என் மலர்
மயிலாடுதுறை
- வருகிற 13-ஆம் தேதி (புதன்கிழமை) சீர்காழியில் 4-வது வார்டு பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம்
- குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அருகில் உள்ள பகுதிகளில் புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி மூலம் சேகரிக்கப்பட்டு சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள குப்பை கிடங்கில் தரம் பிரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சீர்காழி நகராட்சி சொந்தமான புளிச்சக்காடு சாலை செல்லும் பகுதியில் உள்ள பிச்சைக்காரன் விடுதியில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.
இந்த குப்பைகள் அவ்வபோது ஏரி ஊட்டப்படுவதாகவும் இதனால் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் புகை மூட்டத்தால் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் விளை நிலங்கள், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருந்து வருவதாக கூறுகின்றனர்.
தினமும் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அருகில் உள்ள பகுதிகளில் புகை மண்டலம் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பிச்சைக்காரன் விடுதியில் உள்ள மாமரங்கள், தென்னை மரங்கள், புளிய மரங்கள் தீயில் கருகி வீனாகி வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த விஜயரெங்கன் கூறுகையில், கடந்த சில மாதங்களாக நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. பிச்சைக்காரன் விடுதியில் சட்ட விரோதமாக குப்பை கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பதை கண்டிக்கும் வகையில் வருகிற 13-ஆம் தேதி (புதன்கிழமை) சீர்காழியில் 4-வது வார்டு பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் செய்யப் உள்ளோம் என்றார்.
- நகராட்சிக்கு சொந்தமான சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
- வாடகை செலுத்தாத 3 கடைகளை பூட்டி நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.
இவற்றில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடை களில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது நகராட்சிக்கு வாடகை செலுத்தாத மூன்று கடைகளை பூட்டி நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.
நகராட்சி மேலாளர் (பொறுப்பு) ரமேஷ், இளநிலை உதவியாளர்கள் ராஜகணேஷ், மதுபாலா, ராஜரத்தினம், வருவாய் உதவியாளர் ரவி அலுவலக உதவியாளர் ஜானகிராமன் உடன் இருந்தனர்.
- தமிழகம் முழுவதிலும் இருந்து 900-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- ஆண்கள் பிரிவில் 9 பேரும், பெண்கள் பிரிவில் 11 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கபடி பயிற்சியாளர்கள் இல்லாததால் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்ப டாத சூழல் இருந்தது.
இதற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் நடப்பு 2023 - 24-ம் ஆண்டிற்கான கபாடி வீரர்கள் தேர்வு நேற்று சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதனை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில தலைவர் சோலை என்.ராஜா பங்கேற்று துவக்கி வைத்தார்.
மேலும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என 900 பேர் போட்டிகளுக்கான தேர்வில் பங்கேற்றனர்.
தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக தற்போது மூன்று பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் நடைபெறும் இந்த தேர்வில் ஆண்கள் பிரிவில் 9 பேரும் , பெண்கள் பிரிவில் 11 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் தகுந்த சான்றுகளை சமர்ப்பித்து போட்டியில் பங்கேற்றனர்.
பின்னர் பேசிய மாநில தலைவர் ராஜா கபடிக்கு என்று இங்கு பிரத்தியேகமாக நேஷனல் சென்ட்ரல் ஆப் எக்ஸலென்ஸ் அமைக்க வேண்டும் என்றும், இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்படி அமைக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தார்.
பேட்டியின் போது நகர மன்ற கவுன்சிலர் ரஜினி உள்ளிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருந்தனர்.
- 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்தனர்.
- 103 பேர் அறுவை சிகிச்சைகாக புதுச்சேரி கண் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சீர்காழி:
சீர்காழி விஜய் சுபம் பெனிபிட் பண்ட், லயன்ஸ் சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, ஜெயின் சங்கம் ஆகியன சார்பில் 30-வது ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு முன்னாள் மாவட்ட ஆளுனர் கியான்சந்த் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர்கள் எஸ்.சக்திவீரன்,யுவாராஜ்குமார், ராம்குமார், சோமசுந்தரம் வேல்முருகன் ராஜ்குமார் மண்டல தலைவர் செந்தில் வைரவன் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்கத்தலைவர் சந்துரு வரவேற்றார். முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கே ற்று பரிசோதனை செய்துக்கொ ண்டனர்.
