என் மலர்
திருவாரூர்
- விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 10-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
- அன்றைய தினம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகும்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது.
விழாவின் முதல் நாளையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி திருமண கோலத்தில் பாமா ருக்மணியுடன் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது கோவில் யானை செங்கமலம் வெண்சாமரத்தை தும்பிக்கையில் ஏந்தி ராஜகோபால சுவாமிக்கு வீசி, வணங்கியவாறு 3 முறை சுற்றி வந்தது. தொடர்ந்து, பன்னிரு ஆழ்வார்களும் இசை வாத்தியங்கள் முழங்க தனி நடையுடன் ராஜகோபால சுவாமி முன் தோன்றினர்.
வழக்கமாக பூர்வாங்க பூஜையின் போது பட்டாச்சாரியர்கள் தான் உற்சவர்களுக்கு சாமரம் வீசி வணங்குவர். ஆனால், கோவில் யானை சுவாமிக்கு சாமரம் வீசியது அங்கு திரண்டிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 10-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
அன்றைய தினம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மோட்டார் சைக்கிளிலில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
- வேன் டிரைவரை கைது செய்த போலீசார் வேனை பறிமுதல் செய்துள்ளனர்.
பேரளம்:
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கடகக்குடி, ஆட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினோத் (வயது 30), பசுபதி (28), இளையரசன் (26).
இவர்கள் 3 பேரும் கூலிதொழிலாளர்கள். இந்நிலையில் நேற்று 3 பேரும் வேலைக்கு சென்று விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். அவர்கள் பேரளத்திலிருந்து பூந்தோட்டம் நோக்கி திருவாரூர் - மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
பேரளம் அருகே இஞ்சிகுடி கடைத்தெருவில் என்ற இடத்தில் சென்றபோது சிவகங்கையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளிலில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த அசோக்பாபு என்பவரை கைது செய்து வேனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மத்திய அரசு சர்பாசி சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
- விவசாயிகள் சொத்துக்கள் அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் திருச்சியில் நடத்தப்படும் கண்காட்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். விவசாயிகள் சொத்துக்கள் அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது. மத்திய அரசு சர்பாசி சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டத்தை கொண்டு வரவேண்டும். இதனை வலியுறுத்தி கடந்த 26-ம் தேதி முதல் பஞ்சாப் மாநிலம் கண்ணுரி பார்டரில் ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் ஜெகசித் சிங் டல்லேபாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஃபெஞ்சல் புயலானது இன்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது.
- 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த ஃபெஞ்சல் புயலானது இன்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. அப்போது 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் இயங்கினல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எச்சரித்துள்ளார்.
முன்னதாக, சென்னை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உட்பட 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் புயலாக மாறியது.
- புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.
திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது.
விழாவையொட்டி குடியரசு தலைவர் நாளை (சனிக்கிழமை) ஊட்டியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதாக இருந்தார்.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் புயலாக மாறியது.
இது, புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.
இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ஜனாதிபதிக்கு தமிழக அரசு சார்பிலும், மத்திய பல்கலைக்கழகம் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
- திருவாரூரில் நாளை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
விழாவையொட்டி நாளை (சனிக்கிழமை) அவர் ஊட்டியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு வருகை தருகிறார். இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் 3 ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு தமிழக அரசு சார்பிலும், மத்திய பல்கலைக்கழகம் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பல்கலைக்கழகத்திற்கு மதியம் 1 மணிக்கு வரும் ஜனாதிபதி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்துகிறார்.
