என் மலர்
மயிலாடுதுறை
- தமிழக அரசு வேளாண்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
- விவசாயிகள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி பயனடைய வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வ ரன்கோயிலில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் பவர் டிரில்லர் எனும் கைடிராக்டர் வழங்கும் விழா நடந்தது.
வேளாண் இயந்திரமய மாக்கல் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் ஆர்.ராஜாராம் தலைமை வகித்தார்.
திமுக ஒன்றிய செயலாளர் பிரபாக ரன்,பேரூர் கழக செயலாளர் அன்புசெ ழியன்,மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், திமுக பொறுப்பாளர்கள் தேவேந்திரன்,முருகன்,முத்துக்குமரன்,பழனிவேல் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி சட்டபேரவை உறுப்பி னர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று 30 பயனாளிகளுக்கு பவர் டிரில்லரை வழங்கி, பேசும்போது தமிழக அரசு வேளாண்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவித்து செயல்படுத்தி வருகிறது விவசாயிகள் அரசின் திட்டங்களை பயன்படுத்திக் பயனடைய வேண்டும் என்றார்.
- புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தை வந்தடைந்தது.
- கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ மனோன்மணி சமேத கைலாசநாதர் கோவில் உட்பட ஏழு கோவில்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, பிம்பசுத்தி ரக்ஷா பந்தனன், நாடி சந்தானம், தத்துவச்சாரணை, ஸ்பரிசாஹூதி, திரவியா ஹூதி, மகாபூர்ணா ஹூதி, யாத்ரா தானம், கிரகப்பிரிதி அனைத்து ஆலயங்களுக்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்கள் சுமந்து ஊர்வலமாக புறப்பட்டு ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், ஸ்ரீ சீதலா தேவி மாரியம்மன், ஸ்ரீ மன்மத சுவாமி கோயில், ஸ்ரீ கூந்தாளம்மன் கோயில், ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயம், ஸ்ரீ கைலாசநாதர் ஆலயங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆச்சாரிய உற்சவம், எஜமானும் உற்சவம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடு துறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாக குழுத்தலைவரும், மாவட்ட திமுக துணைத்தலை வருமான மு. ஞானவேலன் உள்ளிட்ட 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கீழப்பெரும்பள்ளம் கிராம வாசிகள் செய்தனர்.
- 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன.
- மின்கம்பங்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் விழும் அபாயம் உள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை தாலுகா கிழாய் ஊராட்சி சந்தன கருப்பு கோவில் அருகே மணல்மேடு சாலையில் மின்கம்பங்கள் உள்ளன. அந்த மின்கம்பங்களில் அடுத்தடுத்து வரிசையாக உள்ள 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன.
இந்த மின்கம்பங்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் சாய்ந்து வயலில் விழும் அபாயம் உள்ளது. இந்த மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை புகார் கொடுத்தும், இது வரையிலும் சீரமைக்கப்படவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொது மக்களின் நலன் கருதி, ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக, மேற்கண்ட பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடலங்குடி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- இதனால் திருமணஞ்சேரி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது.
மயிலாடுதுறை:
குத்தாலம் அருகே கடலங்குடி துணை மின் நிலையத்தில் நாளை 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான கடலங்குடி, வானாதிராஜபுரம், சோழன்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மயிலாடுதுறை மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா தெரிவித்துள்ளார்.
- சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் காரில் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 220 லிட்டர் வெளிமாநில சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தரங்கம்பாடி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட த்திலிருந்து சாராயம் மதுபாட்டில்களை கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டி ல்கள் காரில் கடத்தி வருவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நீலகண்டன் தலைமையில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெ க்டர் நாகரெ த்தினம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், தலைமை காவலர் அருள், முதன்மை காவலர்கள் மனோகர், மகேஷ், பாலகுரு ஆகியோர் செம்பனா ர்கோவில் காவல் சரகம் ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 672 வெளிமாநில மதுபாட்டி ல்கள் மற்றும் பாக்கெட்டுகள், இருந்தது கண்டுபி டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மது கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட காரையும், 672 வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் 220 லிட்டர் வெளி மரிநல சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்
இது தொடர்பாக மயிலாடுதுறை அருகே பாண்டூரை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேஷ் என்பவ ரை கை செய்து விசாரணை செய்ததில் காரைக்காலில் இருந்து சீர்காழி பகுதிக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 18 சித்தர்கள் ஒளிலாய பீடத்தில் பவுர்ணமி யாகம் நடந்தது
- விவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்யப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா காரைமேடு சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 18 சித்தர்கள் ஒளிலாய பீடத்தில் பௌர்ணமி மகாயாகம் நடைபெற்றது. யாகத்தில் சந்திராயன் 3 நிலவில் செல்ல காரணமாக இருந்த விஞ்ஞானிகளுக்கு நன்றி செலுத்தியும்,விவசாயம் செழித்து வளரவும், சிறப்பு பிரார்த்தனை செய்ய ப்பட்டது.
இதில் நாடி செல்வ முத்துக்குமரன், பள்ளி தாளாளர் லெனின்,நாடி குணசேகரன், பொறியாளர் கதிரவன் தொழிலதிபர் ராகேஷ் குமார் மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
- முன்னதாக கோவிலின் அருகில் 123 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
- புனிதநீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தோளில் சுமந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். அம்மன் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக புராண வரலாறு கூறுகிறது.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
பணிகள் முடிவடைந்த நிலயைில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கோவிலின் அருகில் 123 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலையில் வைப்பதற்காக கங்கை, யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து, கடந்த 31-ந் தேதி மாலை முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. 1-ந் தேதி 2,3-ம் கால யாகசால பூஜையும், நேற்று 4, 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 6-ம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹுதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், கடம் புறப்பாடு நடைபெற்றது.
புனிதநீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தோளில் சுமந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தனர்.
தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, வானில் கருடன் வட்டமிட, மேளதாளங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு பணிக்காக சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமானோர் திரண்டதால் நகரமே விழாக்கோலம் பூண்டது.
- மாணவர்களின் கற்றல் திறன் வளர்ந்து தேர்ச்சி சதவீதம் உயரும்.
- ரூ.12 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் அண்ணாகுளம் மேம்படுத்தப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்தில் ரூ.48 இலட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ளப்படுவதை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திரப்பள்ளி, புளியந்துறை ஆகிய பகுதிகளில் ரூ.48 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆச்சாள்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியினை பார்வையிட்டு, 12-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து, வாசிப்பு பழக்கத்தை உருவாக்கி, தினசரி பாடங்களை அன்றைக்கே நிறைவு செய்யும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும்.
அப்போது தான் மாணவர்களின் கற்றல் திறன் வளர்ந்து, தேர்ச்சி சதவீதம் உயரும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், மகேந்திர ப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, புளியந்துறை கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.8 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம் கட்டப்பட்டு வருவதையும், புளியந்துறை கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் அண்ணாகுளம் மேம்படுத்தப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், மகேந்திர ப்பள்ளி மற்றும் புளியந்துறை கிராமங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை கள ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், அருள்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி சிவபாலன் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பூரணசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- எனது வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிற்கின்றன.
- அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படும்.
சீர்காழி:
வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் மன்ற கூட்டம் நடைபெற்றது.பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை வகித்தார்.
செயல் அலுவலர் அசோகன், துணைத் தலைவர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பதிவரை எழுத்தர் உதயகுமார் மன்றத் தீர்மானங்களை பிடித்தார்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-
வித்யா தேவி:-
எனது வார்டு பகுதியில் சேதம் அடைந்த நிலையில் குடிநீர் குழாய் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும். ராஜா கார்த்திகேயன்:-
எனது வார்டு பகுதியில் எந்த வளர்ச்சி பணிக ளும் இதுவரை மேற்கொள்ள ப்படவில்லை. காட்டு நாயக்கன் தெருவில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைத்து தர வேண்டும்.