இதில் 103பேர் அறுவை சிகிச்சைகாக இலவசமாக புதுச்சேரி கண் மருத்துவமனைக்கு பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
லயன் சங்க செயலாளர் சரவணகுமார் பொருளாளர் ஆரிப் அலி உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் அரிமா சங்கத்தை சேர்ந்த பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிறைவில் சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளி தாளாளர் சுதேஷ் நன்றிக்கூறினார்.
- இந்து தர்மத்துக்கு தொன்றுதொட்டு வழங்கிவரும் பெயர் சனாதன தர்மம்.
- தாய், சகோதரி, மனைவி ஆகிய உறவுகள் நிலையானது. இதனை எப்போதும் மாற்ற முடியாது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்து தர்மத்துக்கு தொன்றுதொட்டு வழங்கிவரும் பெயர் சனாதன தர்மம். சனாதன தர்மம் என்பது நிலையானது. தாய், சகோதரி, மனைவி ஆகிய உறவுகள் நிலையானது. இதனை எப்போதும் மாற்ற முடியாது.
சனாதன இந்து தர்மத்தை இழிவுபடுத்துகிற கும்பல் வேரோடு களையப்பட வேண்டும். பா.ஜ.க.வினர், இந்து அமைப்பினர் அனைவரும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார் மனு அளிக்க வேண்டும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டு வரப்போகிறோம் என பாரத பிரதமரோ அல்லது வேறு யாருமோ தற்போது தெரிவிக்கவில்லை. பா.ஜ.க.-அ.தி.மு.க. உறவு கணவன்-மனைவி உறவு போன்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 10-ந்தேதி நடைபெறுகிறது.
- புனித நீர் 5 யானைகள் மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
குரு பரிகார ஆலயமான இங்கு ரிஷப தேவரின் கர்வத்தை இறைவன் அடக்கியதாக புராண வரலாறு கூறுகிறது.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம்10-ந்தேதி நடைபெறுகிறது .
இதற்கான யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இதனை முன்னிட்டு காவிரி நதியில் புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாலச்சந்திர சிவாச்சாரியார் தலைமையில் வேத விற்ப்பனர்கள் மந்திரம் ஓத கடங்களில் புனித நீர் எடுக்கப்பட்டு 5 யானைகள் மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.
ஊர்வலத்தில் வெள்ளை குதிரைகள், ஒட்டகம், பசு மாடு, பங்கேற்றன.
சிலம்பாட்டம், கோலாட்டம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் கடவுளர்கள் போல் வேடம் அணிந்தபடி பங்கேற்ற நிலையில் வேத மந்திரங்கள் மற்றும் தேவார பதிகங்கள் ஓதியபடி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியே ஆலயத்தை வந்தடைந்தது.
தருமபுரம் ஆதீன 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் புனித கடங்கள் ஆலயத்திற்குள் எடுத்துவரப்பட்டது.
நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் அகோரம், திருக்கடையூர் கோயில் கூடுதல் கண்காணிப்பாளர் மணி, நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் சிவக்குமார் கவுன்சிலர் ரமேஷ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
- அதிக அளவில் பகுதிநேர வேலை என்ற பெயரில் பெரிய அளவில் மோசடி நடைபெற்று வருகின்றது.
