search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்ட விரோதமாக குப்பைகளை கொட்டி எரிப்பதை கண்டித்து சாலை மறியல்
    X

    சட்ட விரோதமாக குப்பைகளை கொட்டி எரிப்பதை கண்டித்து சாலை மறியல்

    • வருகிற 13-ஆம் தேதி (புதன்கிழமை) சீர்காழியில் 4-வது வார்டு பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம்
    • குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அருகில் உள்ள பகுதிகளில் புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி மூலம் சேகரிக்கப்பட்டு சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள குப்பை கிடங்கில் தரம் பிரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சீர்காழி நகராட்சி சொந்தமான புளிச்சக்காடு சாலை செல்லும் பகுதியில் உள்ள பிச்சைக்காரன் விடுதியில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

    இந்த குப்பைகள் அவ்வபோது ஏரி ஊட்டப்படுவதாகவும் இதனால் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் புகை மூட்டத்தால் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் விளை நிலங்கள், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருந்து வருவதாக கூறுகின்றனர்.

    தினமும் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அருகில் உள்ள பகுதிகளில் புகை மண்டலம் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பிச்சைக்காரன் விடுதியில் உள்ள மாமரங்கள், தென்னை மரங்கள், புளிய மரங்கள் தீயில் கருகி வீனாகி வருகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த விஜயரெங்கன் கூறுகையில், கடந்த சில மாதங்களாக நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. பிச்சைக்காரன் விடுதியில் சட்ட விரோதமாக குப்பை கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பதை கண்டிக்கும் வகையில் வருகிற 13-ஆம் தேதி (புதன்கிழமை) சீர்காழியில் 4-வது வார்டு பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் செய்யப் உள்ளோம் என்றார்.

    Next Story
    ×