search icon
என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • அறைக்குள் இருந்த பீரோ கதவுகள் திறக்கப்பட்டு இருந்தது.
    • 52 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ஜலில்(வயது 50).

    இவர், வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மனைவி சைதா பானு(48) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில அவர் கணவருடன் வசித்து வருகிறார்.

    இளைய மகள் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த இளைய மகளை சைதாபானு நேற்று அதிகாலை 3 மணிக்கு ரெயிலில் அழைத்துச்சென்று திருச்சியில் உள்ள கல்லூரியில் விட்டு விட்டு மாலை வீடு திரும்பினார்.வீட்டிற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பது கண்டு சைதா பானு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்குள்ள அறைக்குள் இருந்த பீரோ கதவுகள் திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 52 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து சைதா பானு அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா, துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் மற்றும் தனிப்படை போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    • 1500 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது.
    • அபயாம்பிகைக்கு தங்கமூலம் பூசபட்ட முழுகவச ஆபரணங்கள் அணிவிக்கபட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை காவேரி ஆற்றின் தெற்கு நோக்கி 1500 வருடங்கள் பழமையான புகழ் பெற்ற ஸ்ரீ மாயூரநாதர் பெரிய கோவில் அமைந்துள்ளது.

    இந்நிலையில் மகாதானத்தெருவில் வசித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் செந்தில்நாதன்- முல்லை தம்பதியினர் பல ஆயிரம் ரூபாய் செலவில் அபயாம்பிகை அம்மனுக்கு தங்கமூலம் பூசபட்ட முழு கவச ஆபரணங்களை திருவாவடுதுறை ஆதீனம் 24- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவானதேசிக பரமாச்சாரியர் சுவாமிகளிடம் ஆசிபெற்று வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து ஸ்ரீஅபயாம்பிகை அம்பாளுக்கு தங்கமூலம் பூசபட்ட முழு கவச ஆபரணங்கள் அணிவிக்கபட்டது. நிகழ்ச்சியின் போது கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் உடன் இருந்தனர்.

    • இசை பள்ளி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    • குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில்அமைந்துள்ளது.

    திருஞான சம்பந்தர் தேவாரத்தில் முதல் பதிகமான தோடுடைய சிவனே என்ற பதிகத்தை பாடி அருளிய தலமான இங்கு நவராத்திரி இசை விழா ஆண்டுதோறும் திருஞானசம்பந்தர் இசை பள்ளி சார்பில் நடைபெற்று வருகிறது.

    அதுபோல இவ்வாண்டு நவராத்திரி இசை விழா நடைபெற்றது.

    இசை பள்ளி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டு தேவார பதிகங்கள், விநாயகர் துதி, சரஸ்வதி பாடல் உள்ளிட்ட பக்தி பாடல்களையும் பாரதியார் பாடல்களையும் பாடினர்.

    இதில் குறிப்பாக 4 வயது முதல் மழலைச் சொல் மாறாத சிறுவர் சிறுமியர் இசை விழாவில் கலந்து கொண்டு இசைக்கு ஏற்ப பாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

    இவ்விழாவில் பாடிய குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    • மீதமுள்ள ரூ.4 லட்சத்தை கவியரசன் திருப்பி கேட்டுள்ளார்.
    • போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவியரசன், தொழில் அதிபர் இவர் தனது நண்பர் தஞ்சாவூர் ஸ்டீபன் செல்வகுமார் என்பவர் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த பாலகுமாரன் என்பவரிடம் ரூ. 8 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

    மேலும் ரூ.4 லட்சத்தை கவியரசன் திருப்பி கொடுத்துள்ளார். மீதி தொகையை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

    இந்நிலையில் ஸ்டீபன் செல்வகுமார் தொலைபேசி மூலம் கவியரசனை தஞ்சாவூருக்கு அழைத்துள்ளார்.

    தஞ்சாவூருக்கு சென்ற கவியரசனை பைனான்சியர் பாலகுமாரன் உள்ளிட்டோர் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் கவியரசனின் மனைவி அனுசியா தேவிக்கு போன் மூலம் வாங்கிய கடன் தொகையை கொடுத்துவிட்டு மீட்டுச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அனுசியா தேவி இது குறித்து திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பைனான்சியர் பாலகுமாரன், அவரது சகோதரர் பாலமுருகன், புதுக்கோட்டை அத்திவெட்டியைச் சேர்ந்த புகழேந்தி, மணிகண்டன், தஞ்சாவூர் ஸ்டீபன் செல்வகுமார் ஆகியோர் தஞ்சாவூர் சென்று கவியரசனை கடத்திச் சென்று புதுக்கோட்டை மாவட்டம் அத்திவெட்டி அய்யனார் கோவில் அருகே அடைத்து வைத்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கவியரசனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய புகழேந்தி மற்றும் ஸ்டீபன் செல்வகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் தலைம றைவான பைனான்சியர் பாலகுமாரன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பொரும்பூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.
    • பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து மாணவர்களுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

    அக்.21-ம் தேதி தொடங்கி நடைபெறும் ஒருவார முகாமின் 2-வது நாளாக பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி குறித்த நேரடி கள பயிற்சி ஐ.சி.ஐ.சி.ஐ. பவுண்டேசன் சார்பாக வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் தலைமை வகித்தார்.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில் வரவேற்றார்.