- வேலை வாய்ப்புகள் தேடுவதற்காக சுய விவரங்களை இணைய தளங்களில் பதிவிடுகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின்படி, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல்.பாலசந்திரன் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிப்ப தாவது:-
தற்போது அதிக அளவில் பகுதிநேர வேலை( பார்ட் டைம் ஜாப்) என்ற பெயரில் பெரிய அளவில் மோசடி நடைபெற்று வருகின்றத
இதில் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடியவர்கள் படித்துவிட்டு வேலையில்லா மல் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பட்டதாரி பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இவர்களுடைய டேட்டாக்கள் இவர்கள் வேலை வாய்ப்புகள் தேடுவதற்காக சுய விவரங்களை இணைய தளங்களில் பதிவிடு கின்றனர்.
இதன்மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் சுய விவரங்களை திருட்டுத்தனமாக தெரிந்து கொண்டு மேற்கண்ட பகுதி நேர வேலை எனக்கூறி சில தொகைகளை கட்ட சொல்லி கொடுத்து இன்வெஸ்ட்மென்ட் என்ற பெயரில் பல லட்சங்களை சுருட்டி விடுகின்றனர்.
எனவே இது போன்ற பகுதி நேர வேலை இவை களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதே போல் தங்களுடைய சுய விவரங்களை தேவையில்லாமல் எந்த வெப்சைட்டிலும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலியான வேலை வாய்ப்புகள் உள்ளதாக எஸ்.எம்.எஸ். இ.மெயில், மூலமாக விளம்பரங்களை அனுப்பி உங்களை ஏமாற்றக்கூடும்.
அவர்கள் ஏதேனும் காரணம் கூறி பணம் செலுத்தக் கூறினால் அவர்களிடம் பணத்தை செலுத்தி ஏமாறாதீர்கள்.
மேலும் இது போன்ற அசம்பாவிதங்கள் உங்களுக்கு நடந்து விட்டால் பதட்டம் அடையாமல் உங்கள் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை அணுக வேண்டும் அல்லது உடனடியாக மாநில சைபர் கிரைம் உதவி எண் (1930) 24 மணி நேரத்துக்குள் தொடர்பு கொண்டால் உங்களது பணம் மீட்டு தரப்படும் என்றும்.
இதேபோல் தேவையில்லாத லிங்க்,வீடியோ கால் போன்றவற்றை தொடவேண்டாம் எனவும் மக்கள் இது போன்ற விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செம்பனார்கோயில் அருகே பழைமையான காமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
- புனித நீர் குடங்களை கொண்டு விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் மேற்கு தெருவில் மிக பழைமையான காமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இக்கோயில் கும்பாபி சேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.
யாகசாலையில் பூர்னா குதி நடைபெற்று, மேள தாளங்கள் முழங்க, சுந்தர் சிவாச்சாரியார் புனித நீர் கடங்களை தலையில் சுமந்து விமான கோபுரங்களை சென்றடைந்தனர்.
பின் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, வானவேடிக்கை நடைபெற, புனித நீர் குடங்களை கொண்டு விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
இதனை தொடர்ந்து கருவரையில் சுவாமிக்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிசேகம் நடைபெற்றது.
விழாவில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன், கிராமவாசிகள்,விழா குழுவினர்கள், மற்றும் நாட்டான்மைகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- கணவன், மனைவி இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்
- இதனால் மனமுடைந்த தாட்சாயினி தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கூறைநாடு வடக்கு சாலியத்தெருவை சேர்ந்தவர் குமரன் மனைவி தாட்சாயினி (வயது 43). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.
குமரனுக்கும், தாட்சாயணிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கணவன், மனைவி இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாட்சாயினி புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட அவரது கணவர் குமரன், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாட்சாயினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தாட்சாயினியின் சகோதரி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த யோகாம்பாள் (41) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மயிலாடுதுறை அருகே நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- பாலையூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான பெரம்பூர், கடக்கம், கிளியனூர், சேத்தூர், எடக்குடி, பாலூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதேபோல் குத்தாலம் அருகே பாலையூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் தேரழுந்தூர் பீடருக்கு உட்பட்ட செம்பியன் கோமல், கந்தமங்கலம், கள்ளிக்காடு, நச்சினார்குடி, பெரட்டகுடி, கொழையூர், சித்தாம்பூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- 6 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு வேள்விகளுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
- தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை திருஇந்தளூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 -வது ஆலய மானபரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
காவிரி வடக்கு பகுயில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ,சாரங்கம் உள்ளிட்ட ஐந்து அரங்கங்க ளில், ஐந்தாவது ஆலயமாக இது போற்றப்படுகிறது.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த 2009 -ம் ஆண்டு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கியுள்ளன.
