காட்டி இருக்கலாம்.

    ஆட்சி அதிகாரம் மட்டுமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியம். மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை.

    கள்ளச்சாராயம் குடித்து பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளின் கல்விச்செலவை அ.தி.மு.க. ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 10 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் இருந்து ஏன் மருத்துவர்களை கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரவில்லை.
    • திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் பலியை குறைத்திருக்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கள்ளச்சாராயத்தால் யாரும் சாகவில்லை என பச்சை பொய் கூறினார் கலெக்டர் ஷ்ரவன் குமார்.

    * வயிற்று வலியால், வலிப்பால், வயது மூப்பால் உயிரிழப்பு ஏற்பட்டதாக பொய் கூறினார் கலெக்டர்.

    * உண்மையை கூறாமல் திமுக அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையை செய்தார் கலெக்டர்.

    * கள்ளச்சாராயம் பருகியவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படவில்லை.

    * சென்னையில் இருந்து ஏன் மருத்துவர்களை கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரவில்லை.

    * திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் பலியை குறைத்திருக்கலாம்.

    * கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ.10 லட்சம் நிவாரணம் என்பது தங்கள் உறவுகளை இழந்த ஏழைக் குடும்பங்களுக்கு போதாது. மேலும் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • சின்னத்துரை என்பவர் கள்ளச்சாராய மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை தொடங்கி உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள மாவட்டங்களிலும் கள்ளச்சாராய விற்பனை கொடி கட்டி பறந்து கொண்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    கள்ளச்சாராயம் காய்ச்சுவதை காட்டுப்பகுதியில் வைத்து தொழில் போலவே பலர் செய்து வந்திருப்பதும், போலீசார் அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

    அப்பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவர் கள்ளச்சாராய மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சாராயத்தை சில்லரை விற்பனைக்கு வாங்கி சென்று பலரும் குடித்து வந்துள்ளனர். 70 வழக்குகளில் தொடர்புடைய இவர் தற்போது தலைமறை வாகியுள்ளார்.

    அவரை பிடிப்பதற்கு போலீசார் அதிரடி வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர். அவருடன் கள்ளச்சாராய மொத்த விற்பனைக்கு துணையாக இருந்த 10 பேரும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளனர்.

    அவர்களை பிடிப்பதற்கு போலீசார் வலை விரித்துள்ளனர். வியாபாரி சின்னத்துரையிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கி கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மறைத்து வைத்து 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளனர். அவர்கள் யார்-யார்? என்கிற பட்டியலையும் போலீசார் சேகரித்துள்ளனர்.

    கள்ளச்சாராய கும்பலை பிடிக்க ஏற்கனவே 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டிருந்தன. தற்போது கூடுதலாக 5 தனிப்படைகளும் ஏற்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல் நிலையத்திற்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது.
    • தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது.

    கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து இதுவரை 36பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையடுத்து, விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சிக்கு விரைந்தார்.

    மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நலம் விசாரித்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கள்ளச்சாராயம் பருகி உயிரிழந்தவர்கள் அனைவரும் ஏழைகள்.

    * கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டி பறந்துள்ளது. கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    * காவல் நிலையத்திற்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது.

    * கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனையில் ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது. ஆளுங்கட்சி தொடர்பு இருப்பதால் தான் காவல்நிலையம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது.

    * செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த வருடம் கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு கள்ளச்சாராய மரணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    * கள்ளச்சாராயம் குறித்து எஸ்.பி.யிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் நேரடியாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

    கள்ளக்குறிச்சி எஸ்.பி.யிடம் செல்போன் மூலம் அதிமுக எம்எல்ஏ புகார் அளித்தார்.

    * தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது.

    * தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் புழக்கம் மிக அதிகமாக உள்ளது.

    * திமுக ஆட்சியில் மக்கள் உயிருக்கு மதிப்பு இல்லாத சூழல் உள்ளது.

    * கள்ளச்சாராயம் விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது எடப்பாடி பழனிசாமியுடன் மாநிலங்களவை எம்.பி. சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளார்.
    • தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையை வாங்கி கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதுமே போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    1000 போலீசார் கிராமம் கிராமமாக சென்று சல்லடை போட்டு சாராய கும்பலை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணமான கண்ணுக்குட்டி என்ற கோவிந்தசாமி, தாமோதரன் மற்றும் விஜயா என்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் பின்னணி யில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து கள்ளச்சாராய கும்பலை கூண்டோடு கைது செய்ய அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக மேலும் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தொடங்கி இருப்பதால் கள்ளச்சாராய கும்பலை சேர்ந்த அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கள்ளக்குறிச்சியில் மாலை நேரத்தில் கடை வீதியில், பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்துள்ளது.
    • 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

    கள்ளக்குறிச்சியில் மாலை நேரத்தில் கடை வீதியில், பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்துள்ளது. இப்படி விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தில் மெத்தனால் அதிகமாக கலக்கப்பட்டதால், அதனை குடித்து 33 பேர் உயிரிழந்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அங்குள்ளவர்களிடம் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதும், அதனை அவர்கள் வாங்கிச் செல்லும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளக்குறிச்சியில் 19, சேலத்தில் 5, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • கள்ளச்சாராய பலி காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.

    கள்ளக்குறிச்சியில் 19, சேலத்தில் 5, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கள்ளச்சாராய பலி காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிவிரைவு, ஆயுதப்படை என ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விரைந்துள்ளனர்.
    • மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

    கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு 80 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் பிரவீவன், சேகர், மணிகண்டன், சுரேஷ் மற்றும் தனக்கோடி என்கிற மூதாட்டி, மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா, வடிவு, நாராயணசாமி, ராமு உள்ளிட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    இந்த 80 பேரில், மேலும் 10 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

    ×