என் மலர்
மயிலாடுதுறை
- கல்லாவில் இருந்த ரூ.70 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
- ஜவுளி கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை உடைத்து விட்டு தப்பி சென்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியின் பிரதான பகுதியான கடைவீதியில் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் வாழைப்பழம் கடை வைத்து நடத்தி வருபவர் நல்லமுத்து.
நேற்று வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.இன்று காலை கடையை திறக்க வந்தார்.அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 70 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் அதே மார்க்கெட் பகுதியில் உள்ள பாஸ்கரன் என்பவரது பூக்கடை கதவினை உடைத்து மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.
அருகில் காமராஜர் வீதி உள்ள ராகுல் பழக்கடையில் புகுந்த மர்ம நபர்கள் அங்கே கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 8000 யை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அருகில் இருந்த நாராயணன் பூக்கடையில் இருந்த கல்லாப்பெட்டி எடுத்து சென்று சில மீட்டர் தூரத்தில் வீசிவிட்டு அதில் இருந்து செல்போனை திருடிய நபர்கள் அதன் அருகாமையில் இருந்த பேன்சி கடையில் புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.
இதைப்போல் கடைவீதியில் இருந்த மற்றொரு பழக்கடையிலும் கல்லாப் பெட்டியில் இருந்த பணத்தையும் அருகில் இருந்த துணிக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்தும் தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடைபெற்ற கடைகளில் விசாரணை நடத்தினார்.
மேலும் அப்பகுதியில் இருந்த சி சி டிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சீர்காழியின் பிரதான மக்கள் அதிகம் கூடும் மையப் பகுதியில் அடுத்தடுத்து 6 கடைகளில் மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் வணிகர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- கருப்பு பேட்ஜ் அணிந்து மூவலூரில் இருந்து சித்தர்காடு அண்ணா சிலை வரை மவுன ஊர்வலம் சென்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமை யில் மூவலூர் கடைத்தெருவில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநி தியின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு அவருடைய படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கருப்பு பேஜ் அணிந்து அமைதி பேரணையாக மூவலூரில் இருந்து புறப்பட்டு சித்தர்காடு அண்ணா சிலை வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னால் எம்.எல்.ஏ. பாலஅருட்ச்செல்வன், வழக்கறிஞ்சர் அணி சேசோன், ஒன்றிய அவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு, ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் மாப்படுகை சிவக்குமார், வில்லியநல்லூர் காமராஜ், நீடூர் ஏ.கே .எஸ். பதர்நிஷா நஜிம், கங்கனபுத்தூர் மும்தாஜ் இப்ராஹிம்,அருள்மொழி தேவன் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழரசன், சித்தர்காடு ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல், உள்ளீட்ட ஏராளமான திமுக வினர் கலந்து கொண்டனர்.
- முகாமில் 400 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
- முகாமை டாக்டர் பன்னீர்செல்வம் தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
சீர்காழி:
சீர்காழி தாலுக்கா அண்ணன் கோயில் கிராமத்தில் சீர்காழி ரோட்டரி சங்கம், தனலட்சுமி மருந்தகம் மற்றும் பரிசோதனை மையம் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மருந்தாளுநர் சடகோபன் கல்யாணராமன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பாஸ்கரன், சாமிசெழியன், சுப்பி ரமணியன், பழனியப்பன், கணேஷ், கேசவன் அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருந்தகத்தை மருத்துவர் முருகேசன் திறந்து வைத்தார் மருத்துவ பரிசோதனை மையத்தை டாக்டர் முத்துக்குமார் திறந்து வைத்தார்.
மருத்துவ மையத்தை மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் வீரராகவன் திறந்து வைத்தார்.
மருத்துவ முகாமை மருத்துவர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மருத்துவர்கள் முத்துக்கு மார், முருகேசன், குருமூர்த்தி, தாரணி ஸ்ரீதர் கனிமொழி அக்ஷயா அருண்குமார் சௌந்தர்யா சிந்துஜா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் செல்வகுமார், சண்முகசுந்தரம், சிவகுரு, திருநாவுக்கரசு ராஜேந்திரன் அப்துல் கலாம் நர்சிங் கல்லூரி தாளாளர் மதியழகன் ஊராட்சி மன்ற தலைவர் அம்பேத்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர்கள் கந்தசாமி பாலமுருகன் சண்முகம் நடராஜன் சரவணன் முருகன் அப்துல் நாசர் ராஜ்பரிக் குமார் கண்ணன் கோவிந்தராஜ் சேகர் கணேசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜமாத்தார்கள் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
400 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினார்கள் ரோட்டரி சங்க செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
- பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.