இதற்காக கோபுரங்க ளுக்கு பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி ஆலயத்தில் வெளிப்பிரகாரத்தில் நடை பெற்றது.
6 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு வேள்விகளுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மகாபூர்ணாகுதி யுடன் பாலாலயம் செய்யப்பட்டது.
பின்னர் புனித கடங்கள் சுபமுகூர்த்த பந்தல்கால் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆலய முகப்பில் பந்தல்கால் நடப்பட்டது.
இந்து அறநிலையத்துறையுடன் ராமானுஜ பக்த கைங்கரிய சபா இணைந்து நடைபெற்ற இந்த திருப்பணியில் தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், நகர மன்ற துணைத் சிவகுமார், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், செயல் அலுவலர் ரம்மியா, மேலாளர் விக்கினேஷ்வரன், நகர கவுன்சிலர் ரிஷி, ஒன்றிய கவுன்சிலர் மோகன் உள்ளிட்ட நூற்றுக்க ணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
- பஸ்சுக்காக மாணவர்கள், பொதுமக்கள் மாலை 4 மணி முதல் காத்திருந்தனர்.
- புதைவடம் பதிக்கும் பணியால் அந்த சாலை ஒற்றையடி சாலை போல் குறுகியது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருமுல்லைவாசல் பகுதிக்கு தினந்தோறும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பஸ்கள் மூலம் பல்வேறு கிராமங்களிருந்து பள்ளி மாணவ,மாணவிகள், பொதுமக்கள் சீர்காழிக்கு வந்து செல்கின்றனர்.
வழக்கம்போல் திருமுல்லைவாசல் செல்லும் பஸ்சிக்காக பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் புதிய பேருந்துநிலையத்தில் மாலை 4 மணி முதல் காத்திருந்தனர்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் பேருந்துகள் வரவில்லை.
இரவு 7மணியை கடந்தும் பேருந்துகள் ஏதும் திரு முல்லைவாசல் வழிதடத்திற்கு வராததால் பேருந்திற்காக காத்திருந்த பள்ளி மாண வர்கள் பேருந்து நிலையம் வந்த மற்ற கிராம பேருந்து களையும் நிறுத்தி சிறைபி டித்தனர்.
மாணவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் பேருந்துகள் முன்னேறி செல்லமுடியாமல் மறித்து ஓட்டுனர் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் 7.30மணியளவில் வந்த திருமுல்லைவாசல் வழியாக கூழையார் செல்லும் பேருந்தில் மக்கள் மாணவிகள் ஏறினர். பஸ்சில் இடம் இல்லாமல் படிகளில் மாணவிகளும் தொங்கி கொண்டு நிற்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த பயணிகள் அந்த பேருந்தையும் எடுக்கவி டாமல் சிறைபிடித்தனர்.
பின்னர் அரசு போக்குவரத்து கழக சீர்காழி கிளை மேலாளர் வடிவேல் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சீர்காழியி லிருந்து திருமுல்லைவாசல் செல்லும் சாலையில் வடகால், கடவாசல் பகுதியில் மின்சார வாரியம் சார்பில் புதைவடம் பதிக்கும் பணியால் அந்த சாலை ஒற்றையடி சாலை போல் குறுகியதால் பெரும் போக்குவரத்து நெருக்கடியால் பல மணிநேரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.
இதனால் தான் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தார் .
இதனையடுத்து மறியலை கைவிட்டு மாணவ, மாணவிகள் பேருந்துகளில் ஏறி சென்றனர். இதனால் சீர்காழி புதியபேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.