search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு நெல் சாகுபடி குறித்து பயிற்சி
    X

    மாணவர்களுக்கு நெல் சாகுபடி குறித்து நேரடி களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு நெல் சாகுபடி குறித்து பயிற்சி

    • பொரும்பூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.
    • பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து மாணவர்களுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

    அக்.21-ம் தேதி தொடங்கி நடைபெறும் ஒருவார முகாமின் 2-வது நாளாக பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி குறித்த நேரடி கள பயிற்சி ஐ.சி.ஐ.சி.ஐ. பவுண்டேசன் சார்பாக வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் தலைமை வகித்தார்.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில் வரவேற்றார்.

    பயிற்சியில் ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பாக சிவானந்தம், இயற்கை விவசாயி கணேசன், வீரசிம்மன் ஆகியோர் கலந்துகொண்டு பாரம்பரிய நெல் ரகங்கள், அதன் மருத்துவ குணங்கள் குறித்தும் இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் செய்முறை குறித்த நேரடி கள பயிற்சியை வழங்கினர்.

    முன்னதாக, இப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் குத்தாலம் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து பொரும்பூர் அமிர்தானந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் மற்றும் செல்லியம்மன் கோவில்களில் உழவா ரப்பணி மேற்கொண்டனர்.

    கோவில் வளாகத்திலும் மதிற்சுவரை சுற்றியுள்ள பகுதியிலும் இருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு கோவில் வாசலில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இதில், குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவர் பார்த்திபன், விஜயசரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×