என் மலர்
மயிலாடுதுறை
- வாய் பேசாதவர்களை சோதனை செய்யும் கருவியான ‘ஆடியோ கிராம்’ அமைக்க வேண்டும்
- கலெக்டர் அலுவலகங்களிலும் செய்கை மொழி பெயர்ப்பாளர்களை அமைத்து கொடுக்க வேண்டும்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஆஸ்பத்திரியில் காது கேளாதோர், வாய் பேசாதவர்களை சோதனை செய்யும் கருவியான 'ஆடியோ கிராம்' அமைக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் செய்கை மொழி பெயர்ப்பாளர்களை அமைத்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் தமிழ்நாடு காதுகேளாதோர், வாய் பேசாதோர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் மேரி, ஷீலா, முத்துலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்மாநில தலைவர் ஜீவா, மாவட்ட நிர்வாகிகள் பாக்கியராஜ், மகேஷ், பிரபுதாசன், புருஷோத்தமன், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது சட்டப்படி குற்றமாகும்.
- மனித கழிவுகளை அகற்ற வேண்டுமானால் தானியங்கி எந்திரம் மூலம் அகற்ற வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி சார்பில் சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அறிவுடையநம்பி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகர மன்ற தலைவர் துர்காராஜசேகரன் கலந்து கொண்டு பேசுகையில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றக் கூடாது. இது சட்டப்படி குற்றமாகும். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளினால் அவர்களுக்கு பிணையில் வர முடியாமல் இரண்டு முதல் ஐந்தாண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
சீர்காழி நகர் பகுதியில் மனித கழிவுகளை அகற்ற வேண்டுமானால் தானியங்கி இயந்திரம் மூலம் அகற்ற வேண்டும். சீர்காழி நகராட்சியில் பதிவு செய்த ஒப்பந்தக்தாரர்களைக் கொண்டு தான் இயந்திரம் மூலம் மனித கழிவுகளை அகற்ற வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், டெங்கு ஒழிப்பு பணி மேற்பார்வையாளர் அலெக்ஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.
- விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் ருத்ராட்சங்கள் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே ராதாநல்லூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 ஆயிரத்து எட்டு ருத்ராட்சங்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக பிரத்தியேகமாக அயோத்தியில் இருந்து மொத்தமாக 5 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு அரசின் விதிமுறைகளை பின்பற்றி 10 அடி உயர உத்திர விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் புறத்தில் நூலை கொண்டு ருத்ராட்சங்களை கோர்த்து விநாயகர் முழுமையாக அலங்கரிக்கப்படுகிறார்.
இந்து மகா சபா வைச் சேர்ந்த தொண்டர்கள் கடந்த 15 நாட்களாக இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தயார் செய்யப்படும் விநாயகர் சிலை கும்பகோணத்தில் வைக்கப்படும் என்றும் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் ருத்ராட்சங்கள் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்றும் இந்து மகாசபையினர் தெரிவித்துள்ளனர்.
- முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
- விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.
சீர்காழி:
சீர்காழி மின்வாரிய செயற்பொறியா ளர் லதா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது சீர்காழி கோட்டத்தில் விவசாயம் மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்ப முள்ள விண்ணப்பதா ரர்கள் விரைந்து விவசாயம் மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு தட்கல் மின் இணைப்பு வழங்கல் திட்டம் 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடை முறைப்படு த்தப்பட்டு விவசாயம் மின் இணைப்பு கள் வழங்கப்பட்டு வருகிறது.தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளு க்கும் மற்றும் தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயி களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாயம் மின் இணைப்புகள் வழங்கப்படும்.
எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாயம் மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பம் உள்ள விவசாய மக்கள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாயம் மின் இணைப்பு பெற தங்கள் பகுதியில் செயற்பொ றி யாளரை தொடர்பு கொள்ளு மாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு ள்ளது.
- 4 பேரும் சேர்ந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கினர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடகால் கிராமம் காந்திநகரை சேர்ந்தவர் நரேஷ் (வயது 25) .
இவருக்கும் அதே கிராமம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், மணிமாறன், விக்னேஷ் ஆகியோருக்கும் அந்த பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு இரு தரப்பும் சமாதானம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் சம்பவதன்று வடகால் கடைவீதிக்கு வந்த நரேஷை, மணிகண்டன்,மணிமாறன் உள்ளிட்ட4 நபர்களும் சேர்ந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கினர்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது நண்பர்களான ராஜா, பாக்கியராஜ் வந்தனர். அவர்களையும் மணிகண்டன் கும்பல் தாக்கியது.
பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இதில் இருதரப்பினரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலின் போது படுகாயம் அடைந்த நரேஷ்,ராஜா,பாக்கியராஜ் ஆகியோர் சீர்காழி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த மணிகண்டகனுக்கு காயம் ஏற்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விக்னேஷ், மணிமாறனையும், மற்றொரு தரப்பில் ஒருவரையும் புதுப்பட்டினம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- புனிதநீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோபுரத்தை வந்தடைந்தது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் குருபரிகார தலமாக விளங்கும் ஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் ரிஷப தேவரின் கர்வத்தை அடக்கி தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் காட்சி தந்த பெருமைக்குரிய தலம்.
வேறெங்கும் இல்லாதவாறு நந்தியின் மேல் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.
ஐந்து நிலை ராஜகோபுரங்கள் கொண்ட இக்கோயில் 19 ஆண்டுகளு க்குப்பிறகு புனரமைக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் கடந்த 3-ம்தேதி தொடங்கி 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
தருமபுர ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கையிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கோவில் தலைமை குருக்கள் பாலச்சந்திர தலைமையில் வேதா விற்பனர்கள் 8ம் கால யாகசாலை பூஜையில் ஹோமங்கள், மகா பூரணாகுதி மகாதீபாரதனை செய்யப்பட்டு பூஜைகள் நிறைவடைந்தது.
மங்கல வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமானத்தில் உள்ள கோபுரத்தை வந்து அடைந்தது.
சுவாமி கருவறைக்கு மேல் தங்க கலசம், அம்பாள் ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும், மேதா தட்சிணாமூர்த்தி தங்க கலசம் ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் மந்திரங்கள் ஓத புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷே கத்தில் மதுரை ஆதீன மடாதிபதி, சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி, துழாவூர் ஆதீன மடாதிபதி, மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மற்றும் அயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- எரிவாயு தகன மேடை ரூ.8 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.
- இதனால் இறந்தவர்களின் சடலங்கள் தகரகொட்டகையில் வைத்து எரியூட்டப்படுகிறது.
சீர்காழி:
சீர்காழி ஈசானியத்தெரு வில் குப்பை கிடங்கு அருகில் நகராட்சிக்கு சொந்தமான நவீன எரிவாயு தகனமேடை உள்ளது.
சீர்காழி நகரில் இறக்கும் நபர்களின் சடலங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு சம்பிரதாய முறைப்படி இயந்திரம் மூலம் எரியூட்டப்படுவது வழக்கம்.
இதனிடையே பராமரிப்பு பணிக்காக எரிவாயு தகனமேடை இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு, எரிவாயு தகன மேடை ரூ. 8 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில் தகனமே டை எந்திரம் மீண்டும் பழுதாகிவிட்டது.
இதனால் எரிவாயு தகனமேடைக்கு வரும் இறந்தவர்களின் சடலங்கள் வெளிப்புறத்தில் தகரகொட்டகையில் வைத்து எரியூட்டப்படுகிறது.
இதனால் புகை மூட்டம் அதிகமாகி அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகையால் நகராட்சி நிர்வாகம் நவீன எரிவாயு தகனமேடை இயந்திர பழுதினை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- 4-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.
- மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
சீர்காழி:
கொள்ளிடம் அருகே வடரெங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்த மான அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் கோயில் உள்ளது.
மிகவும் பழமையான இந்த கோயில் 15 வருடங்களுக்குப் பிறகு திருப்பணி முடிவுற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 8-ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, தன பூஜை,கணபதி ஹோமம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை பிரவேசம் தொடங்கி முதல் காலயாக பூஜை நடைபெற்றது.
நேற்று 4வது கால யாக பூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதி, மகாதீபாராதனை நடந்தது.
தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள,தாளங்கள் முழங்கிட கோயிலை வலம் வந்து மூலவர் விமான கலசம், அகிலா ண்டேஸ்வரி,விநாயகர், முருகன், கஜலட்சுமி, பைரவர் ஆகிய பரிவார மூர்த்திகள் சந்நிதி கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அன்பரசன், ஆய்வாளர் வீரவேல்பிரனேஷ், தக்கார் முருகன், கணக்காளர் ராஜி, ஊராட்சி மன்ற தலைவர் சுமத்ரா சின்னதுரை, தி.மு.க. செயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் சின்னதுரை ஒன்றியக் குழு உறுப்பினர் செந்தாம ரைகண்ணன் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- மயிலாடுதுறை அருகே கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் அமைந்துள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர், மேனாள் மாவட்ட தலைவர் முருகேசன், வட்டாரத் தலைவர் சித்ரா ஜாக்குலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர், வட்டாரத் செயலாளர் அறிவழகன் வரவேற்றார்.
