என் மலர்
திருவண்ணாமலை
- அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்
- 15 கிலோமீட்டர் பயண தூரம் குறையும்
வேங்கிக்கால்:
கலசபாக்கம் ஒன்றியத்தில் செய்யாற்றின் குறுக்கே பூண்டி பழங்கோவில், கீழ்பெத்தாரை பூவாம்பட்டு, கீழ் தாமரைப்பாக்கம், தென் மகா தேவமங்கலம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ.55 கோடியே 88 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று பூண்டி ஊராட் சியில் நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்ட கலெக்டர் முரு கேஷ் தலைமை தாங்கினார். கலசபாக்கம் எம்.எல்.ஏ., பெ.சு.தி. சரவணன் முன்னிலை வகித்து பேசினார். கண்காணிப்பு பொறியாளர் தேவராஜ் வரவேற்றார். முதன்மை பொறியாளர் முருகேஷ் திட்ட விளக்க உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, 3 உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:- கலசபாக்கம் தொகுதியில் தற்போது இந்த 3 உயர் மட்ட மேம்பாலங்களும் தொடர்ந்து என்னிடம் இத்தொகுதி எம். எல்.ஏ. சரவணன் வைத்த கோரிக்கையின் பேரில் கட்டப்படுகின்றன.
இந்த 3 மேம்பாலங்கள் கட்டப்படுவதால் 27-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் அடைவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு சுமார் 15 கிலோமீட்டர் பயண தூரம் குறையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், தொழிலாளர் நல மேம்பாட்டு பிரிவு அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்திவேல்மாறன், சப்- கலெக்டர் தனலட்சுமி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்டப் பொறியாளர் ராஜ்குமார், ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், அன்பரசி ராஜசேகரன், சுந்தரபாண்டியன், துணைத் தலைவர் ரமணன், நகரமன்ற துணை தலைவர் சு.ராஜாங்கம், ஒப்பந்ததா ரர்கள் துரை வெங்கட், பிரியா விஜயரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
- விலக்கு கேட்டு கோரிக்கை மனு
செய்யாறு:
செய்யாறு தாலுகா கிரஷர்-குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு நிலம் தர சம்மதம் தெரிவித்து அறிக்கை அளித்துள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
செய்யாறு சிப்காட் பகுதி 3-க்கு நிலம் எடுப்பு பணி நடைபெற்று கொண்டிருக்கும் இந்த தருவாயில் எங்கள் சங்க உறுப்பினர்கள் சில பட்டா நிலங்களை கிரையம் பெற்று அரசு விதிகளுக்கு உட்பட்டு அரசு அனுமதியுடன் தொழில் செய்து வருகின்றனர்.
குறிப்பாக அத்தி மற்றும் வடஆளபிறந்தான் கிராமங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான மலையில் குவாரி குத்தகை விடப்பட்டு தொழில் நடைபெற்று வருகிறது.
அதன் அருகாமையில் சில பட்டா நிலங்களை கிரையம் பெற்று குவாரி குத்தகை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளோம். மேலும் அந்த இடம் சிப்காட் பகுதி என அறிவிப்பு வந்தபடியால் அந்த பணி நிலுவையில் உள்ளது. நாங்களும் விலக்கு கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
அரசு விதிகளுக்கு உட்பட்டு விலக்கு அளிக்கும் பட்சத்தில் நாங்கள் அதை முழுமையாக வரவேற்கின்றோம். அல்லது அரசு எடுக்கும் சட்ட திட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் சிப்காட் நில எடுப்பு போரட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கலெக்டர் தகவல்
- விவரங்களை தெரிந்துகொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திரு விழாவை தரிசிக்க வரும் பக் தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்யப்ப ட்டுள்ளது.
தீபத்திருவிழா பற்றிய விவரங்களை பக்தர்கள் தெரிந்துகொள்ள வசதி யாக, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும், அருணா சலேஸ்வரர் கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கியூ ஆர் கோடு பயன்படுத்தி பக்தர்கள் நன் கொடைகளை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
மகாதீபத்திற்கு பிரார்த்தனை நெய்கு டத்திற்கான காணிக்கை கட்டணத்தை, கோவில் ராஜகோபுரம் (கிழக்கு கோபுரம்) அரு கில் உள்ள திட்டிவாயில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் திருமஞ்சன கோபுரம் (தெற்குகோபுரம்) நுழைவு வாயில் ஆகிய இடங்களில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
வருகிற 26-ந் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீப ஏற் றும் நிகழ்வுகளை அகன்ற திரைகளில் பக்தர்கள் கண்டு தரிசிக்க வசதியாக, கோவில் உட்பிரகாரத்தில் 4 இடங்க ளிலும், கோபுரங்களின் வெளியே மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள் உள்ளிட்ட 20 இடங்களிலும் அகன்ற திரைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்மூலம், விழா நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
கோவிலில் நடைபெ றும் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களை, https://youtube. com/@arunachaleswarar என்ற இனைய தளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்ப டுகிறது. இந்த வசதிகளை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
- ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 26-ந்தேதி காலை பரணி தீபம் மாலை 6 மணிக்கு மாலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
தீபத் திருவிழாவையொட்டி தொடர்ந்து இரவு மாட வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தீபத் திருவிழாவில் 7-வது நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம் நடந்தது. காலை 6.45 மணிக்கு விநாயகர் தேர் புறப்பாடு நடைபெற்றது. ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து விநாயகர் தேர் நிலைக்கு வந்த பிறகு முருகர் தேரோட்டம் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு மேல் அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து பெண்களால் இழுக்கப்படும் அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.
பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
ரத வீதிகளில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் பக்தர்கள் பரவசத்துடன் காணப்பட்டனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள்.
அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தேரோட்ட த்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தது. விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.
- வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தி நடந்தது
- கோஷங்களை எழுப்பினர்
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மேல்மா சிப்காட் போராட்ட த்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கோபி (எ) கேசவன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் செல்வராஜ், முன்னோடி விவசாயிகள் கோதண்டராமன், பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மாநில துணை செயலாளர் ஏழுமலை, திருவண்ணா மலை மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு, செய்யாறு மேல்மா சிப்காட் பணியினை நிறுத்த வேண்டும் எனவும், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதில் கீழ்பென்னாத்தூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
- காட்டு சிவா சித்தரின் பக்தர்கள் வலியுறுத்தல்
- கலெக்டரிடம் மனு அளித்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் திரு அண்ணா மலையை ஒட்டியுள்ள வனப் பகுதியில் 'காட்டு சிவா' என்ற சித்தர் பல ஆண்டுகளுக்கு முன்பு தவம் செய்து வந்துள்ளார். அங்கு இவர் தவம் செய்த குகை உள்ளது.
சித்து விளையாட்டில் சிறந்து விளங்கி யவர் என கூறப்படுகிறது. இவர், முக்தி அடைந்த பிறகு, திருவண்ணா மலை அருகே உள்ள ஆணாய் பிறந்தான் கிராமத்தில் 'பிரம்மஸ்ரீ காட்டு சிவா ஆசிரமம்' செயல்படுகிறது.
இந்த ஆசிரமம் உள்ள இடத்தை, பக்தர் ஒருவர் தானமாக வழங்கியதாக கூறப்படுகிறது.
ஆசிரமத்தில் காட்டு சிவா சித்தரின் வழித்தோன்றல்கள் என கூறப்படும் 13 பேரின் ஜீவசமாதிகள் உள்ளன. ஜீவசமாதியில் மாதந்தோறும், கிருத்திகை நட்சத்திரத்தில் காட்டு சிவா சித்தரின் பக்தர்கள் தியானம் செய்துவந்தனர். மேலும், உலக நன்மைக்காக பிரார்த்தனையும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், வருவாய் மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கடந்த 17-ந் தேதி நள்ளிரவு, 'பொக்லைன்' இயந்திரம் மூலம் ஜீவசமாதிகள் இடித்து சமப்படுத்தப்பட்டன.
மேலும், குடிநீர் பயன்பாட்டில் இருந்த மிகப் பெரிய கிணறு இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக வாகன ங்களை நிறுத்தி வைப்பத ற்காக, 13 பேரின் ஜீவசமா திகள் இடிக்கப்பட்டுள்ளன.
இதற்கு, ஆசிரம நிர்வாகிகள் மற்றும் ஆன்மிக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பிரம்மஸ்ரீ காட்டு சிவா ஆசிரம நிர்வாகிகள், கலெக்டர் முருகேஷிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சுவாமி சிவானந்த பரமஹம்சர் வழிவந்த பிரம்மஸ்ரீ காட்டு சிவா ஆசிரமத்தில், அவர் வழிவந்த 13 பேரின் ஜீவசமாதிகள் மற்றும் கிணறு ஆகியவற்றை 'பொக் லைன்' எந்திரம் மூலம் இடிக்கப் பட்டுள்ளன. நாங்கள் காலம், காலமாக வழிபாடு செய்து வந்த ஜீவசமாதிகளை திடீரென இரவோடு, இரவாக இடித் துள்ளனர்.
இதனால், எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இங்கிருந்த 20-க்கும் மேற்பட்ட மரங்களையும் வெட்டி அகற்றி உள்ளனர். இந்த செயலை செய்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஜீவசமாதிகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். மூடப்பட்ட கிணற்றையும் தூர்வாரி கொடுக்க வேண்டும்".
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போராட்டத்தின் போது அனுமதி இன்றி ஊர்வலமாக செல்ல முயன்ற 147 விவசாயிகள் மீது செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- ஜாமினில் வெளிவந்த விவசாயிகள் வேலூர் கோர்ட்டில் 15 நாட்களுக்கு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேல்மா கூட்ரோட்டில் கடந்த சில மாதங்களாக கீற்றுக்கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது அனுமதி இன்றி ஊர்வலமாக செல்ல முயன்ற 147 விவசாயிகள் மீது செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் கடந்த 4-ம் தேதி அதிகாலை மேல்மா சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகி உள்பட 20 பேரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பா.முருகேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 பேரை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி விவசாயிகள் 7 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை தமிழக அரசு ரத்து செய்தது.