பின்னர், மாலை 3 மணிக்கு அங்குள்ள அரங்கில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழா முடிந்ததும் ஜனாதிபதி அங்கிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் செல்கிறார். பின்னர், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
விழா ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக ஏ.டி.ஜி.பி. சஞ்சய் குமார் தலைமையில் சுமார் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை மண்டல டி.ஐ.ஜி. மற்றும் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உள்ளிட்ட 10 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
அதுமட்டுமின்றி, 15 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 40 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 65 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 400 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், திருவாரூரில் நாளை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
- திருமணம் முடிந்ததும் காதல் தம்பதி ஆட்டூர் தோப்பு தெருவில் உள்ள உதய பிரகாஷின் உறவினர் வீட்டில் குடியேறினர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள ஆட்டூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் சமரச பாண்டி. இவரது மகன் உதய பிரகாஷ் (வயது 23). இவர் திருத்துறைப்பூண்டியில் வேலை பார்த்து வந்தார். இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம், நீடூர் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ஹேமா (21). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதற்கு ஹேமா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, எதிர்பை மீறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்திரம் அடைந்த ஹேமாவின் குடும்பத்தினர் இது தொடர்பாக வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்ததும் காதல் தம்பதி ஆட்டூர் தோப்பு தெருவில் உள்ள உதய பிரகாஷின் உறவினர் வீட்டில் குடியேறினர். மாதங்களும் கடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை திடீரென உதய பிரகாஷ் எழுந்து பார்த்துள்ளார். அப்போது ஹேமா வீட்டின் அறையில் தூக்கிட்டு பிணமான கிடந்துள்ளார். காதல் மனைவி தூக்கில் கிடந்ததை பார்த்ததும் உதய பிரகாஷ் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
மனைவியின் சடலத்தின் அருகில் கிடந்து அழுது துடித்துள்ளார். இருந்தாலும், ஹேமாவின் இழப்பு உதய பிரகாஷின் மனதில் பேரிடியாக விழுந்திருந்தது. இதனால் மிகவும் மனமுடைந்த உதய பிரகாஷ் வீட்டின் எதிரே உள்ள புளியமரத்தில் தூக்கு மாட்டி இறந்துள்ளார்.
அவ்வழியாக வந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் செய்து கொண்ட 3 மாதத்தில் காதல் தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அடுத்த நாள் காலையில் சசிகலாவுக்கு 4 வருட சிறை-ன்னு வருது.
- முதலமைச்சரா இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா பண்ண சொல்லி கையெழுத்து வாங்குனது டிடிவி தினகரன்.
திருவாரூர்:
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலின் பேரில் அம்மா முதலமைச்சர் ஆனார். அவருக்கு பிறகு யார் முதலமைச்சர் என்று பார்க்கும் போது சசிகலா அடுத்த முதலமைச்சர் ஆவதற்கு எல்லாம் திட்டம் போட்டுன்னு இருக்காங்க. நாங்க எல்லாம் எம்.எல்.ஏ.வாக இருக்குறோம். நாளை மறுநாள் முதலமைச்சர் ஆகப்போவதாக சசிகலா சொல்றாங்க. அடுத்த நாள் காலையில் சசிகலாவுக்கு 4 வருட சிறை-ன்னு வருது.
நீங்க பாருங்க.. கடவுள் யாருக்கு அருள் தருகிறார் என்று. அவங்களாவே திட்டம் போட்டு அவங்களாவே முதலமைச்சர் ஆகப்போறேன்னாங்க. அப்போ நாங்க என்னப்பா மறுபடியும் இந்த குடும்பத்துக்கிட்ட மாட்டிக்கிட்டுறது கட்சின்னு பேசிக்கிட்டு இருந்தோம். தெய்வம் இருக்கிறது அன்றைக்கு காட்டியது.
அப்போ முதலமைச்சரா இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா பண்ண சொல்லி கையெழுத்து வாங்குனது டிடிவி தினகரன். நாங்க எல்லாம் உட்கார்ந்துன்னு இருக்கோம். அப்போ பன்னீர்செல்வம் சொல்றாரு, பதவி கொடுத்தவர்களுக்கு துரோகம் செய்து இருக்கீங்க.. உங்களுக்கு தண்டனை உண்டுன்னு சொல்றார். இவருக்கு துரோகம் பண்ணது தினகரன். இவர பதவியில் இருந்து எடுத்தது அந்த குடும்பம். நமக்கு என்ன இருக்கிறது துரோகம். ஒண்ணுமே கிடையாது.
