என் மலர்
மயிலாடுதுறை
- பழைய பட்டா சுகளை வைத்திருந்து விற்பனை செய்யக்கூடாது
- உரிமத்தில் குறிப்பிட்டுள்ள அளவில் மட்டுமே பட்டாசு வைத்திருக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் காவல்துறை சார்பில் ஆலோச னைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு லாமெக் தலைமை வகித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டி.எஸ்.பி லாமெக் பேசுகையில், கடையின் உரிமம், வெடி இருப்பு பதிவேடு ஆகியவற்றை கடை உரிமையாளர்கள் சரியாக பராமரிக்க வேண்டும்.
உரிமத்தில் குறிப்பிட்டுள்ள அளவில் மட்டுமே பட்டாசு வைத்திருக்க வேண்டும். எளிதில் தீ பற்றக்கூடிய எந்த பொருளையும் வைத்திருக்ககூடாது.
பட்டாசு கடை களில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கண்டிப்பாக காப்பீடு செய்திருக்க வேண்டும்.
பழைய பட்டா சுகளை வைத்திருந்து விற்பனை செய்யக்கூடாது என்று கூறினார்.
இதில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
- ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.
- 9 கடை உரிமையாளர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டது
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கண்ணாரதெரு, திருவாரூர் சாலை ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பெயரில் சுகாதார அலுவலர் சுரேஷ் தலைமையில்சு காதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கர் ராஜ், பழனிச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.
அதன்படி ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் (நெகிழி) பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட 9 கடை உரிமையாளர்களுக்கு என மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதத் தொகை விதிக்கப்பட்டது.
மேலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுவதை மீண்டும் கண்டறியப்பட்டால்கடைகளுக்கு சுகாதார அலுவலர்கள் மூலம் சீல் வைத்து, கடைகளின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என நகராட்சி அலுவலர்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
சீர்காழி:
சீர்காழி கோட்டத்தில் உள்ள ஆச்சாள்புரம் மற்றும் அரசூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கி ழமை) நடைபெற உள்ளது. இதனால் அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கொடக்கார மூலை, பழைய பாளையம், கொட்டாய் மேடு, தாண்டவன்குளம் எருக்கூர், புத்தூர், சோதியக்குடி, மாதிர வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் தெரிவித்து ள்ளார்.
இதேப்போல் வைத்தீஸ்வ ரன் கோவில் துணை மின் நிலையத்தில் உள்ள திருப்பு ன்கூர் உயரழுத்த மின் பாதை யில் பராமரிப்பு பணியின் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கதிராமங்கலம், திருப்புன்கூர், கன்னியாகுடி பெருமங்கலம், சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் விஜயபா ரதி தெரிவித்தார்.
- பேரணிக்கு துறை நிலைய அலுவலர் ஜோதி தலைமை வகித்தார்.
- தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியில் பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணிக்கு துறை நிலைய அலுவலர் ஜோதி தலைமை வகித்தார்.
கல்லூரி நிர்வாக குழு துணை தலைவர் விசாகர், நிதி செயலாளர் ராஜ்கமல் , கல்லூரி முதல்வர் அருள் செல்வன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முத்து குமாரசாமி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.
- 14 மாடு, கன்றுகள் பிடிக்கப்பட்டு அவை நகராட்சி வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்தது.
- கால்நடை உரிமையாளர்கள் மாட்டிற்கு ரூ.2ஆயிரம், கன்றுக்கு ரூ.1000 அபராதம் செலுத்தி மீட்டு செல்கின்றனர்.
சீர்காழி:
சீர்காழி பிரதான வீதிகளில் மாடுகள் அதிகளவு சுற்றிதிரிந்ததால் போக்கு வரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்பட்டுவந்தது.
சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை கட்டுப்படுத்திட பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் அறிவுறுத்தலி ன்படி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி நடைபெற்று வந்தது.
