என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சேலம்
- இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.59 அடியாக இருந்தது.
- தற்போது அணையில் 73.64 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.
இதற்கிடையே கடந்த மாதம் 3-வது வாரத்தில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக 96 அடியாக குறைந்த அணையின் நீர்மட்டம் மீண்டும் 107 அடியாக உயர்ந்தது.
இந்த நிலையில் தற்போது மழை குறைந்து விட்டது. ஆனாலும் டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்கு ஏற்ப அங்கு மழை பெய்தால் தண்ணீர் குறைத்தும், மழை நின்றால் அதிகரித்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தண்ணீர் தேவை குறைந்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.59 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 9 ஆயிரத்து 466 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 9 ஆயிரத்து 149 கனஅடியாக குறைந்தது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 73.64 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- நெடுஞ்சாலையில் சென்ற பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- பஸ்சில் இருந்து பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நெடுஞ்சாலையில் சென்ற பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் பஸ் மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவை நோக்கி சென்ற ஆம்னி பஸ், சங்ககிரி கோவை தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி கவிழ்ந்தது. பஸ் கவிழ்ந்த சில நொடிகளில் தீப்பற்றி எரிந்தது.
பஸ்சில் இருந்து பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
- மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
- விடுமுறை முடிந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி ஏற்காடு வெறிச்சோடியது.
ஏற்காடு:
சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலை பகுதி முழுவதும் பச்சைபசேலேன காட்சி அளிக்கிறது. இது தவிர சுற்றுலா தலங்கள் அனைத்தும் பசுமையாக மாறியது.
இந்த நிலையில் கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. அப்போது பெய்த திடீர் மழை மற்றும் பனிப்பொழிவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில் விடுமுறை முடிந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி ஏற்காடு வெறிச்சோடியது. இதே போல் கடந்த சில நாட்களாக மழையும் இல்லை. இந்த நிலையில் ஏற்காட்டில் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 11 மணி வரை பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது.
இதன் காரணமாக மாலை 4 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் ஏற்காடு நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. பனிப்பொழிவுடன் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் குறைய தொடங்கியது.
- தற்போது அணையில் 74.10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருந்தது. கடந்த சில நாட்களாக மழை அதிகமாக இருந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியாக உயர்ந்தது.
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் குறையதொடங்கியது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிகளவில் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.92 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 566 கனஅடி தண்ணீர் நேற்று வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 9 ஆயிரத்து 929 கனஅடியாக குறைந்து காணப்பட்டது. மேலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 74.10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- கூட்டத்தில் கிராம காங்கிரஸ் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், பூரண மதுவலக்கை அமல்படுத்தவும் மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது.
சேலம்:
தமிழகத்தில் முதல் முறையாக சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பம்பாளையத்தில் இன்று கிராம காங்கிரஸ் வளர்ச்சி திட்டம் தொடக்க விழா நடைப்பெற்றது.
இதில் சேலம் மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், சங்ககிரி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சுமார் 146 கிராமங்களை சேர்ந்த கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர், செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரத்தினவேல் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் எம்.பி.எஸ்.மணி, எடப்பாடி கோபால், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., காங்கிரஸ் தேசிய செயலாளர் சூரஜ்ஹெக்டே, முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார், மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொது செயலாளர் கார்த்திக் தங்கபாலு, மாநில அமைப்பு செயலாளர் ராம்மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் இந்த கூட்டத்தில் கிராம காங்கிரஸ் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், பூரண மதுவலக்கை அமல்படுத்தவும் மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. எடப்பாடி பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர், காந்தி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
- மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- அணையில் தற்போது 74.54 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு வினாடிக்கு 9,917 கன அடியில் இருந்து 11,526 கன அடியாக அதிகரித்துள்ளது.
மொத்தம் 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.24 அடியாக உள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் 12,000 கனஅடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையில் தற்போது 74.54 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.
