search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலுக்கு தங்ககவசம் வழங்கல்
    X

    திருவாவடுதுறை ஆதீனத்திடம் தங்ககவசம் வழங்கப்பட்டது.

    மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலுக்கு தங்ககவசம் வழங்கல்

    • 1500 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது.
    • அபயாம்பிகைக்கு தங்கமூலம் பூசபட்ட முழுகவச ஆபரணங்கள் அணிவிக்கபட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை காவேரி ஆற்றின் தெற்கு நோக்கி 1500 வருடங்கள் பழமையான புகழ் பெற்ற ஸ்ரீ மாயூரநாதர் பெரிய கோவில் அமைந்துள்ளது.

    இந்நிலையில் மகாதானத்தெருவில் வசித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் செந்தில்நாதன்- முல்லை தம்பதியினர் பல ஆயிரம் ரூபாய் செலவில் அபயாம்பிகை அம்மனுக்கு தங்கமூலம் பூசபட்ட முழு கவச ஆபரணங்களை திருவாவடுதுறை ஆதீனம் 24- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவானதேசிக பரமாச்சாரியர் சுவாமிகளிடம் ஆசிபெற்று வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து ஸ்ரீஅபயாம்பிகை அம்பாளுக்கு தங்கமூலம் பூசபட்ட முழு கவச ஆபரணங்கள் அணிவிக்கபட்டது. நிகழ்ச்சியின் போது கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×