அதன்படி சுமார் 14 மாடு,கன்றுகள் பிடிக்கப்பட்டு அவை நகராட்சி வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்தது. கால்நடை உரிமையாளர்கள் மாட்டிற்கு 2ஆயிரமும், கன்றுக்கு ரூ.ஆயிரம் என தங்களது மாடுகளை அபராதம் செலுத்தி மீட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் கால்நடை உரிமையாளர்கள் இதுவரை வந்து உரிமைக்கோரி மீட்கப்படாத 1காளை கன்றுக்குட்டி உள்ளிட்ட 4 கன்றுகளை நேற்று மாலை நகராட்சி நிர்வாகம் தனி வாகனத்தில் ஏற்றி பாதுகாப்புடன் மயிலாடுதுறை கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
- மோட்டார் சைக்கிள் திடீரென அங்கு உள்ள ஒரு வாய்க்கால் மதகில் மோதியது.
- இதில் ஆகாஷ் (வயது 23) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மயிலாடுதுறை:
திருக்கடையூர் அருகே ஆக்கூர் பஞ்சாகை கிராமத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் ஆகாஷ் (வயது 23).
டிரைவர்இவர் மோட்டார் சைக்கிளில் ஆக்கூர், மடப்புரம், வவ்வால் தோப்பை சேர்ந்த தனது நண்பர் விஷ்வாவுடன் காரைக்காலில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளை ஆகாஷ் ஓட்டினார்.
இந்நிலையில் திருக்கடையூர் அருகே அன்னப்பன்பேட்டை வளைவு பகுதியில் திரும்பும் பொழுது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென அங்கு உள்ள ஒரு வாய்க்கால் மதகில் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற ஆகாஷ் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஷ்வாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் இறந்தஆகாஷ் உடல் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பொறையாறு இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவிரி பிரச்சனையை தமிழக அரசு சட்ட ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் கையாள வேண்டும்.
- தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவிப்பதில்லை.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை ஊராட்சி கோழிகுத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வானமுட்டி பெருமாள் கோயில் எனப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.
இக்கோயிலில் ஒரே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் வானமுட்டி பெருமாள் அருள்பாலி க்கிறார்.
இக்கோவிலில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
முன்னதாக ஆலய நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்க ளிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியபோது :-
ஆன்மீகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
காவிரி பிரச்சனையை தமிழக அரசு சட்டரீதியாகவும் நட்பு ரீதியாகவும் கையாள வேண்டும், தமிழக முதல மைச்சர் கொள்கை கூட்டணி என கூறுகிறார்.
ஆனால் அனைவருக்கும் தண்ணீர் சமம் என்ற கொள்கைக்கு ஏற்றார்போல் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
சென்ற காலங்களில் இருந்த முதலமைச்சர் போல் தமிழக முதல்வர் தண்ணீர் பெற்று தருவதற்கு தீவிரமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றார்.
தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவிப்பதில்லை.
இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியின் போது மயிலாடுதுறை பொறுப்பு ஆர்.டி.ஓ. அர்ச்சனா, தாசில்தார் மகேந்திரன், மற்றும் பிஜேபி கட்சி தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- அமிர்த ராகுபகவான் தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
- ராகு பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பொன்னாகவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வ ரமுடையார் கோவில் உள்ளது.
இக்கோயில் ஆதி ராகு ஸ்தலமாக விளங்குகிறது.
இங்கு அமிர்த ராகுபகவான் தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடை ந்ததை யொட்டி அமிர்த ராகுபகவா னுக்கு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.
தொ டர்ந்து இராகுபகவானுக்கு 21-வகையான திரவியபொரு ட்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் பெயர்ச்சி மகாதீபா ராதனை நடந்தது. இதில்நகர வர்த்த சங்க துணைத் தலைவர் கோவி. நடராஜன் நகை வணிகர் சங்கத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பூஜை களை முத்துசிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சா ரியார்கள் செய்திருந்தனர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை
அதிகாரிகள் மற்றும் கோயில் கணக்கர் ராஜி ஆகியோர் செய்திருந்தனர்.
- பிரதமர் மீனவர்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
- ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
சீர்காழி:
சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுக வளாகத்தில் மீனவர்களின் குறைகள் கேட்டறியும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமை வகித்தார்.
மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம்,மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பேசுகையில், இந்திய கடலோர பாதுகாப்பின் கவசமாக மீனவர்கள் திகழ்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
எனவே மீனவர்களை கடலோர காவல் தெய்வங்கள் என்று அழைக்கலாம் பிரதமர் நரேந்திர மோடி மீனவர்கள் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மீனவர்களுக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்திய பெருமை அவரையே சேரும்.