- 3 வருட காலமாக தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் இதுவரைக்கும் இப்படி பேசியது இல்லை.
- பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இந்த ஆட்சியில் உருவாகிறது.
எடப்பாடி பழனிசாமி வீரப்பம்பாளையத்தில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கே. விஜய் அ.தி.மு.க.வை விமர்சிக்காதது குறித்து?
ப. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலும் சரி, ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் சரி, அம்மாவுக்கு பிறகும் சரி நிறை திட்டங்களை தந்து நிறைவேற்றப்பட்டு மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சி அ.தி.மு.க., அதனால் அ.தி.மு.க.வை விஜயால் எப்படி விமர்சிக்க முடியும்.
கே. தி.மு.க.வில் கூட்டணி பிளவு ஏற்பட்டுள்ளது என எதை வைத்து சொல்கிறீர்கள்?
ப. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டணியில் பங்கு என அறிவிப்பு வெளிட்டு இருக்கிறார்கள். அதுபோல் விடுதலை சிறுத்தை கட்சி வெளியிட்டு இருக்கிறது. கம்யூனிஸ்ட்டு கட்சி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசாங்கத்தை எதிர்த்து போராடுகின்றபோது கூட்டணியில் பிளவு என்று பார்க்க வேண்டியது தானே.
3 வருட காலமாக தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் இதுவரைக்கும் இப்படி பேசியது இல்லை. மக்கள் பிரச்சனைக்காக எந்த போராட்டமும் செய்யவில்லையே. அண்மை காலமாகதானே இதை எல்லாம் அறிவிக்கிறாங்க. இதனால் தான் அவர்களுடைய நடவடிக்கையை வைத்துதான் கூட்டணியில் பிளவு இருப்பதாக தெரிவிக்கிறோம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆங்காங்கே வன்முறை. நம்முடைய வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாம்பட்டி பகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் பிரச்சனை செய்தவர்களிடம் அமைதியாக போங்க என தட்டி கேட்கிறார். அதற்காக அவரது வீட்டின் கூரை மீது ஏறி உடைச்சு உள்ளே இருந்த அவரை பிடித்து இழுத்து வெளியே போட்டு அடித்து உதைக்கிறாங்க. எனவே பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இந்த ஆட்சியில் உருவாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க.வில் உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதை கிடையாது.
- தி.மு.க.வில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி வீரப்பம்பாளையம் பகுதியில் எடப்பாடி நகர அ.தி.மு.க சார்பில் செயல் வீரர்கள், செயல் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 2 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 11 சட்டமன்ற தொகுதியில் 10 இடங்களில் வென்றது அ.தி.மு.க கூட்டணி. சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தி.மு.க.வில் உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதை கிடையாது. தி.மு.க.வில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. கட்சியை வளர்த்தவர்கள், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், மூத்த அமைச்சர்கள் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு கருணாநிதி குடும்பத்தில் பிறந்த மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதியை இன்றைக்கு துணை முதலமைச்சராக்கி இருக்கின்றீர்கள் என்றால் அங்கு சர்வாதிகாரம் தலைதூக்கி இருக்கின்றது.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கின்றார். அடுத்தது உதயநிதி இளவரசராக இருக்கின்றார். அவர் முதலமைச்சர் என்கிற ஸ்டாலினுடைய கனவு ஒருபோதும் தமிழகத்தில் பலிக்காது.
தி.மு.க.வில் கருணாநிதி தலைவராக இருக்கும்போது ஸ்டாலினை வளர்த்துவதற்கு கட்சியில் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். 20 ஆண்டு காலம் ஸ்டாலின் அந்த கட்சிக்காக உழைத்தார். இதை இல்லை என்று நாங்கள் மறுக்கவில்லை. அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தார். மேயராக இருந்தார். எதிர்கட்சி தலைவராக இருந்தார். அப்புறம்தான் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இதற்கு 20 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் கட்சிக்காக பாடுபடாமல் தி.மு.க. என்கிற அடையாளம் வைத்துக் கொண்டு, கருணாநிதி குடும்பம் என்கிற அடையாளம் வைத்துக் கொண்டு உதயநிதிக்கு துணை முதலமைச்சர் என பட்டாபிஷேகம் செய்திருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்தியாவிலேயே மன்னராட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் மன்னராட்சி என்பது ஒருபோதும் எடுபடாது. அதற்கு மக்களும் அனுமதிக்க மாட்டாங்க.