அம்மாவே அமைச்சர்களின் ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தார். அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதை அப்போதே நிருபித்தார். அந்த விதி அவர் முதலமைச்சர் ஆவதற்கு என்பது அப்போது தான் தெரிந்தது. அத்தனை பேர் ஒருமனதாக அவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தோம். 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார். அவரது ஆட்சியில் விலைவாசி ஏறவில்லை. சட்டம் ஒழுங்கு கெடவில்லை. சூப்பர் ஆட்சி ... ஆட்சியை கவிழ்க்க தினகரன் சதி செய்தார்.
இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
- வீட்டை தனது பெயருக்கு பதிவு செய்து தரும்படி முறையிட்டுள்ளார்.
- வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பக்கிரி ராஜா அருகில் இருந்த உலக்கையை எடுத்து தேவியை தாக்கியுள்ளார்.
பேரளம்:
திருவாரூர் மாவட்டம், பேரளம் அடுத்துள்ள கீரனூர் அக்கரைதோப்பு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி தேவி (வயது 45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமமூர்த்தி இறந்து விட்டார்.
இதனால் தேவி, அவரது மகள்கள் மற்றும் ராமமூர்த்தியின் தகப்பனார் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவரது மூத்த மகளுக்கு திருமணமாகி வெளியூர் சென்றுள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பக்கிரி ராஜா (35) என்பவருக்கு வீட்டை விற்பதாக கூறி தேவி பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் வீட்டை காலி செய்யும்படி பக்கிரி ராஜா தேவியிடம் கேட்டுள்ளார்.
அதோடு மட்டுமின்றி, பக்கிரி ராஜா நேற்று நள்ளிரவு தேவி வீட்டிற்கு சென்று, வீட்டை தனது பெயருக்கு பதிவு செய்து தரும்படி முறையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பக்கிரி ராஜா அருகில் இருந்த உலக்கையை எடுத்து தேவியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தேவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டில் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து பேரளம் போலீசில் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பக்கிரி ராஜாவை கைது செய்தனர்.
நள்ளிரவு பெண்ணை உலக்கையால் தலையில் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுமார் 8 லட்சம் பேர் திரண்டிருந்தனர்.
- மாநாடு முடிந்து 14 நாட்கள் ஆன நிலையில், இதுவரை அவர் வீடு திரும்பவில்லை.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த மாதம் 27ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுமார் 8 லட்சம் பேர் திரண்டிருந்தனர்.
இந்நிலையில், விஜய்யின் தீவிர ரசிகரான திருவாரூர் மாவட்டம் கரையான்காடு பகுதியை சேர்ந்த மேகநாதன் என்கிற இளைஞர் த.வெ.ம மாநாட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.
ஆனால், மாநாடு முடிந்து 14 நாட்கள் ஆன நிலையில், இதுவரை அவர் வீடு திரும்பவில்லை.
மேகநாதனுடன் 34 பேர் மாநாட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், மேகநாதன் மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அச்சத்தில் உள்ள மேகநாதனின் தந்தை புஷ்பநாதன், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அப்போது, மகனை கண்டுபிடித்து தருமாறு தந்தை போலீசாரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
- தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- திருவாரூர் பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் இன்றி இருண்ட நிலை நிலவியது.
திருவாரூர்:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நேற்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
திருவாரூர் பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் இன்றி இருண்ட நிலை நிலவியது. அவ்வப்போது தூறல் மழை பெய்து வந்தது. நேற்று மாலை முதல் அங்கு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் திருவாரூரில் பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆண்டுதோறும் இந்த தர்காவில் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சேக்தாவூது ஆண்டவரின் தர்கா உள்ளது.
ஆண்டுதோறும் இந்த தர்காவில் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.
14 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்கள் உள்ளிட்ட மாற்று மதத்தினரும் பங்கேற்பார்கள்.
இதையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிச.7ஆம் தேதி அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.