- குடும்ப அட்டைதாரர்களிடம் பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார்.
சீர்காழி:
சீர்காழி வட்டாரத்தி ற்குட்பமேடு ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 22 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் கீழசாலை, அஞ்சமன்னை முதல் முக்காவட்டம், நாராயணபுரம் வழியாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து காரைமேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் மேலசாலை வாய்க்கால் தடுப்பணை கட்டப்பட்டு வருவதையும், திருவாலி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் கூட்டுறவு பால் சேகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு பணிகளின் தரத்தினை ஆய்வு செய்து ஒப்பந்தகாலத்திற்குள் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
பின்னர் திருவாலி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இரண்டாம் கட்டம் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டு முகாம் அலுவலர்கள், தன்னார்வலர்களிடம் குடும்ப அட்டைதாரர்களிடம் பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார்.திருவாலி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சீர்காழி வட்டாரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளின் தற்போதைய நிலை,முன்னேற்றம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலக பொறியா ளர்களிடம் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வில் சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ வன்,சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தக்காளி விலை உயர்சை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை:
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையுடன் இணைந்து 10 கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த தக்காளி விற்பனையை மயிலாடுதுறை மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேலாண்மை இயக்குனர் அண்ணாமலை, மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- காய்கறிகளின் விலை விபரங்களை வியாபாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
- தானியங்கி வானிலை ஆய்வு மையத்தை ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழி வட்டத்திற் குட்பட்ட வைத்தீஸ்வரன் கோயில், எடக்குடி வடபாதி, தென்னலக்குடி, கடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மை , உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வேளாண் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வைத்தீஸ்வரன்கோயில் துணை வேளாண் விரிவாக்க மையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விதை இருப்பு விவரங்களை கேட்டறிந்தார். விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் இடுபொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா என வேளாண்மை துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, வைத்தீஸ்வரன் கோயில் விதை சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விதை சுத்திகரிப்பு பணியினை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக தரமான விதைகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தார்.
பின்னர் எடக்குடி வடபாதி கிராமத்தில் விவசாயி ஒருவர் பயிரிடப்பட்டுள்ள பருத்திக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையுமா என்பதனை வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, தென்னலக்குடி கிராமத்தில் தானியங்கி வானிலை ஆய்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீர்காழியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையினை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் மற்றும் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகளின் விலை விபரங்கள் வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். உழவர் சந்தை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதனையும் ஆய்வு செய்தார். மேலும் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழிசை மூவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், துணை இயக்குனர் (வேளாண் வணிகம்); வெற்றிவேலன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் , வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், தோட்டக்கலைத்துறை குமரேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஆடி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
- பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டங்களுடன் ஏராளமான பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர்.
சீர்காழி:
சீர்காழியில் உள்ள சக்தி வாய்ந்த இரட்டை காளியம்மன் கோயிலில் இந்த ஆண்டு ஆடி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டி தொடங்கி நடை பெற்று வந்தது . விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா நடந்தது . முன்னதாக கடைவீதி செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பச்ச காளி பவளக்காளி ஆட்டங்களுடன் கரகம் எடுத்துக் கொண்டும் திரளான பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
- மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
- சீர்காழி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
சீர்காழி:
மதுரையில் வருகிற 20ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனிடையே மாநாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து எழுச்சி மாநாட்டிற்கு பொதுமக்க ளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேனர், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி சீர்காழி பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்றது.
மாவட்ட அவை தலைவர் பி.வி. பாரதி தலைமையில், நகர செயலாளர் எல்.வி.ஆர் வினோத் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , பைக், ஆட்டோ, வேன் , கார், உள்ளிட்டவற்றில் அ.தி.மு.க எழுச்சி மாநாடு குறித்த ஸ்டிக்கர் மற்றும் பேனரை ஒட்டிப் பணிகளை அவை தலைவர் பி.வி. பாரதி தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சீர்காழி முன்னாள் நகர செயலாளர் பக்ரிசாமி , ஜெ.பேரவை செயலாளர் ஏ.வி. மணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு பரணிதரன், தொழில் அதிபர் சீனிவாசன் , நகர்மன்ற உறுப்பினர்கள் நாகரத்தினம் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, பொறு ப்பாளர்கள் வக்கீல்கள் நெடுஞ்செழியன், மணிவ ண்ணன் மற்றும் சுரேஷ், ரவி சண்முகம், நகர மகளிர் அணி செயலாளர் லெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- 907 மாணவ -மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை எம்.எல்.ஏ. வழங்கினார்.