குடும்ப கட்சியாக மாறிவிட்டது தி.மு.க., வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக அமையும் ஸ்டாலின் அவர்களே. நீங்கள் எவ்வளவோ முயற்சி பண்ணுகிறீங்க. தன்னுடைய மகனை பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள வைத்து மக்களிடத்திலே ஈர்ப்பு சக்தி உண்டாக்க வேண்டும் என்பதற்கு முயற்சி செய்கிறீங்க. எந்த ஒரு முயற்சியும் எடுபடாது.
மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டை பொறுத்தவரையும் விழிப்புணர்வு கொண்ட மக்கள். 2011-க்கு பிறகு 2021 வரை அதி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு எப்படி இருந்தது என சற்று நினைத்து பாருங்கள்.
எடப்பாடி தொகுதி என்று சொன்னால் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் எடப்பாடியிலேயே இருக்கின்றார் என்கிற ஒரு அடையாளத்தை இன்றைக்கு தமிழக மக்கள் கொடுத்து இருக்கிறார்கள்.
10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை கொடுத்த அரசாங்கம் அ.தி.மு.க. அரசாங்கம் என்பதை நாங்கள் நிரூபித்து காட்டினோம்.
தி.மு.க. ஆட்சியில் எதிர்கட்சி சொல்வதை காது கொடுத்து கேட்பது கிடையாது. தி.முக. ஸ்டாலின் ஆட்சியில் தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை நிறுத்தப்பட்டு விட்டது. அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என எவ்வளவோ சூழ்ச்சி செய்தாங்க. ஆனால் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- விழாவை உபர் நீர் திட்டத்தில் முதல் ஏரியாக இருக்கும் எம். காளிப்பட்டி ஏரி அருகே நடத்துவது என விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
- இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு விழா மேடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
மேட்டூர்:
மேட்டூர் காவிரி- சரபங்கா உபரி நீரேற்று திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட வடிநில வட்டத்தில் உள்ள 100 ஏரிகளை நிரப்பும் விதமாக 565 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உபநீர் திட்டத்தை செயல்படுத்திய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நீரேற்று திட்டத்தின் மூலம் பயன்பெறும் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் சார்பில் வருகிற 17-ந்தேதி பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவை உபர் நீர் திட்டத்தில் முதல் ஏரியாக இருக்கும் எம். காளிப்பட்டி ஏரி அருகே நடத்துவது என விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனை முன்னிட்டு விழா நடைபெறும் இடத்தை சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ. மணி, எம்.பி. சந்திரசேகரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு விழா மேடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
- நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,325 கன அடியாக இருந்தது.
- கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை ஆகியவற்றை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கிறது. அதன்படி நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,325 கன அடியாக இருந்தது.
இன்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 6,712 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 107.50 அடியாகவும், நீர் இருப்பு 74.90 டி.எம்.சி.யாகவும் உள்ளது. தமிழக காவிரி டெல்டா பசானத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- நீர்வரத்து கணிசமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.22 அடியை தொட்டது.
- அணையில் தற்போது 75.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 20 ஆயிரத்து 255 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 14 ஆயிரத்து 273 கனஅடியாக குறைந்தது.
நீர்வரத்து கணிசமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.22 அடியை தொட்டது. தொடர்ந்து அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 2500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 75.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
சேலம்:
தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 475 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 20 ஆயிரத்து 255 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 107.54 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 20 அடிக்கு குறையாமல் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்