முத்துக்குமார்:-
வைத்தீ ஸ்வரன் கோயில் பகுதிகளில் உள்ள பொதுப்பணி த்துறைக்கு சொந்தமான வாய்க்கால்களை தூர்வா ரப்படாததால் இந்த ஆண்டு மழை காலங்களில் மழைநீர் வடிய வழியில்லாமல் ஊருக்குள் மழைநீர் புகும்.
முன்கூட்டியே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கென்னடி:-
எனது பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும்.
மீனா:-
பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் . மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
பிரியங்கா: -
எனது வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிற்கின்றன. இந்த பணியினை துரிதப்படுத்த வேண்டும்.
துணைத் தலைவர் அன்புசெழியன்:-
வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேவையான வளர்ச்சிப் பணிகளை தேர்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.
தலைவர் பூங்கொடி:-
வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் வரும் மார்ச் மாதம் முதல் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (100 நாள் வேலை) தமிழக அரசு சார்பில் செயல்படுத்த உள்ளது.
இதற்கு அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பி னர்களும் ஆதரவு தர வேண்டும்.
உறுப்பி னர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்றார்.
- இரும்பு சீட்டுகள் மற்றும் இரும்பு ஆங்கிள்களை இருவர் திருடி செல்ல முயன்றனர்.
- போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோயில் அடுத்த கதிராமங்கலம் பகுதியில் நெடுஞ்சா லைத்துறை சார்பில் சாலை விரிவாக்கம் மற்றும் சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பாலம் கட்டும் பணியில் வைக்கப்பட்டிருந்த இரும்பு சீட்டுகள் மற்றும் இரும்பு ஆங்கிள்களை இருவர் திருடி செல்ல முயன்றனர்.
இதனை பார்த்த பணியின் மேற்பார்வை யாளர் அவர்களை பிடித்து வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
போலீசார் விரைந்து சென்று இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் பாகசாலை ஆலவெளி பகுதியை சேர்ந்த செல்வக்கு மார் (வயது 21), மயிலாடுதுறை காளிங்க ராயன் ஓடை பகுதியை சேர்ந்த சக்தி கவுதம்
(22 ) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- 123 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
- 82 மணிநேர அகண்ட பாராயண நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்தி ற்கு சொந்தமான சுமார் 1500 ஆண்டுகள் பழமையா ன மாயூரநாதசாமி கோவில் உள்ளது. அம்மன் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக புராண வரலாறு கூறுகிறது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 3-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலின் அருகில் 123 குண்டங்களுடன் பிரம்மா ண்ட யாகசாலைகள் அமை க்கப்பட்டுள்ளது. இதற்காக கங்கை யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டது.
புனிதநீர் அடங்கிய கடங்களில் கருவறையில் உள்ள சுவாமி- அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் பூஜை செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கடங்க ளை தலையில் சுமந்து வந்து யாகசாலையில் பிரவேசம் செய்யப்பட்டு திருவா வடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் முதற்கால யாகசால பூஜைகள் தொடங்கியது.
பின்னர், 123 யாக குண்டங்களில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, பட்டு வஸ்திர ஹோமம், பூரணாஹதி நடைபெற்று 16 வகையான சோடச தீபாராதனை காண்பி க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து. ஓதுவார்களின் 82 மணிநேர அகண்ட பாராயணம், பன்னிரு திருமுறை, திருமுறை பண்ணிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சொற்பொழிவுகள், சிறப்பு இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து, 2,3 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இதில் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி, பல்வேறு மடங்களை சேர்ந்த மடாதிபதிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை உபயதாரர்களை கொண்டு ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, கோவில் துணை கண்காணிப்பாளர் கணேசன், காசாளர் வெங்கடேசன், விழா குழுவின் ஒருங்கி ணைப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- ஆச்சாள்புரம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோயில், அரசூர், எடமணல், ஆச்சாள்புரம் ஆகிய துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் சீர்காழி நகர் பகுதிகள், வைத்தீஸ்வரன் கோயில், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், கொள்ளிடம், புத்தூர், கொண்டல், பழையாறு, பழையபாளையம், திருமுல்லைவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி தெரி வித்துள்ளார்.