பிரதமரின் திட்டத்தால் கடைகோடியில் வசிக்கும் மீனவர்களும் பயனடைகிறார்கள் என்ற செய்தி மிகவும் வரவேற்கத்தக்கது என்றார்.
மத்திய தகவல் ஒளிபரப்பு இணை அமைச்சர் எல் .முருகன் பேசும் போது மீனவர் நலன் சார்ந்த குழுக்களில் மீனவர் பிரதிநிதி இடம்பெற வேண்டுமென பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
2014 - க்கு பிறகு மீனவர்களு க்காக ரூ 38.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
நமது நாடு இறால் ஏற்றுமதியிலும் முதலிடம் வகிக்கிறது கடல் சார்ந்த பொருட்கள் என்று பதில் நான்காம் இடத்தில் உள்ளோம் விரைவில் முதல் இடத்தை பிடிப்போம் என்றார்.
நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர், பாஜக வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவர் முருகன் குறித்த பலர் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரபாபு நன்றி கூறினார்.
தொடர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி பூம்புகார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் நிஷாந்த் முன்னிலையில் நிதி உதவி க்கான காசோலைகள் மத்திய அமைச்சர்கள் வழங்கினர்.
- நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா.
- கேதுபகவானை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
திருவெண்காடு:
பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இதனால் இந்த கோவில் கேது பகவானின் பரிகார தலமாக விளங்குகிறது.
கேதுபகவானை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு, நாக தோஷம் , திருமணத்தடை நீங்கி செல்வ செழிப்புடன் நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. நேற்று மாலை 3 .41 மணி அளவில் கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை யொட்டி கேது பரிகார யாகம் நடந்தது. பின்னர் கேது பகவானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், கங்கை நீர் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து யாக குடங்களிலிருந்து புனித நீர் ஊற்றப்பட்டு மகாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு சரியாக 3.41 மணியளவில் தீபாரதனை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கேதுவை வழிபட்டனர்.
கேது பெயர்ச்சி நாளிலிருந்து 18 நாட்களுக்கு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.
- சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள், நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
மயிலாடுதுறை
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெருமாள், நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற பரிமள ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
இதேபோல் திருவெண்காடு அருகே உள்ள மங்கைமடம் வீர நரசிம்மர் கோவில், திருக்குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவில், திருக்குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவில், திருநகரி யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர், மற்றும் திருவாலி லட்சுமி நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர் கோவில்களில் வழிபாடுகள் நடந்தன. சீர்காழி அருகே உள்ள வடரங்கம் ரங்கநாதபெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தலைச்சங்காடு நான் மதிய பெருமாள் கோவில், அண்ணன் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அனைத்து கோவில்களில் நடந்த வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்து மின்கம்பிகளை முழுமையாக மூடி மறைத்துள்ளன.
- கொடிகள் வழியே மின்சாரம் பாய்ந்து சாலையில் நடந்து செல்பவர்கள் மீது மின்சாரம் தாக்கும்.
மயிலாடுதுறை:
கொள்ளிடம் கடைவீதியிலிருந்து ஆச்சாள்புரம், ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையிலிருந்து கொள்ளிடம் அக்ரஹார தெருவுக்கு மின் கம்பங்கள் மூலம் மின் கம்பிகள்செல்கின்றன.
இதில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்து மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை முழுமையாக மூடி மறைத்துள்ளன.
இதன் வழியே அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்சாரம் சென்று கொண்டிருக்கின்றன.தாழ்வாக செல்லும் மின்கம்பியில் கொடிகள் படர்ந்துள்ளதால் மழை நேரங்களில் கம்பிகளிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் கொடிகள் வழியே மின்சாரம் பாய்ந்து சாலையில் நடந்து செல்பவர்கள் மீது மின்சாரம் தாக்கும் அபாய நிலை உள்ளது.
இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படவும், தீவிபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே மின் கம்பிகளை அடர்ந்து சூழ்ந்து மூடி மறைத்துள்ள செடிகளை அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.