- ஆயங்குடி பள்ளி தலைமைஆசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.
சீர்காழி:
சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி, சியாமளா பெண்கள் , எல்.எம்.சி , ஆயங்குடிபள்ளம் வேங்கடேசா , கோதண்ட புரம் ராமகிருஷ்ணா , திருவெண்காடு சு.சு.தி.ஆண்கள் ஆகிய 6 அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா ச.மு.இ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். ச.மு.இ. பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி வரவேற்றார். நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர் நித்தியாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைஆசிரியை கீதா வரவேற்றார். விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்று மாணவ -மாணவிகள் 907 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புறையாற்றினார்.
இதில் பள்ளி தலைமைஆசிரியர்கள் செல்வகுமாரி (எல்.எம்.சி பள்ளி), அருளரசன் (இராம கிருஷ்ணா), நடராஜன் (சு.சு.தி.பள்ளி) மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரெங்கன், முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முடிவில் ஆயங்குடிபள்ளி பள்ளி தலைமைஆசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.
- சீர்காழி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
- மருத்துவ உதவியாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 2000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு அனைத்து வகையான நோய்களைக் கண்டறியும் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலர் வி.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். டி.என்.சாய் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் மருத்துவர்கள் எம். ஸ்ரீநாத் , எஸ். பாரத், எஸ்.அருண் குமார், சி.அபிநயா, எம். சுப்பிரமணியம், சிவநேசன் மற்றும் மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டு தேவையான மருத்துவ சிகிச்சையளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியினை பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
டி.ஆர்.பார்த்தசாரதி, சத்ய சாய் சேவா நிறுவனங்களின் மாவட்டத்தலைவர் எஸ். சங்கரன், பள்ளி உதவித் தலைமையாசிரியர்கள் என்.துளசிரங்கன், டி.ஸ்ரீனிவாசன் பங்கேற்றனர்.
நிறைவில் பள்ளி உதவித் தலைமை யாசிரியர் எஸ். முரளிதரன் நன்றி கூறினார்.
- சீர்காழியில் இரட்டை காளியம்மன் கோயில் உள்ளது.
- விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை தீமிதி திருவிழா நடைபெறுகிறது.
சீர்காழி:
சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் சக்தி வாய்ந்த இரட்டை காளியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஆடி மாத தீமிதி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் இரட்டை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை தீமிதி திருவிழா நடைபெறுகிறது. முன்னதாக சட்டை நாதர் சுவாமி கோயிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவில் சென்றடைந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து மாலை பச்சகாளி, பவளக்காளி வேடம் அணிந்து பக்தர்கள் வீதியுலா வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
- சீர்காழி போலீசார் விசாரணையில் முருகன் கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது.
- விசாரணை செய்ததில் கொத்தனார் முருகனை, ராஜகோபால் கொலை செய்தது தெரிய வந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் மேல வீதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் சாலையோரம் இறந்து கிடந்தார்.
இது குறித்த சீர்காழி போலீசார் விசாரணையில் இறந்தவர் மயிலாடுதுறை, சீனுவாசபுரம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த முருகன்(50) என்பதும், கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து சீர்காழி போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் முருகன் கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது.
முருகன் சீர்காழி எவ்வாறு வந்தார். அவரை கொலை செய்தது யார் என்று சீர்காழி பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் முருகனுடன் ஒரு நபர் சேர்ந்து வருவது போன்ற காட்சி பதிவாகியிருந்ததையடுத்து அந்த நபருக்கு கொலையில் தொடர்பு இருக்ககூடும் என அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் ஒரு நபர் இருசக்கரவாகனத்தில் சென்ற நபரை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றதாக காவல்நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து போலீசார் மர்மநபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் நாங்கூர் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது 26) என்பது தெரியவந்தது.
மேலும் கொத்தனார் முருகன் கொலை வழக்கு தொடர்பான சிசிடிவி காட்சியில் அவருடன் உள்ள நபர் ராஜகோபால் என்பதை அறிந்த போலீசார்
தீவிரமாக விசாரணை செய்ததில் கொத்தனார் முருகனை, ராஜகோபால் கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.
முருகனிடம் ரூ.5ஆயிரம் ராஜகோபால் கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த பணத்தை கேட்டுவந்த நிலையில் சம்பவத்தன்று முருகனை ராஜகோபால் சீர்காழி வரவழைத்து இரவு நேரத்தில் சாலையோரம் படுத்துறங்கும் போது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சீர்காழி போலீசார் கொலைவழக்காக மாற்றி ராஜகோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.