அப்போது ஆசிரியர் பயிற்சி மாணவர்களைக் கொண்டு பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும், இ.எம்.ஐ.எஸ். பணியை உடனடியாக நீக்கிட வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் , சரண்டர் விடுப்பு பணப்பயன்களை உடனடியாக அரசு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஏராளமான ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் ராஜ்குமார், பாலசுப்பி ரமணியன், ராபர்ட் சந்தனகுமார், சந்திரா, அருள் தாமஸ் எடிசன் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- புதன்பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
- சந்திரயான்-3 திட்ட இயக்குனருமான வீரமுத்துவேல் தனது மனைவியுடன் கோயிலுக்கு வருகைதந்தார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் பிரம்மவி த்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யே ஸ்வரர் சாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் சிவபெருமான் அகோரமூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.
நவக்கிரகங்களில் ஞானாகரன் என்றழைக்கப்படும் புதன்பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மேலும் காசிக்கு இணையான ஆறுதலங்களில் முதன்மையான தலமாக இக்கோவில் உள்ளது.
இக்கோ யிலில் அக்னி, சந்திரன்,சூரியன் ஆகிய மூன்று தீர்த்தகுளங்கள் அமைந்துள்ளது.
பிரசித்திப்பெற்ற இக்கோயிலுக்கு இந்திய வின்வெளி ஆய்வுமைய திட்ட இயக்குனர்களில் ஒருவரும்,சந்திரயான்-3 திட்ட இயக்குனருமான வீரமுத்து வேல் தனது மனைவியுடன் திருவெண்காடு கோயிலுக்கு வருகைதந்தார்.
அவருக்கு கோயில் சிவாச்சாரியார்கள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து வீரமுத்துவேல் சுவாமி, அம்பாள், அகோரமூர்த்தி சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்து, புதன்சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார். அவருடன் கோயில் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- பதிவு பெற்ற கழிவு நீர் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- மனித கழிவுகளை அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றிட வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை வகித்தார்.
மேலாளர் (பொறுப்பு) ரமேஷ் முன்னிலை வகித்தார்.
துப்புரவு பணி மேற்பார்வையாளர் கலியபெருமாள் வரவேற்றார்.
சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் பங்கேற்று பேசுகையில், மனிதர்களைக் கொண்டு கைகளால் மனித கழிவுகளை அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் பினையில் வர முடியாத தண்டனை வழங்க சட்டம் உள்ளது.
2 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க படலாம்.
எனவே அனைவரும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தானியங்கி கழிவு நீர் அகற்றும் வாகனத்தை பயன்படுத்த வேண்டும் நகராட்சி மற்றும் மோட்டார் வாகன அலுவலகத்தில் பதிவு பெற்ற கழிவு நீர் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து தூய்மை பணியாளர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் நகராட்சி ஊழியர்கள் பணி மேற்பார்யாளர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- சிலைகள் 6 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும்.
- விநாயகர் சிலைகளை பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களின் அருகே வைக்கக்கூடாது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார், நிலைய எழுந்தர் குலோத்துங்கன் முன்னிலை வகித்தனர்.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி செந்தில் குமார், சம்பத்,சண்முகம் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொ ண்டனர்.
கூட்டத்தில் இன்ஸ்பெ க்டர் சிவக்குமார் பேசுகை யில், விநாயகர் சிலையை புதிய இடத்தில் வைக்க கூடாது.
கடந்த வருடம் வைத்த இடத்திலேயே வைக்க வேண்டும்.
சிலைகள் 6 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும்.
விநாயகர் சிலை களை பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களின் அருகே வைக்கக்கூடாது.
விநாயகர் சதுர்த்தி முடிந்த மறு தினமே சிலைகளை கரைக்க வேண்டும்.
ஊர்வலத்தின் போது ஜாதி மதம் சார்ந்த கோஷங்களை பாடல்களை பயன்படுத்தக் கூடாது.
எளிதில் தீப்பிடிக்கும் கொட்டகைகளில் சிலைகளை வைக்கக்கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பேசினார்.
இந்த கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முத்து, முருகானந்தம், ஹரி, கமல், கண்ணன், குருசாமி உள்ளிட்ட ஏராளமா னவர்கள் கலந்து கொண்டனர்.