இந்த நிலையில் 14 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி இன்று காலை 14 பேரும் வேலூர் ஜெயிலில் இருந்து வெளியே வந்தனர்.
அவர்கள் அனைவரும் வேலூர் கோர்ட்டில் 15 நாட்களுக்கு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த விவசாயிகள் கூறியதாவது:-
நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். வன்முறையில் ஈடுபட மாட்டோம். ஜெயிலில் உள்ள மற்ற விவசாயிகளுக்கும் ஜாமின் வழங்க வேண்டும். அரசு சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
செய்யாறில் நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் செய்யாறு அடுத்த மேல்மா கூட்டு சாலையில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் திரளான கட்சியினர், தமிழ்நாடு உழவர் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இன்றுகாலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் வீதிஉலா.
- தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. 6-ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் வீதிஉலாவும் நடந்தது. இன்று இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி தேர் மற்றும் வெள்ளி இந்திர விமானங்களில் மாட வீதிகளில் சாமி வீதி உலா நடக்கிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 7-ம் நாள் உற்சவமான தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.
பஞ்ச மூர்த்திகள் திருத்தேர்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர். காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தனுசு லக்கினத்தில் முழு முதல் கடவுளான விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.
விநாயகர் தேர் மாட வீதிகளில் வலம் வந்து நிலைக்கு வந்த பின் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் தேர் மாட வீதிகளில் வலம் வரும். நண்பகலில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் தேரோட்டம் நடக்கிறது.
தேர் மாடவீதிகளில் அசைந்தாடி வருவதைக் காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பெரிய தேர் நிலைக்கு வந்த பின்னர் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் அம்மன் தேர் மாட வீதிகளில் வலம் வரும். அம்மன் தேர் உடன் சண்டிகேஸ்வரர் தேரும் மாட வீதிகளில் வலம் வரும்.
இன்றும், நாளையும் திருவண்ணாமலையில் தேரோட்டம் நடைபெறுவதால் தேரோட்டத்தை காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை சார்பில் தேர் திருவிழாவிற்காக அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூய்மையாக காட்சி தருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- 2 பேரை தாக்கி கும்பல் தப்பி ஓட்டம்
- கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டது
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி வடிவுக்கரசி. மகன் வேல்முருகன் உள்ளிட்ட 5 பேர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி நேற்று இரவு தூங்கி கொண்டிருந்தனர்.
கொள்ளை கும்பல்
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து ரமேஷ் வீட்டினுள் கொள்ளையடிக்க புகுந்தனர்.
வீட்டில் சத்தம் கேட்ட வேல்முருகன் எழுந்து பார்த்தார். அப்போது பீரோவின் அருகே மர்ம கும்பல் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கும்பலை மடக்கி பிடிக்க வேல்முருகன் முயன்றார். மர்ம கும்பல் கட்டையால் வேல்முருகனின் தலையில் அடித்தனர்.
இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டார். அப்போது எதிர் வீட்டை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் முகமூடி கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். அவரையும் மர்மகும்பல் தாக்கி விட்டு தப்பிசென்றனர்.
இதில் ரங்கநாதனுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த வேல்முருகன் மற்றும் ரங்கநாதனை அருகே இருந்தவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். திருவண்ணாமலை கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் சென்று யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பொதுமக்களை தாக்கி விட்டு தப்பி சென்ற கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
- அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி இவரது மனைவி செல்வி (வயது 45). வீராசாமி அடிக்கடி குடிபோதையில் வீட்டில் வந்து தகராறு செய்தார்.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி செல்வி தனது வீட்டில் பேன் கொக்கியில் புடவையில் தனக்குத்தானே தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதனை கண்ட பிரகாஷ், செல்வியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வி உயிரிழந்தார்.
இது சம்பந்தமாக பிரகாஷ் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தரணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அனைத்து மகளிர் போலீசில் புகார்
- திருவண்ணாமலை காப்பகத்தில் ஒப்படைத்தனர்
செய்யாறு:
பெரணமல்லூர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் சிறுமியின் தாயார் அவருக்கு திருமணம் செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி 1098 என்ற உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
பின்ன ஊர் நல அலுவலர் பரிமளா என்பவர் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரித்தார். மாணவிக்கு திருமணம் ஏற்பாடுகள் நடக்க இருப்பது தெரிய வந்ததால் அவரை ஊர் நல அலுவலர் பரிமளா மீட்டு திருவண்ணாமலை காப்பகத்தில் ஒப்படைத்தார்.
இது குறித்து மாணவி செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலம் தாழ்த்தி வந்த வாலிபர்
- அனைத்து மகளிர் போலீசில் புகார்
செய்யாறு:
வெம்பாக்கத்தைச் சேர்ந்த 28 வயதுடைய வாலிபர். சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 5 வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபர் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வாலிபரிடம் வற்புறுத்தினார்.
அதற்கு வாலிபர் சிறிது நாட்கள் கழித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி காலம் தாழ்த்தி வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் இது குறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.