    பயிற்சியில் ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பாக சிவானந்தம், இயற்கை விவசாயி கணேசன், வீரசிம்மன் ஆகியோர் கலந்துகொண்டு பாரம்பரிய நெல் ரகங்கள், அதன் மருத்துவ குணங்கள் குறித்தும் இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் செய்முறை குறித்த நேரடி கள பயிற்சியை வழங்கினர்.

    முன்னதாக, இப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் குத்தாலம் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து பொரும்பூர் அமிர்தானந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் மற்றும் செல்லியம்மன் கோவில்களில் உழவா ரப்பணி மேற்கொண்டனர்.

    கோவில் வளாகத்திலும் மதிற்சுவரை சுற்றியுள்ள பகுதியிலும் இருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு கோவில் வாசலில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இதில், குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவர் பார்த்திபன், விஜயசரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் நிகழ்வு நடந்தது.
    • முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முரளிதரன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சீர்காழி இணைந்து சீர்காழிக்கு அருகில் உள்ள சாந்தப்புத்தூர் கிராமத்தில் மயிலாடுதுறை கால்நடை பராமரிப்பு துறை சார்பாக 40க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் நிகழ்வு மற்றும் கால்நடைகளுக்கு அனைத்து வகையான மருத்துவ பரிசோதனை, விலையில்லா அனைத்து வகை மருந்துகளும் கால்நடை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கம் சீர்காழி டெம்பிள் டவுன் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

    மாவட்ட உதவி ஆளுநர் கணேஷ், ரோட்டரி சங்கம் சீர்காழி டெம்பிள் டவுன் செயலர் ரவி, பொருளாளர் சந்தோஷ், முன்னாள் செயலர்கள் குமார், பிரபாகரன், முன்னாள் தலைவர் வைத்தியநாதன், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் சுதீஷ் ஜெயின் கலந்து கொண்டார்.

    கால்நடை மருத்துவர்கள் டாக்டர்.ரமாபிரபா, டாக்டர்.கார்த்திகேயன் , கால்நடை ஆய்வாளர் ராஜீ, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் எம்.ராஜா, எம்.மாலதி ஆகியோர்கள் கலந்துகொண்டு அனைத்து கால்நடைகளுக்கு மருத்துவ பணியினை ஆற்றினர். நிகழ்வில் சுபம் வித்யா மந்திர் பள்ளியின் முதல்வர் கே.வித்யா, பள்ளி நிர்வாக அலுவலர் சி.சண்முகம், மற்றும் அனைத்து பகுதியிலிருந்தும் கிராம மக்கள், 30க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியரும், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலருமான முரளிதரன் ,நன்றி கூறினார்.

    • இ.சி.ஜி., ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • முடிவில் ஊராட்சி துணை தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

    சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் வட்டார மருத்துவர் டாக்டர் கிளின்டன், ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி செயலர் உமாபதி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. யுமான நிவேதா முருகன் முகாமை திறந்து வைத்து பெசினார்.

    முகாமில் கண் பரிசோதனை, சக்கரை நோய் கண்டறிதல், ஹெச்.ஐ.வி. சோதனை கர்ப்பிணி பெண்களுக்கான ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தல், இ சி ஜி, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களை கண்டறிந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கர், திமுக துணைத் தலைவர் செல்வமணி, ஒன்றிய செயலாளர்கள் இமயநாதன், முருகமணி, மற்றும் நடராஜன், செவிலியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் சுகாதார அலுவலர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    • ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
    • உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை போலீசார் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா, மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிர்நீத்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து 36 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்.

    தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மனோகர், சஞ்சீவ்குமார், சீர்காழி லாமேக், இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சிங்காரவேலன், மணிமாறன், புயல் பாலச்சந்திரன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் விஜய் லூர்து பிரவீன்,மற்றும் போலீசார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை போலீசார் செய்தனர்.

    தொடர்ந்து உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சல் செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில் மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்குமார், ஊர் காவல் படை தளபதி அலெக்ஸ்,ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கனரக வாகனங்கள் வந்து செல்வதால் வாகனஓட்டிகள் மீண்டும் அவதியடைந்தனர்.
    • அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நகரில் வந்து சென்ற வாகனங்களுக்கு அபராதம்.

    சீர்காழி:

    சீர்காழி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பள்ளி நேரங்களான காலை 8மணி முதல் 10 மணிவரையிலும், மாலை 4மணி முதல் 6மணி வரையிலும் கனரக வாகனங்கள் வந்து செல்ல போக்குவரத்து போலீசார் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    இந்நிலையில் போலீசாரின் அறிவிப்பை மீறி நகரில் கனரக வாகனங்கள் வந்து செல்வதால் வாகனஓட்டிகள் மீண்டும் அவதியடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிறைசந்திரன் தலைமையில் போலீ சார்வாகனதணிக்கை செய்தனர்.

    அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நகரில் வந்து சென்ற கனரக வாகனங்கள் நிறுத்தி அபராதம் விதித்து ஓட்டுனரை எச்சரித்தனர்.

    • மாணவர்கள் எப்படி படிக்க வேண்டும் என விளக்கினார்.
    • வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டியாய் எப்படி இருக்க வேண்டும்?

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையை அடுத்த காளி ஊராட்சி அஞ்சல் நிலையம் அருகே 'ஓய்வுபெற்ற ஆசிரியர் காவிரி செல்லையா எழுதிய, பெருமதிப்பிற்குரிய மாணவ மணிகளே, பெற்றோர்களே என்ற தலைப்பில் 2 நூல்கள் வெளியியிட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி மன்ற தலைவி தேவி உமாபதி, சமூக ஆர்வலர் சம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய கவுன்சிலர் காந்தி வரவேற்றார்.

    இதில் மாணவ-மாணவிகள் என்கிற நூலில், இவர்கள் - எப்படி படிக்க வேண்டும், எப்படி வாழவேண்டும், எப்படி முன்னேற வேண்டும் என விளக்கி உள்ளார்.

    அடுத்து, பெற்றோர்கள் என்கிற நூலில், பெற்றோர்கள், எப்படி, தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும், எப்படி படிக்க வைக்க வேண்டும், அவர்களை வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டியாய் எப்படி இருக்க வேண்டும் என தெளிவுபட எழுதி உள்ளார்.

    பின்னர் குத்தாலம் முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுக செயல் திட்ட குழு உறுப்பினருமான கல்யாணம் ஆசிரியர் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.

    இதனை ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி சார்பாக மயிலாடுதுறை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி பெற்றுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள் செல்லத்துரை, இளமுருகச் செல்வன், வெண்மணி அழகன், உலக தமிழ் கழகம் மன்னர் மன்னன், நமச்சிவா யபுரம் ஊராட்சி தலைவர் நெப்போலியன், வி.சி.க. நெறியாளர் ஆனந்த், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், உள்ளீட்ட ஏராளமான ஆசிரி யர்களும், மானவர்களும், ஊர் பொது மக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் புலவர் நூல் ஆசிரியர்காவிரி செல்லையா நன்றி கூறினார்.

    • அதிகளவு பன்றிகள் சுற்றிதிரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
    • 74 பன்றிகள் பிடிக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றி சென்று அப்புறப்படுத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24வார்டுகளில் அனேக வார்டுகளில் பன்றிகள் அதிகளவு சுற்றிதிரிவதால் போக்குவரத்து இடையூறும், சுகாதாரசீர்கேடும் ஏற்பட்டது.

    பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்திட மக்கள் விடுத்த கோரிக்கையின்படி மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தலின்படி, நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த பன்றிகளை பிடிக்க நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், ஆணையர் ஹேமலதா மேற்பார்வையில், மது ரையை சேர்ந்த நிறுவனம் மூலம் 74பன்றிகள் வரை பிடிக்கப்பட்டு வாகன த்தில் ஏற்றி சென்று அப்புறப்ப டுத்தப்பட்டது.

    அப்போது இளநிலை உதவியாளர் பாபு, பரப்புரையாளர்கள் அலெக்ஸ்பாண்டியன், நித்தியானந்தம், தமிழ்மணி உடனிருந்தனர்.

    • கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றனர்.
    • 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே உள்ள மேலசெங்கமேடு அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி.

    இவர் நாங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி விஜயலட்சுமி சீர்காழி கருவூலத்தில் பணியாற்றி வருகின்றார்.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றனர்.

    இதனை கண்காணித்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளை யடித்துச் சென்றனர்.

    இந்நிலையில் பணி முடித்து வீடு திரும்பிய முத்துக்குமாரசாமி வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×